புதிய அனுபவத்துக்கு ’பிராகி’ வயர்லெஸ் இயர்போன்கள்!

புதிய அனுபவத்துக்கு ’பிராகி’ வயர்லெஸ் இயர்போன்கள்!


வயர்லெஸ் இயர்போன்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, ஜெர்மனையை சேர்ந்த, பிராகி, இந்நிறுவனம், ‘தி டேஷ் புரோ’ மற்றும் ‘தி ஹெட்போன்’ என, இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என உங்கள் சாதனம் எதுவாக இருந்தாலும், ஒரே ‘டச்’சில் கனெக்ட் ஆகிவிடும், தி டேஷ் புரோ. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் இசையை வழங்கக் கூடிய இதில் 4 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்பு வசதி உண்டு. இதிலுள்ள பயோமெட்ரிக் சென்ஸார்கள், இதைப் பயன்படுத்துவோரின் நடையை, நீச்சல் குளத்தின் நீள அகலங்களை, உடற்பயிற்சி செயல்பாடுகளையெல்லாம் கண்காணித்து தகவல் அளிக்கும். மேலும் இந்த இயர்போன்களிலுள்ள, ‘நவுல்ஸ் (Knowles)’ பேலன்ஸ் ஆர்மெச்சுர் தொழில்நுட்பமானது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

‘தி ஹெட்போன்’ இயர்போனிலும் நவுல்ஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. 4.0 புளூடூத் வசதியும் உண்டு. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரம் இசையை வழங்கும். பிராகி இயங்குதளத்தில் இயங்கும் இவ்விரு இயர்போன்களும், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியை பெற்றிருக்கின்றன. இயர்போன்களை ஆப் செய்யாமல், வெளிப்புற சத்தத்திற்கு ஏற்ப இசையின் ஒலியளவை மாற்றிக்கொள்ளும் வசதியும் இவற்றில் உள்ளது. ஹெட்போன் இயர்பட்ஸ்களில் வழங்கப்பட்டுள்ள பட்டன்களை கொண்டு, இசையை கட்டுப்படுத்தவும், அதன் சத்தத்தை மாற்றவும் முடியும்.

இவற்றை பிராகி நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் ‘தி ஹெட்போன் ஸோன்’, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளங்களில் வாங்கலாம். இந்திய சந்தையில் டேஷ் புரோ இயர்போர்ன் ரூ.27,999/-* விலையிலும், தி ஹெட்போன் ரூ.12,999/-* என்கிற விலையிலும் கிடைக்கும்.

* தோராயமான விலை.

செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g