சூழல்காப்பு உறுதிமொழி கேட்கும் நாடு

சூழல்காப்பு உறுதிமொழி கேட்கும் நாடு

தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணியரால், சுற்றுச்சூழலும் உயிரினங்களும் பாதிக்கபப்டுவதை தடுக்க, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் ‘சூழல்காப்பு  உறுதிமொழி’ எடுக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவித்திருக்கிறது, பலாவு தீவு.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் அமைந்திருக்கும் அழகிய சின்னஞ்சிறு தீவு, பலாவு. பளிங்கு போன்ற கடற்பரப்பு, வண்ணமயமான பவளப்பாறைத் திட்டுகள், அளப்பறியா கடலுயிர்கள்… இப்படி எல்லாமும் சேர்ந்தது, பலாவு தீவு.  டைவிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு உலகின் சிறந்த இடங்களுள் ஒன்றாகவும், அமைதியும் அழகும் கலந்த சுற்றுலா தலமாகவும் பலாவு விளங்குகிறது.

அண்மைக்காலமாக பலாவு தீவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  குறிப்பாக சீன பயணியரின் வருகை, தீவின் உள்கட்டமைப்பையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்த தொடங்கியிருக்கிறது. செல்பி எடுப்பதற்காக ஆமைகளை பிடிப்பது, மென்மையான பவளத் திட்டுகள் மீது நடப்பது, கடற்கரைகளில் குப்பைகளை போடுவது என தீவை மாசுபடுத்துகின்றனர் வெளிநாட்டு சுற்றுலா பயணியர். இதைத் தடுக்க, ‘விருந்தினராக இந்த தீவுக்கு வந்துள்ள நான், இந்த அழகிய தீவை மாசுபடுத்தாமல் பாதுகாப்பேன், விலங்குகளிடம் அன்பாக நடந்துகொள்வேன், பொறுப்புடன் சுற்றிப்பார்ப்பேன்…” என்று பலாவுவுக்குள் வந்தவுடன், சுற்றுலா பயணியர் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது, பலாவு அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g