விராட் கோலி – அனுஷ்கா ஷர்மாவை போல கல்யாணம் பண்ண ஆசையா?

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மாவை போல கல்யாணம் பண்ண ஆசையா?

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா இத்தாலியில் மணம் முடித்தார். சமந்தா – நாக சைதன்யா கோவாவில் திருமணம் செய்தனர். உள்ளூரில் மண்டபம் கிடைக்காததால் இவர்கள் பறந்து போய் தொலைதூரக் கல்யாணம் செய்யவில்லை. திருமணத் துறையில் ஒரு டிரெண்டாக டெஸ்டினேஷன் வெடிங் என அழைக்கப்படும் தொலைதூரக் கல்யாணம் களை கட்டுகிறது.

ஒற்றைத்தன்மையான வாழ்க்கையில் சலிப்புற்ற இன்றைய இளைஞர்கள், திருமணத்தையும் வித்தியாசமாக நடத்த விரும்புகின்றனர். அந்த வரிசையில் இன்று பலரும் விரும்புவது டெஸ்டினேஷன் வெடிங் எனப்படும் திருமண முறை. ஒரு டூர் போகிற மாதிரி கூட்டமாகக் கிளம்பி ரம்மியமான இடத்தில் திருமணத்தை முடித்து திரும்புவதை இப்போதைய ஃபேஷன்!

பயணத்தை விரும்புபவர்களுக்கு டெஸ்டினேஷன் வெடிங் ரொம்பவே பிடித்துவிடும். ஒவ்வொரு டெஸ்டினேஷனுக்கும் விருந்தினர் எண்ணிக்கை, தங்கும் இடம், உணவு வகை என போன்ற தகவல்களை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது.  உலகம் முழுவதும் உள்ள சிறந்த முறையில் டெஸ்டினேஷன் வெடிங் செய்ய ஏற்ற இடங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறது e1 life.

சிம்லா – இந்தியா

ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா, டெஸ்டினேஷன் வெட்டிங் நடத்த சிறந்த இடம். பசுமையான பள்ளத்தாக்கு, பனியால் போர்த்தப்பட்ட மலை என்று குளிர்ச்சியான சூழலும், தட்ப வெப்பநிலையும் இருப்பதால், உலக ஜோடிகள் விரும்பும் இடமாக சிம்லாவை பெருமைப்பட வைத்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் திருமணத்தின் நினைவு, பசுமையாக இருக்கும் என்று சிம்லாவின் இயற்கை உத்தரவாதம் அளிக்கிறது.

பபோஸ் – சைப்ரஸ் தீவு

உலகின் பழமை மாறாத சைப்ரஸ் தீவு, மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாரம்பரிய முறையில் சர்ச் வெடிங் நடத்த வேண்டுமென்றால் சைப்ரஸ் தீவு சரியான தேர்வு. திருமணத்திற்கு பிறகு தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் அங்குள்ள கிராமங்கள், ரெஸ்டரன்ட், விடுதிகள் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கலாம். தீவின் வடக்கு பகுதியில் தொல்லியல் மியூசியமும், தெற்கு பகுதியில் அழகான கடற்கரைகளும் உள்ளன. டெஸ்டினேஷன் வெடிங் நடத்துபவர்கள் திருமணம் கடந்து மலைப் பகுதியில் பைக்கிங், வாட்டர் ஸ்போர்ட்ஸ், மற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் நேரத்தை இனிமையாக்கிக் கொள்கின்றனர்.

நியூசிலாந்து

சுற்றுலாவை போல், டெஸ்டினேஷன் கல்யாணமும் நியூசிலாந்து இல்லாமல் முழுமை பெறாது. தனது இயற்கை அழகால், இளம் தலைமுறையினரை கவரும் வகையில் எண்ணற்ற இடங்களை கொண்ட நியூசிலாந்து, திரைப்படம் எடுப்பதற்கும், திருமண நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் புகழ்பெற்ற இடம். பனியால் போர்த்தப்பட்ட மலைகளும், மிதவெப்ப மண்டல தீவுகளும் பார்ப்போரின் கண்களையும், மனதையும் எளிதில் கவர்ந்துவிடும். நியூசிலாந்தின் கிராமப்பகுதியில் உள்ள பழமையான திராட்சை தோட்டத்தில் திருமணம் நடத்தலாம் அல்லது மிகப்பெரிய விடுதிகளில் கூட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால் நியூசிலாந்தில் எங்கும் அழகு விரவிக்கிடக்கிறது.

ரிகாட், கியூபெக் – கனடா

கடற்கரையை ஒட்டியுள்ள அழகான கியூபெக் நகரத்தில் திருமணம் செய்து கொள்ள உலக ஜோடிகள் போட்டி போடுகின்றனர்.  குறைந்த செலவில் கிராமிய பாணியில், பனி சூழ்ந்த, கேம்ப் ஃபயர் பின்னணியில் என நாம் விரும்பும் வகையில் இடத்தை அமைத்து கொள்ளலாம். அதனால் உங்களின் திருமண வாழ்க்கையை கனடாவின் அழகான மலைப்பகுதி, கானுயிர் வனம், பறவைகள், பனிக்கட்டிகள், உறைந்த நீர்வீழ்ச்சி என்று இயற்கையின் அழகுடன் தொடங்கலாம்.

டப்ளின் – அயர்லாந்து

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளிங்கில் வரலாற்றுப் பின்னணி கொண்ட பல இடங்கள் உள்ளன. கின்னஸ் ஸ்டோர் ஹவுஸ், எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் வாழ்ந்த இடம் என அழகும் அர்த்தமும் நிறைந்த இடங்கள் டப்ளினில் நிறைய உண்டு. டப்ளின் வீதிகளில் நடந்து செல்லும் போதே ஒருவித பரவசத்தை உணர முடியும் எனும் போது, திருமணம் என்றால் இரட்டிப்பு சந்தோஷம் தான். மேலும் அயர்லாந்தின் அழகை பைக் ரைட் மூலமாக ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதனால் தான் பலரின் ஃபேவரிட் இடமாக இருக்கிறது டப்ளின்.

1 Comment

  1. வாவ்… செம்ம!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g