ஹீரோயின்களின் செல்லப்பெயர்கள் தெரியுமா?

ஹீரோயின்களின் செல்லப்பெயர்கள் தெரியுமா?

சிவாஜி ராவ் என்றால் ரஜினி, டயானா மரியம் குரியன் என்றால் நயன்தாரா என பிரபலங்களின் நிஜப்பெயர்கள் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அவர்களின் செல்லப் பெயர்கள்? நமக்கு விருப்பமான பிரபலங்களுக்கு, நெருக்கமானவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர்கள் இதுதான்!

ஓவியா

சினிமாவுக்காக இவர் வைத்துக் கொண்ட பெயர், ஓவியா. பிக் பாஸ் தந்த புகழால்  ஆர்மியே ஓவியாவுக்கு உருவாகிவிட்டது. இவரின் நிஜப்பெயரான ஹெலன், இப்போது செல்லப் பெயராக மாறிவிட்டது. நெருங்கிய வட்டாரத்தினர் மட்டும், இவரை லட்டு என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யா

பள்ளிப் பருவத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு பிடித்தமான டிவி நிகழ்ச்சி ‘மிஸ்டர் பீன்’. பள்ளியில் எப்போதும் பீன் புராணம்தானாம். அதனால் நண்பர்கள் வைத்த பெயர், மிஸ் பீன். வீட்டில் அடாவடி சேட்டைக்காரியாக இருப்பாராம் ஸ்ரீதிவ்யா. அதனால் அவரின் அம்மா ஆசையாக ‘சின்னி கொடுக்கு’ என்று கூப்பிடுகிறார்.

நயன்தாரா

எல்லோரிடமும் எளிதில் பழகிவிடுபவர் நயன். நயன்தாராவுக்கு பிடித்தமானவர்கள் இவரை ‘நயன்’, ‘நயன்ஸ்’, ‘தாரா’ என்று அழைக்கிறார்கள்.

அனுஷ்கா

அனுஷ்காவின் நிஜப்பெயர், மகாலட்சுமி. பெற்றோர்கள் இவருக்கு வைத்த செல்லப் பெயர் ஸ்வீட்டி. இதுநாள் வரை நிஜப் பெயரில் இவரை வீட்டில் யாருமே அழைத்ததில்லையாம். யோகா டீச்சர் முதல் சினிமா வரை, ஸ்வீட்டி அனைவருக்கும் பிடித்தமான பெயராகிவிட்டது.

கரீனா கபூர்

கரீனா கபூர், அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான படம் ‘Kambakht Ishq’. இப்படத்தின் பெபோ பாடல் செம வைரல். பின்னாளில் ‘பெபோ’ என்ற பெயரே கரீனாவுக்கு செல்லப் பெயராக மாறிவிட்டது.

நந்திதா

எப்போதுமே நான்-ஸ்டாப்பாக நண்பர்களுடன் பேசுபவர், நந்திதா. ஆனால் பேசும் பேச்சில் எதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும். ஆல்வேஸ் எனர்ஜெட்டிக்காக இருப்பதால், நண்பர்கள் இவரை குட் டே ( good day) என்று அழைக்கின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங்

ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகவும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தவர், ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்தாலும், தெலுங்கில் தான் நிறைய படங்கள் குவிகிறது.  என்றுமே தெலுங்கு திரையுலக மக்களுடன் தான் நட்பில் இருக்கிறார்.  அவர்கள் ரகுலை ‘டார்லிங்’ என்று அழைக்கிறார்கள்.

நிக்கி கல்ராணி

இவரின் ஒரிஜினல் பெயர் நிகிதா. இதுவே நல்லா இருக்கே என்று கேட்கலாம். நியூமராலஜி படி பெயரை நிக்கி என்று மாற்றியிருக்கிறார்கள். நிக், நிக்கி, நிக்கு என்று ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப இவரை அழைப்பார்களாம். வீட்டில் சேட்டை ராணி இவர். அதனால்  அப்பா வைத்த பெயர் நாட்டி.

சிருஷ்டி டாங்கே

‘புத்தம் புது காலை, பொன்னிற வேளை’ என்று ஒரே பாட்டில் ரசிகர்களை மயக்கியவர். இவருக்கு இரண்டு செல்லப் பெயர்கள் இருக்கின்றன. நெருங்கிய வட்டம் இவரை ‘குக்கி’ என்றும், நண்பர்கள் டீனா என்றும் கூப்பிகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்காவின் பிரபலமான செல்லப் பெயர், பிக்கி சாப்ஸ். ப்ளப் மாஸ்டர் படப்பிடிப்பின் போது அபிஷேக் பச்சன் இவரை செல்லமாக அழைத்த பெயர் இது. அதுவே பின்னாளில் பிரியங்காவின் செல்லப்பெயராகிவிட்டது. மீமி, மித்து என்றுதான் இன்றுவரையிலும் வீட்டில் கூப்பிடுகிறார்கள்.

– நீலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g