ஜிம்முக்கு போகாமலே, ஃபிட்டா இருக்கலாம்!

ஜிம்முக்கு போகாமலே, ஃபிட்டா இருக்கலாம்!

ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று விரும்பும் நம்மில் பெரும்பாலானோர்,  கடினமான பயிற்சிகளைவிட, ஸ்மார்ட்டான ஃபிட்னெஸ் ஆக்டிவிடீஸ்களை செய்யவே விரும்புகிறோம். அப்படிபட்டவர்களுக்கு உதவுவதற்காகவே  ‘ஜிம் ஃப்ரீ ஃபிட்னெஸ்’ கான்செப்ட், தற்போது டிரெண்டாகி வருகிறது.

ஜிம்முக்கு போகாமல் உடலை பிட்டாக வைத்திருக்கும் வழிமுறை தான் ‘ஜிம் ப்ரீ ஃபிட்னெஸ்’ என்கிற கான்சப்ட். நாம் சுயமாக செய்யும் உடற்பயிற்சிய்யின்ல் பலன் மெதுவாக கிடைத்தாலும், நீண்டகாலத்துக்கு நிலைக்கும். உடற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று காசையும் கொடுத்து, வேக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து, அங்கு விற்கும் புரோட்டீன் பவுடர்களை வாங்கிக் குடித்து, விரைவாக உடலை ஃபிட் ஆக்கிக் கொண்டால், நன்றாக இருப்பதுபோல தோன்றினாலும், அதனால் சில கெடுவிளைவுகளும் எற்படலாம்.

உடற்பயிற்சிகளிளேயே மிகச் சிறந்தவையாக சொல்லப்படுபவை, நீச்சல் மற்றும் சைக்ளிங் பயிற்சிகள். நீருக்கும் நமக்குமான உறவு, பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தொடர்கிற ஒன்று. உடலுக்கு உள்ளே எப்படி நீரின் பயன்பாடு அதிகமோ, அதேபோல உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் நீரின் பங்கு அதிகம். அதுபோலவே சைக்ளிங் செய்வதும். அதிகாலையில் எழுந்து சைக்ளிங் செய்பவர்களுக்கு தெரியும், அதில் கிடைக்கும் சுகம், உடலில் ஆரோக்கியத்தை அந்த நொடியிலேயே உணருகிற உடற்பயிற்சி இது. மரங்கள் நிறைந்த பகுதிகளில், சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டு, சுறுசுறுப்பாக சைக்கிள் ஓட்டும் போது, உடலுக்குள்ளும் சரி, வெளியேயும் சரி, உடனடி மாற்றத்தை உணரலாம். இந்த இரண்டுக்கும் ஜிம் அவசியமே இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

‘ஃபிட்னெஸ் டேன்ஸ்’ என்கிற விஷயமும் ஜிம் ஃப்ரீ கான்சப்ட்தான் என்பதால், இதில் மக்கள் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்திருகின்றனர். உடலை வளைத்து நெளித்து ஆடும்போது, எக்ஸ்ட்ரா கொழுப்புகள் எல்லாம் கரைந்தே போய்விடும் என்கிறனர் ஃபிட்னெஸ் துறை சார்ந்தவர்கள். ஜிம் ஃப்ரீ ஃபிட்னெஸ் கான்சப்ட்டில், உண்ணும் உணவிலும், உறக்கத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சிரமம் பார்க்காமல் கொழுப்பு உணவுகள், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், குளிர்பானங்கள் என பலவற்றை தவிர்க்க வேண்டி இருக்கும். அளவாக சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிற சலுகைகள் இதில் உண்டு.

இன்று எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. எளிமையான ஃபிட்னெஸ் கேட்ஜெட்களும் ஏராளமாக புழக்கத்தில் இருக்கின்றன. இதுதவிர ஸ்மார்ட்போன்களில் வைத்து பயன்படுத்துவதற்கு ஏதுவான பிட்னஸ் அப்ளிகேஷன்களும் ஏராளம். இதையெல்லாம் வைத்து ஜிம் ஃப்ரீ கான்சப்ட் மூலமாக, அழகான உடல் அமைப்பையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெறலாம்.

-செ.கார்த்திகேயன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g