டிரெண்டிங்: ரஜினி, கமல் அணிந்து அசத்திய பிளெய்ட் பேன்ட்!

டிரெண்டிங்: ரஜினி, கமல் அணிந்து அசத்திய பிளெய்ட் பேன்ட்!

தற்போது ஆண்களின் டிரெண்ட், கிளாசியான தோற்றமளிக்கும் பிளெய்ட் பேன்ட் தான். கடந்த ஆண்டு நடைபெற்ற நியூயார்க் ஃபேஷன் ஷோவில், இந்த பிளெய்ட் ஸ்டைல் இடம் பிடித்திருந்தது. ஆக, அப்போதே முடிவாகிவிட்டது இந்த ஆண்டிற்கான டிரெண்ட் இதுதான் என்று…

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் : அர்ச்சனா (டிசைனர், ஸ்டைலிஸ்ட்)

ஆண்களுக்கான ஃபேஷன் டிரெண்ட் என்பது, எப்போதுமே கச்சிதமும் நேர்த்தியும் கலந்தது. ஏனென்றால் பெண்களைப் போல் அல்லாமல் ஆண்களுக்கு  வெரைட்டிக் குறைவு.  அதனால் வெகு விரைவாகவே  அவர்களின் பழைய ஸ்டைல் திரும்ப வந்துவிடும். அப்படித்தான் 1970களில் பிரபலமாக இருந்த பிளெய்ட் ஸ்டைல், இப்போது ராம்ப் ஷோக்களில் மிளிர்கிறது.

இந்த பிளெய்ட் ஸ்டைலுக்கும் ஒரு வரலாறு உண்டு.

இதை செக்டு (checked) பேன்ட் என்றும் அழைக்கின்றனர்.  1970களில், இந்த ஸ்டைல் தான் ஹைலைட்டாக இருந்தது. மேல் பகுதி இறுக்கமாகவும் அடிப்பகுதி அகலமாகவும் இருக்கும் பெல் பாட்டம் ஸ்டைலை, அப்போது வெளிவந்த பல திரைப்படங்களில் கதாநாயகர்கள் அணிவதை பார்க்க முடியும்.  அப்போது அதுவே ஃபேஷன் என்பதால், பிரபலங்களும்  கல்லூரி மாணவர்களும் அதிகமாக அணிந்தனர். இந்த ஸ்டைல், முதன்முதலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில்தான் டிசைன் செய்யப்பட்டு பிரபலமாகியது. அதேபோல் பிளெய்ட் பேன்ட்-க்கும், ஒரு முன்னோடி உண்டு. அது டார்ட்டன்.   சிக்கலான கட்டங்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டிருக்கும்.  டார்ட்டன் டிசைனைப் பார்த்துதான், அமெரிக்கா பிளெய்ட் டிசைனை வடிவமைத்தது. பிளெய்ட் பேன்ட் துல்லிய கட்டங்களாக, தனியாகத் தெரியும். எனவே வாங்கும்போது குழப்பம் வேண்டாம்.

டார்டன் vs பிளெய்ட்

மாற்றம் என்பது அன்றாட விஷயமாக இருக்கும்  ஃபேஷன் துறையில், காலப்போக்கில் பிளெய்ட் ஸ்டைல் மறந்து போனது. பின்னாளில் அந்த பேப்ரிக்கைப் பயன்படுத்தி கேஷுவல் மற்றும் செமி கேஷுவல் தோற்றமளிக்கும், செக்டு சட்டைகள் அதிகம் புழக்கத்தில் வரத் தொடங்கின. இதற்கான டிமாண்ட் இப்போதும் குறையவில்லை. இது முற்றிலும் cool guy தோற்றத்தை அளிப்பதால், இந்த டிசைன் செம ஹிட் அடித்துவிட்டது.

பழைய டிரெண்டை தூசி தட்டி எடுப்பதுதான் ஃபேஷனில் புரட்சி. எனவே மீண்டும் இந்த பிளெய்ட் பேன்ட் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் அதே பெல்ஸ்  மாடலில் இல்லாமல், ஃபியூஷன் ஸ்டைலில்! அதாவது கால்களை இறுக்கிப் பிடிக்கும் டைட் ஃபிட் மற்றும் பென்சில் ஃபிட் டிசைனில், கச்சிதமான ஃபார்மல் லுக்கில் மெருகேறி திரும்பி இருக்கிறது.

