தமிழ் நாயகிகளின் பப்பி லவ் அனுபவங்கள்!

தமிழ் நாயகிகளின் பப்பி லவ் அனுபவங்கள்!

ஜெயிப்பதையும் தோற்பதையும் கடந்து, ஒவ்வொருவர் நினைவிலும் நீங்கா இடம் காதலுக்கு இருக்கிறது.  அது மிகவும் உணர்வு பூர்வமானதாக, சிறுபிள்ளைத்தனமாக, நகைச்சுவையானதாக கூட இருக்கலாம். அப்படித் தங்கள் வாழ்வில் வந்துபோன, மறக்கமுடியாத காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர் தமிழ் சினிமாவின் க்யூட் ஹீரோயின்ஸ்…

 அந்த நூறு ரோஜாக்கள்:  நந்திதா


என் வாழ்க்கையில வந்த காதல் எல்லாம் ரொம்பவே சீரியஸா தான் இருந்துச்சு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஏழாம் வகுப்பில் படிச்ச பையன் கவரிங் மோதிரம் வாங்கிட்டு வந்து, ’எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு’னு சொன்னான். சின்ன வயசுன்றதால, ‘அது ஏதோ பெரிய தப்பு’னு நெனச்சு, வீட்டுல போய் அழுதுகிட்டே அம்மா அப்பாகிட்ட சொன்னேன். அப்புறம் அவங்க ஸ்கூலுக்கு வந்து ஹெச்எம் கிட்ட சொன்னதும், அவனுக்கு அடி விழுந்துச்சு. இப்ப நெனச்சு பார்த்தா செம காமெடியா இருக்கு.

காலேஜ் படிக்கும்போது இதே காதலர் தினத்திற்கு, நான் மஞ்சள் கலர் ட்ரெஸ் போட்டுட்டு போனேன். க்ளாஸுக்கு உள்ளே நுழையும்போதே என் பென்ச்ல ரோஸ், கிப்ட், கவிதை எழுதுன லெட்டர்னு இருந்துச்சு. நான் பாத்துட்டு, இதெல்லாமே ஒரே பையன் தான் பண்ணிருப்பானு நெனச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, வேறவேற பசங்க வச்சுருக்காங்கனு. அதையும் மறக்க முடியாது. இன்னொரு வாலன்டைன் டேல ஒரு பையன் 100 ரோஜா பூக்கள் கொடுத்தான். அத எடுத்துட்டு வந்து ரோஸ் மில்க் பண்ணிக்கிட்டேன். சீரியஸா சொல்லணும்னா, ஒவ்வொரு வருஷமும் சீரியஸான, உண்மையான லவ் ப்ரொபோஸல் வரும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

 அம்மா காலில் விழுந்த லவ் லெட்டர்: மஹிமா நம்பியார்


எங்க அம்மா ஸ்கூல் டீச்சர். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது, என்கூட படிச்ச பையன் ஒரு பேப்பர்ல தப்புப் தப்பா, ‘ஐ லவ் யூ’னு எழுதி என்மேல தூக்கி போட, அது எங்க அம்மா கால்ல வந்து விழுந்துருச்சு. அத பாத்துட்டு, அந்த பையன அம்மா கண்டிச்சாங்க. அதுதான் என் லைஃப்ல மறக்க முடியாத, பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ப்ரொபோஸல்.

‘வில் யூ மேர்ரி மீ’  – ஜனனி ஐயர்

எனக்கு ஏழு வயசு இருக்குறப்போ, ‘வில் யூ மேர்ரி மீ’னு ஒரு பையன் கேட்டான். அது ஹெச்எம் வரைக்கும் போய், பாவம் பையனை ஒரு நாள் முழுக்க க்ளாஸுக்கு வெளிய நிக்க வச்சுட்டாங்க. அதுக்கு பிறகு, ஒருத்தர் என்ன விரும்பினப்போ, நான் வேலைல பிஸியா இருந்தேன். அப்புறம் எனக்கு அவர்மேல காதல் வந்தப்போ, அவர் இன்னொருத்தங்களுக்கு சொந்தமாகிட்டாரு. அது ரெண்டு பேருக்குமே கொஞ்சம் வருத்தமானதா இருந்துச்சு.

சின்னப்பசங்க விளையாட்டு:  அதிதி பாலன்

எனக்கு ரொம்ப சீரியஸா எந்த ப்ரொபோஸலும் வந்ததில்ல. ஸ்கூல் படிக்கும்போது அப்பப்போ லவ் லெட்டர், கவிதைகள், ரோஜாக்கள் என வரும். அதெல்லாம் சின்னப்பசங்க விளையாட்டு. அந்த வயசோட சரி. வேலைல இப்பதான் பிஸியாகி இருக்கேன். ஸோ, இப்போ யாராவது சீரியஸா லவ் பண்ணாலும், வெரி சாரி,  நோ டைம்!

காதலை விட பெரிய சந்தோஷம்: திவ்யதர்ஷினி

இந்த நாள் மாதிரி எந்த காதலர் தினத்துக்கும் நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததில்ல.  பொதுவாவே என்னை பார்த்தா எல்லோருக்கும் கொஞ்சம் பயமா இருக்கும். அதனால ஈஸியா யாரும் ப்ரொப்போஸ் பண்ணிட மாட்டாங்க.  காதலைவிட பெரிய சந்தோஷமா இப்ப நான் கொண்டாடுறது, கௌதம் மேனன் டைரக்‌ஷன்ல இன்னிக்கு ரிலீசான ‘உலவிரைவு’ ஆல்பம் சாங் தான்.  அதுக்கு மக்கள் காட்டுன அன்புதான் எனக்கான பெரிய ப்ரொப்போஸலா நினைக்குறேன். லவ் யூ ஆல்!

– பி. கமலா தவநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g