இனி குழந்தைகளும் ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்தலாம்!

இனி குழந்தைகளும் ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்தலாம்!

பேஸ்புக் வலைதளத்தின் பிரத்யேக செயலியான மெசஞ்சரை, இனி 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளும் பயன்படுத்தலாம். இதற்காக ‘மெசஞ்சர் கிட்ஸ்’ எனப்படும் செயலியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் உறுப்பினராக குறைந்தபட்சம் 13 வயது நிறைந்திருக்க வேண்டும். ஆனாலும், பெற்றோரின் ஃபேஸ்புக் கணக்கு மூலமாகவோ அல்லது போலி கணக்குகள் தொடங்கியோ, சிறுவர்களும் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு தெரியும். பேஸ்புக் மெசஞ்சர் செயலி வழியாக, தங்கள் நண்பர்களுடன் சாட் செய்வது, வீடியோ கால் செய்வது, போட்டோக்கள் பகிர்ந்துகொள்வது போன்றவற்றை செய்கின்றனர். இதனால் சமூக விரோதிகளிடம் சிக்கவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவும், தவறான விளம்பரங்களை காணவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகள் பயன்படுத்தத்தக்க ‘மெசஞ்சர் கிட்ஸ்’ என்ற செயலியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்கள் நிறைந்திருப்பதால், இதன் மூலம் குழந்தைகள் தாங்கள் நினைத்தபடி நண்பர்களை சேர்க்கலாம், அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கவும் முடியாது. குழந்தைகளுக்கேற்ற படங்கள், ஜிப் இமேஜ்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பெற்றோர்கள் பயன்படுத்தும் பேஸ்புக்கில், எக்ஸ்டென்ஷன் மூலம் இணைத்துக் கொள்ளலாம். முதல்கட்டமாக அமெரிக்காவில் மட்டும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இது அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது ஆண்ட்ராய்டு போன்களுக்கும், உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g