விரைவில் ரூ.2,000க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

விரைவில் ரூ.2,000க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில் உள்ள முக்கிய அம்சங்கள் அனைத்தையும் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள், விரைவில் 2,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் போன்களுக்கு ஏற்ற பிரத்யேகமான ஆண்ட்ராய்டு இயங்குதளமாக ‘ஆண்ட்ராய்டு கோ’ எனும் பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு கோ கொண்ட போன்கள், 2018ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், கூகுள் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, மலிவு விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஜனவரி இறுதியில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு ஓரியோ பெறும் முதல் நிறுவனமாக, மைக்ரோமேக்ஸ் இருக்கும்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து லாவா, இன்டெக்ஸ், கார்பன் போன்ற நிறுவனங்கள் விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷன் முதல் ஸ்மார்ட்போனின் விலை,, ரூ..2,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம். ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தில் கூகுள் கோ, கூகுள் மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ, யூடியூப் கோ, கூகுள் அசிஸ்டன்ட் கோ, பைல்ஸ் கோ உள்ளிட்ட செயலிகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g