பேன்ட் மட்டுமின்றி, பிளேஸர்களும் தற்போது பிளெய்ட் டிசைனில் வருகின்றன.  அலுவலக மீட்டிங் போன்ற தருணங்களுக்கு, ஃபார்மல் வேராக இதை அணிந்து சென்றால் கச்சிதமாக இருக்கும்.

அர்ச்சனா (டிசைனர்,ஸ்டைலிஸ்ட்)

”இந்த பிளெய்ட் பேன்ட்டின் சிறப்பு அம்சம், எப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். இதன் கட்டங்கள்தான் ஆடையின் சிறப்பு! பார்த்தவுடன் கண்களை முதலில் ஈர்க்கும் விஷயமாக, இந்த கட்டங்கள் இருப்பதால், ஒருவரின் தோற்றம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதைத் தாண்டி ஆடையின் வடிவமைப்பு மீதுதான் கவனம் செல்லும்.  அதிகம் யோசிக்காமல் ஏதேனும் ஸ்டைலில் சிக்கென தோன்ற வேண்டுமெனில்,  பிளெய்ட் பேன்ட் தான் பெஸ்ட் சாய்ஸ். மேலும், இதை எங்கும், எப்போதும் எந்த ஆடையுடனும் மிக்ஸ் அண்ட் மேட்ச்சும்  செய்து கொள்ளலாம்” என்கிறார் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.

கேஷுவல் தோற்றத்திற்கு… 

கேஷுவல் உடையணிய விரும்புவோருக்கு ஏற்ற வகையிலும், தற்போது பிளெய்ட் பேன்ட் கிடைக்கிறது. அவர்கள் சிம்பிளான டி-ஷர்ட் அணிந்து, அதற்கு மேச்சான பிளெய்ட் பேன்ட் அணிவது பொருத்தமாக இருக்கும். கூடுதலாக ஸ்னீக்கர்ஸ் மற்றும் பெரிய ஸ்ட்ராப் வாட்ச் அணிந்தால், பக்கா cool guy  தோற்றம் வந்துவிடும்.

பார்மல் தோற்றத்திற்கு…ஃபார்மலாக உடையணியவும் சரியான தேர்வு, பிளெய்ட் பேன்ட் தான். குறிப்பாக உயர் பதவியில் இருப்பவர்கள், கச்சிதமாக தைக்கப்பட்ட பிளெய்ட் சூட் அணிந்து அலுவலகத்திற்கு சென்றால், சக ஊழியர்கள் அசந்து போவார்கள்.  நீங்கள் ஃபேஷனில் எந்த அளவிற்கு அப்டேட்டாக இருக்கிறீர்கள் என இது உணர்த்தும். பேன்ட் நிறத்திலேயே, தற்போது ஸ்டைலிஷான பிளேசர்கள் வந்துவிட்டன. எனவே பேன்ட்டுக்கு ஏற்ற பிளேசரை தேர்வு செய்து கொள்ளுங்கள். ரிஸ்ட் வாட்ச், மற்றும் லெதர் ஸ்லிங் பேக், ஃபார்மல் ஷூ அணிந்து செல்லுங்கள். நீங்கள்தான் அலுவலகத்தில் டாக் ஆப் த டே ஆகிவிடுவீர்கள்.

செமி பார்மல் தோற்றத்திற்கு…செமி ஃபார்மல் உடைதான் பெரும்பாலும் ஆண்கள் விரும்பும் ஸ்டைல். இந்த ஸ்டைலிற்கு அதிகம் மெனக்கெடவும் தேவையில்லை என்பதே இதன் ஸ்பெஷல். பிளெய்ன் சட்டையுடன் பிளெய்ட் பேன்ட் அணிந்து மேட்ச் செய்யுங்கள். டிசைன் உள்ள ஷர்ட்கள் இதற்கு பொருந்தாது.  கூடவே ஆக்சஸரியாக, கூலர், ரிஸ்ட் வாட்ச், லோஃபர் ஷூ அணிந்து அசத்துங்கள்.

இந்த பிளெய்ட் பேன்ட்கள், ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் கிடைக்கின்றன.  யோசிக்காமல் முந்துங்கள்..!

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g