4ஜி வசதி கொண்ட ’நோக்கியா 3310’

4ஜி வசதி கொண்ட ’நோக்கியா 3310’

செல்ஃபோன் உலகில் புரட்சியை ஏற்படுத்திய நோக்கியாவின் கிளாசிக் மாடலான ‘நோக்கியா 3310’ 4 ஜி உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது.

நோக்கியா காதலர்களுக்கு மறக்க முடியாத போன் என்றால், அது நோக்கியா 3310 தான். அதனாலேயே, கடந்த ஆண்டு அதே மாடலை ஆண்ட்ராய்டு இயங்குதளம், 3ஜி உள்ளிட்ட அம்சங்களுடன் புதிதாக மீண்டும் அறிமுகப்படுத்தியது, நோக்கியா போன்கள் தயாரிப்பு நிறுவனமான எச்.எம்.டி. குளோபல்.

குறைந்த போன் மெமரி, 4ஜி அழைப்பு இல்லாதது அந்த மாடலில் குறையாக சொல்லப்பட்ட நிலையில், செயல்திறன் அதிகமான புராசஸர் மற்றும் அதிக உள்ளீட்டு சேமிப்பு, 4ஜி வசதி போன்ற அம்சங்களுடன், 2.4 அங்குல திரை, 2 எம்.பி., பிரைமரி கேமரா, எல்.இ.டி., பிளாஷ் லைட், புளூடூத், எப்எம் ரேடியோ, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டியூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘புதிய நோக்கியா 3310’ போன் வெளிவரும் என்று தொழில்நுட்ப வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய 3310 பீச்சர் போன், வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g