குளிர்மலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

குளிர்மலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

புதிய நம்பிக்கைகளுடன் வரப்போகும் புத்தாண்டை, கடற்கரை பீச் பார்ட்டிகளிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும், டான்ஸ் பார்ட்டிகளுடன் தான் வரவேற்க வேண்டுமா? இயற்கையின் அரவணைப்பில், குளிர்மலைகளில் கேம்ப் ஃபயருக்கு நடுவே, இன்னிசையுடன் கொண்டாடினால், அது அந்த ஆண்டின் மறக்க முடியாத அனுபவமாக நினைவில் நிற்கும்.

அண்டர் தி ஸ்டார்ஸ் – கோத்தகிரி

அழகிய கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு துள்ளலான நடைபயணம், அருவிக் குளியல், குகை டிரெக்கிங், கேம்ப் பயருடன் இன்னிசை நிகழ்ச்சிகள், நட்சத்திரங்கள் பார்த்தல் என திரில்லான சாகச செயல்களுடன், புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்திருக்கிறது, ஹிக்கி ஜர்னிஸ் நிறுவனம். மேலும் படகர் மக்களின் பாரம்பரிய சமையலை ருசிக்கவும் வாய்ப்பு உண்டு. குளிர்காலத்தின் தெளிந்த வானில் வானில் மின்னிடும் நட்சத்திரங்களை பார்த்து ரசித்தபடி, அன்புக்குரியவர்களுக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்ல சரியான இடம் இது.

இடம்              : கோத்தகிரி, ஊட்டி
தங்குமிடம் : டென்ட்
தேதி               : டிசம்பர் 31 காலை 9:00 மணி முதல், ஜனவரி 1 2018, மாலை 4:30 வரை.
கட்டணம்    : பெரியவர்களுக்கு ரூ. 3,000/- ; சிறுவர்களுக்கு (5-13 வயது) ரூ. 1,500/-

நியூ இயர்’ஸ் ஈவ்-2018, மெகா கேம்பிங்

கொடைக்கானல் மலையில், தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரங்களில் ஒன்றான, 2100 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாள் மலையில், யூகலிப்டஸ் மரங்களுக்கிடையில், மேகங்கள் தொட்டுச் செல்லும் ரம்மியமான சூழலில், கேம்ப் அமைத்து புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்துள்ளது, ஜிப்ஸி ஸ்போர்ட் ஈவன்ட் நிறுவனம். இயற்கையின் அரவணைப்பில், உங்களின் அன்பானவர்களுடன் புத்தாண்டை வரவேற்க இதைவிட சிறந்த இடம் கிடைக்காது.

தங்குமிடம்     : டெண்ட்
தேதி                  : டிசம்பர் 31, மாலை 3:00 மணி முதல், ஜனவரி 1, 2018, மதியம் 12:00 வரை

கட்டணம்       : தம்பதியினருக்கு ரூ. 3,499/- ; சிறுவர்களுக்கு (5-15 வயது) ரூ. 1,249/-

முன்பதிவு செய்ய: https://www.eventshigh.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g