இது என் ஸ்டைல் – நிவேதா பெத்துராஜ் ஃபேஷன் சீக்ரெட்ஸ்!

இது என் ஸ்டைல் – நிவேதா பெத்துராஜ் ஃபேஷன் சீக்ரெட்ஸ்!

மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த மாடர்ன் பியூட்டி நிவேதா. மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர். மாடலிங்கில் இருந்ததால், பேஷனில் அத்தனை அப்டேட்டாக இருக்கிறார். அவருடைய ஸ்டைல் குறித்து ‘இ1 லைப்’ உடன் பகிர்ந்து கொண்டார்.

  • இந்தியாவில் இருந்தால் சல்வார் கமீஸ்தான் என்னுடைய பேவரைட். வண்டி ஓட்டும்போதும், நடக்கும்போது அதுதான் கம்ஃபோர்ட் ஆக இருக்கிறது. அப்புறம், லாங் ஸ்கர்ட் அணிந்துகொள்ளப் பிடிக்கும். அதுவும், இண்டியன் டிரெடிஷனல் முறையில் வடிவமைக்கப்பட்ட லாங் ஸ்கர்ட்டுகள் என்றால் எக்கச்சக்க இஷ்டம். இந்த ஆடைகளைப் பொறுத்தவரை, நிறைய கலர்கள் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், துபாய்க்குச் சென்றால் ஜீன்ஸ், டி-ஷர்ட்தான் அணிவேன். அதில் நிறைய கலர்கள் இருந்தால் பிடிக்காது. பிளாக், ஒயிட், கிரே ஆகிய மூன்று கலர்களில் மட்டும்தான் அணிவேன். டாப் ஷாப், பெர்ஷ்கா, ஸாரா ஆகிய பிராண்ட்களைத்தான் பெரும்பாலும் விரும்பி அணிவேன்.
  • பொதுவாக, ஹெவி காஸ்ட்யூம் மற்றும் ஆக்சஸரீஸ் பிடிக்காது. எப்போதும் லைட்டாகத்தான் அணிவேன். படத்திற்கு சென்றால் யோகா லெகின்ஸ், லூஸ் டி-ஷர்ட், சைடு பேக் அணிந்து செல்வேன். பெரிய ரெஸ்டரன்ட் என்றால், எலிகென்ட் லுக் தரும் ஆடைகளை அணிவேன். சாதாரணமான ரெஸ்டரன்ட் என்றால் ஜீன்ஸ், குர்தா அணிந்து செல்வேன்.

  • ஹீல்ஸ் அணிவது பிடிக்காது. காரணம், மாடலிங் செய்யும்போது ஹீல்ஸ் அணிந்து அணிந்து போரடித்துவிட்டது. பெரும்பாலும் ஸ்டீவ் மேடன் பிராண்ட் லோபர்ஸ் அணிவேன். சில சமயங்களில் ரீபொக் பிராண்ட் ஷூ அணிவேன்.
  • ஜிமிக்கி அணிவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். 6 விதமான டிசைன்களில் ஜிமிக்கி வைத்திருக்கிறேன். செயின் அணிவது பிடிக்காது. வளையல்களுக்குப் பதிலாக பிரேஸ்லெட் என் சாய்ஸ். கார்ட்டியர் பிராண்ட் தங்க வளையலும் மோதிரமும்தான் என்னுடைய ஆல்டைம் பேவரைட்.
  • சிறிய வயதில் இருந்தே ரேடோ பிராண்ட் வாட்ச்தான் பிடிக்கும். அதை அணிந்து கொள்ளும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை. ரேடோ பிராண்டில் 7 வாட்ச்கள் வைத்திருக்கிறேன்.
  • அதிகம் மேக்கப் போட பிடிக்காது. அனஸ்டாசியா பிஎச் பிராண்ட் ஐப்ரோவும், சேம்பர் பிராண்ட் காஜலும் போட்டுக் கொள்வேன். த பால்ம் பிராண்ட் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறேன். கண்ணுக்கு ஹெவியாக மேக்கப் போடுவதால், லிப்ஸ்டிக் நியூடு கலரைத்தான் பயன்படுத்துகிறேன். முகத்துக்கு ரிம்மல் பிராண்ட் பவுண்டேஷனும், த பால்ம் பிராண்ட் பிளஷ்ஷும் போட்டுக் கொள்வேன்.  ஷாட் கட் டிரெஸ் அணியும்போது பீச் ஷெல்களால் ஆன கொலுசு அணிவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g