உலக அழகி மனுஷி சில்லாரின் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்

உலக அழகி மனுஷி சில்லாரின் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்

தற்போது ஃபேஷன் உலகில் அதிகம் பேசப்படும் நபர் ‘மிஸ் வேர்ல்ட் 2017’ பட்டம் வென்றிருக்கும், மனுஷி சில்லார் தான்.  இவருடைய உலக அழகிப் பட்ட வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணம், பிரியங்கா சோப்ராவிற்கு அடுத்து இருந்த 17 வருட வெற்றிடத்தை நிரப்பியிருப்பதுதான். மனுஷி சில்லார், தன்னை அந்த உலக மேடையில் நிலைநிறுத்த பல சவால்களைக் கடந்திருக்கிறார். அதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது அவரின் ஃபிட்னஸ் வழிமுறைகள்.

“ஃபிட்னஸ் என்பது ஆடம்பரம் அல்ல, அது நம் விருப்பம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் குறித்த தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார் மனுஷி. அவரின் விருப்பமான ஃபிட்னஸ் முறை , பிளான்க் (plank). பிளான்க் பயிற்சி எடுத்துக் கொள்வதால் உடலின் ஒவ்வொரு தசைகளும் செயல்பட்டு, உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைக்கிறது.

அதேபோல் எவ்வளவு வேலைகள் இருந்தாலும்,ஒரு நாள் கூட ஒர்க்-அவுட் செய்யாமல் மனுஷி இருந்ததே இல்லை. காலை, மதியம் அல்லது நள்ளிரவானாலும், நேரம் கிடைக்கும் போது அன்றைய நாளில் தவறாமல் ஒர்க்-அவுட் செய்கிறாராம். யோகா, பிலேட்ஸ், ஸ்குவாட்ஸ், டுவிஸ்ட்டிங், கிக் பாக்ஸிங் போன்ற உடற்பயிற்சிகளையும் தனது விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறார்.

உடற்பயிற்சியை அடுத்து சரியான உணவு முறையும் நமது உடலை பராமரிக்க அவசியம். எனவே மனுஷியின் உணவு முறையும் சுவாரஸ்யமானதுதான்.

பரபரப்பான நாள் என்றாலும், காலை உணவை ஸ்கிப் செய்வதில்லை. மூன்று வேளையும் சரியான உணவை எடுத்துக்கொண்டாலே போதுமானது. உணவை சிறிய அளவிலான தட்டில் உண்டால், குறைந்த உணவை உண்ணுவோம் என்பது மனுஷியின் நம்பிக்கை. உணவை தவிர்ப்பதால் நொறுக்குத் தீனிகளை உண்பதற்கான தூண்டுதல் உண்டாகும். நொறுக்குத் தீனிகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கிறது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார். சர்க்கரையைத் தவிருங்கள், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை தவிருங்கள் என்கிறார் மனுஷி.

மனுஷி சில்லாரின் தினசரி உணவுமுறை / உணவுப் பட்டியல்:

– காலையில் முதல் வேலையாக மனுஷி செய்வது, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து,  2 அல்லது 3 டம்ளர்கள் குடிப்பது.

– காலை உணவாக தயிரில் ஓட்ஸ் கலந்து சாப்பிடுவது, கோதுமை ஃபிளேக்ஸ், பழங்கள், முட்டையின் வெள்ளை கருவோடு வெண்ணை, கேரட்  மற்றும் இனிப்பு உருளைக் கிழங்கு ஆகியவற்றை கலந்து உண்கிறார்.

– பிரேக்பாஸ்ட் மற்றும் லஞ்சுக்கு இடைப்பட்ட நேரத்தில், பசி உணர்வு வந்தால் இளநீர் அல்லது பழங்களை உண்கிறார்.

– மதிய உணவாக, சோறு, சப்பாத்தி மற்றும் கிண்ணம் நிறைய காய்கறிகள், சிக்கன், பயறு வகைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறார்.

– மாலை நேர உணவாக உப்பில்லா நட்ஸ் வகைகள் மற்றும் பழங்கள் (அதிகமாக வாழைப்பழம் எடுத்துக் கொள்கிறார்)

– இரவு உணவாக கிரில்ட் அல்லது ரோஸ்ட் செய்யப்பட்ட சிக்கன் அல்லது மீன் மற்றும் காய்கறிகளின் (பிரக்கோலி,கேரட்,பீன்ஸ் மற்றும் காளான்) சாலட் உண்கிறார்.

            – ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g