பார்ட்டிக்கேற்ற கண்களும் உதடுகளும் வேண்டுமா?

பார்ட்டிக்கேற்ற கண்களும் உதடுகளும் வேண்டுமா?

பார்ட்டி என்றாலே, நாம் செய்து கொள்ளும் மேக் அப் தான் ஹைலைட்.  அல்ட்ரா மாடர்ன் உடை அணியும் போது, அதற்கேற்ற மேக் அப் இல்லையென்றால், நீங்கள் டல் ஆகத்தான் தெரிவீர்கள். பார்ட்டிகளில் உங்கள் தோற்றம் கவனிக்கப்பட வேண்டுமெனில், அசத்தலான மேக் அப் செய்ய தகுதியானப் பொருட்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இவை எல்லாம் இருக்கிறதா என உங்கள் மேக் அப் பவுச்சை செக் பண்ணுங்கள்…

முகத்தில்

எப்போதும் ஹைலைட்டாக தெரியும் விஷயங்கள், கண்களும் உதடும் தான். இதில் ஏதாவது ஒன்றை மிகைப்படுத்திக் காட்டினாலே, நீங்கள் தான் கூட்டத்தின் அட்ராக்‌ஷன் ஆவீர்கள். (விரும்பினால் இரண்டையும் மிகைப்படுத்தலாம்).

பார்ட்டிக்கு ஏற்ற ஸ்மோக்கி ஐ மேக்கப்:

 • புருவங்களை அடர் நிறத்தில் காஜல் பென்சில் கொண்டு பட்டைத் தீட்டுங்கள். இதற்கு மாக் நிறுவனத்தின் ‘மாக் புரோ ஸ்கல்ப்ட்’ (M.A.C Brow Sculpt) சிறந்தது. இதில் two in one ஆக, கீழ்ப் பகுதியில் புருவ ரோமங்களை சீர் செய்வதற்கான பிரஷும் உள்ளது.
விலை ரூ. 1,650/-
 • ஐ மேக்கப்பிற்கு ஏற்ற பிரஷ்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஐ மேக்கப்பிற்கு கலர்பார் நிறுவனத்தின் மேக்கப் பிரஷ் சிறந்தது. இதில் ‘விங்க் பர்ஃபெக்ட் ஐ மேக்கப் கிட்  (Wink Perfect Eye Makeup Kit)’ என்கிற பெயரில், முழுமையான ஐ மேக்கப் பிரஷ் செட்டாக கிடைக்கிறது.
விலை ரூ 500/-
 • கண்களில் ஐ பிரைமரை சீராக தடவ வேண்டும். ‘NYX ஐ பிரைமர் ஷாடோ’ சீராக ஒட்டிக் கொள்ள சிறந்ததாக இருக்கிறது. எனவே NYX Professional Makeup Eye Shadow Base பயன்படுத்தி கண்களின் இமை மற்றும் மேல் பகுதியில் சீராக தடவுங்கள்.
விலை ரூ. 725/-
 • ஸ்மோக்கியான தோற்றத்திற்கு அடர் மிகு நிறங்களான கருப்பு, பிரவுன் ஆகிய நிறங்களைத் தேர்வு செய்யுங்கள். தேர்வு செய்த நிறத்தை இமைகளின் மேல் பகுதியை சுற்றிலும் லேசாக தடவ வேண்டும். அடுத்ததாக சாம்பல் நிற கிளிட்டர் கொண்ட ஷாடோவைப் பயன்படுத்தி கண்களின் இமைகளில் தடவுங்கள்.
 • லாக்மி நிறுவனம் ஸ்மோக்கி ஐ மேக்கப்பிற்கென, பிரத்யேகமாக ஷாடோக்களைக் கொண்ட கிட்டை அளிக்கிறது. அதன் பெயர் Lakme 9 To 5 Eye Quartet Eyeshadow. இதைப் பயன்படுத்தி உங்கள் கண்களை மெருகேற்றுங்கள்.
விலை ரூ. 600/-
 • ‘லிக்விட் ஐ லைனர்’ பயன்படுத்தி கேட் லைன் ஸ்ட்ரோக் போன்று கண்களின் முனைகளில் வரைந்து கொள்ள வேண்டும். பின் அதை காஜல் கொண்டு ஹைலைட் செய்ய வேண்டும்.
 • Maybelline New York Eye Studio Lasting Drama Gel Eyeliner – Black நிறம் மங்காமல் அதிக நேரம் கலையாமல் இருக்க உதவுகிறது. எனவே இதைப் பயன்படுத்தி ஸ்ட்ரோக் வரையுங்கள்.
விலை ரூ. 525/-
 • கீழ் பகுதியில் க்ரீமி காஜல் கொண்டு ஸ்ட்ரோக் செய்யுங்கள் பின்பு லேசாக கீழே திட்டுக்கள் தெரிவது போல டச் அப் செய்யுங்கள். இதற்கு லாக்மி நிறுவனத்தின், ஐ கானிக் காஜல் எடுப்பாக இருக்கும்.
 • இமைகளின் மேல் பகுதியில் பயன்படுத்திய அதே ஷாடோவை, கீழ்ப் பகுதியிலும் லேசாக தடவுங்கள். நீங்கள் விரும்பிய ஸ்மோக்கி ஐ மேக் அப்பை  அணிந்து அசத்துங்கள்.
விலை ரூ. 180/-

 

பார்ட்டிக்கு ஏற்ற பளிச் டார்க் லிப் மேக்கப்

 • உதடுகளின் ஓரங்களை லிப் பென்சில் வைத்து ஹைலைட் செய்யுங்கள். லிப் மேக்கப்பிற்கு மாக் நிறுவனம் சிறந்தது. மாக் லிப் பென்சில் அடர்த்தியாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கும். இது பல ஷேடுகளைக் கொண்டுள்ளது. .
விலை ரூ. 1,450/-
 • அடர் சிவப்பு, ரத்த சிவப்பு, பிரவுன் நிறம் போன்ற அடர் நிறங்கள், உதடுகளை ஹைலைட் செய்ய சிறந்தவை. எனவே இதில் ஏதேனும் ஒரு நிறம் கொண்ட லிக்விட் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யுங்கள். அதை சீராக உதடுகளில் தடவுங்கள்
 • லிப்ஸ்லிட்டிக்கில் மேபலின் நிறுவனம் பல வெரைட்டிகளை கொண்டுள்ளது. இதில் Maybelline New York Color Sensational Velvet Matte Lipstick, அதிக நேரம் கலையாமல் இருக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தமான லிக்விட் ஷேடை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள்.
 • இந்த வகை லிப் மேக்கப் பார்ட்டிகளுக்கு மட்டுமன்றி, ஒரு கிராண்டான மாலை நேர நிகழ்ச்சிகளுக்கும் எடுப்பாக இருக்கும்.

விலை ரூ. 490/-

கண்களும், உதடுகளும் கவர்ந்திழுக்க, பார்ட்டியில் ஒரு மின்னலாக வலம் வாருங்கள்!

 

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g