காலை உணவுக்கு ஹெல்தி ஸ்மூத்தி

காலை உணவுக்கு ஹெல்தி ஸ்மூத்தி

ஸ்மூத்தீஸ் அல்லது புரூட் ஷேக்ஸ், சரியான முறையில் தயாரிக்கப்படும் போது, அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாரத்தை, ஒரு கப் ருசியான பானமாக மாற்றிவிடுகின்றது. காலை பிரேக் ஃபாஸ்ட்டுக்கு  இதைவிட சுவையான, சத்தான உணவு வேறெதுவும் இல்லை.   

சமைக்க நேரமில்லை, சாப்பிட நேரமில்லை…இப்படி ஏதோ ஒரு காரணத்தால், நம்மில் பலர் காலை உணவைத் தவிர்க்கிறோம். இதனால்  காலையிலேயே நமது ஆற்றல் குறைந்து சோர்வடைந்து விடுகிறோம். ஆனால், அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. இந்த பிரச்னைக்கு சரியான தீர்வாக ஸ்மூத்தீஸ்களை பரிந்துரைக்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

புரோட்டீன், ஆரோக்கிய கொழுப்புகள், விட்டமின்கள், தாதுக்கள், குறிப்பாக நார்ச்சத்து என அனைத்து அவசியமான சத்துகளையும் ஸ்மூத்தி அளிக்கிறது. ஜூஸ் தயாரிப்பதில் இருந்து சற்று மாறுபட்டது ஸ்மூத்தி. சாறு எடுப்பதற்கு ஜூஸர் அல்லது மிக்சிக்கு பதிலாக, இதில் பிளெண்டர் பயன்படுத்தப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றை ஒன்றாகவோ தனியாகவோ, சில கூடுதல் உட்பொருட்களுடன் கலந்து பிளெண்டரில் இட்டு, பிளண்ட் செய்ய வேண்டும். பொதுவாக ஒரு பழம் அல்லது காயை ஜூஸ் செய்யும் போது, அதன் நார்ச்சத்து இழக்கப்படுகிறது. ஆனால் பிளெண்டரில் தயாராகும் ஸ்மூத்தியில், நார்ச்சத்து இழக்கப்படாமல் அப்படியே உடலுக்குள் உட்கிரகிக்கப்படுகிறது. மேலும், அனைத்து சத்துகளும் முழுவதுமாக கிடைக்கின்றன. இவை மெதுவாகவே ரத்தத்தில் கலப்பதால் சர்க்கரையின் அளவு உயராது. பசி உடனடியாக எடுக்காது. ஆனால், நீண்ட நேரத்துக்கு ஆற்றல் தரும். சில ஆரோக்கிய ஸ்மூத்திகள் உங்களுக்காக:

மாம்பழம்-இஞ்சி ஸ்மூத்தி

தேவையானவை:

செலரி                     -1 கப்
பிரெஷ் பார்ஸ்லி  –      1 கப்
தண்ணீர்             –     2 கப்
பிரெஷ் இஞ்சி     –       1 இன்ச் அளவுக்கு (தோல் சீவப்பட்டது)
மாம்பழம்           –      2 கப்
உரித்த எலுமிச்சை –      1

செலரி, பார்ஸ்லி, நீர் ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத் ஆகும்வரையில் பிளண்ட் செய்யவும் அதாவது அரைக்கவும். பின்னர் மற்ற பொருட்களை சேர்த்து பிளண்ட் செய்யவும். நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவையான ஸ்மூத்தி இது.


பசலைக்கீரை – ஆரஞ்சு ஸ்மூத்தி

தேவையானவை:

ஆரஞ்சு பழம்             –      1 (தோலுரித்து விதைகள் நீக்கப்பட்டது)
வாழைப்பழம்             –      1/2 (துண்டுகளாக்கப்பட்டது)
பசலை(ஸ்பினாச்) இலை —      1 கப், ரப்பாக நறுக்கப்பட்டது
தேங்காய் தண்ணீர் –      1/4 கப்
ஐஸ்                        –     1/2 கப்

எல்லா உட்பொருட்களையும் சேர்த்து ஸ்மூத் ஆகும்வரை பிளெண்ட் செய்யவும். தேவையெனில் கூடுதலாக தேங்காய் தண்ணீரை சேர்க்கலாம். உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும் ஸுமூத்தி இது.


வாழைப்பழம் – தேன் ஸ்மூத்தி

தேவையானவை:

வாழைப்பழம்   – 1 பெரியது (உறையவைக்கப்பட்ட, துண்டுகளாக்கப்பட்டது)
தேன்             – 1 டேபிள் ஸ்பூன்
மால்ட் பவுடர்   – 1  டேபிள் ஸ்பூன்
ஸ்கிம்ட் மில்க்  – 1½ கப்

வாழைப்பழம், தேன், மால்ட் பவுடர் மற்றும் பாலை ஒன்றாக சேர்த்து ஸ்மூத் ஆகும்வரை பிளெண்ட் செய்யவும். குளிர்ச்சியான தம்ளர்களில் சர்வ் செய்யவும். விட்டமின்கள் நிறைந்த குளிர்ச்சியான பானம் இது. கூடுதல் சுவைக்கு, ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை தூள் சேர்த்துக் கொள்ளவும். வாழைப்பழத்துக்கு பதிலாக ஒரு கப் மாம்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கொள்ளலாம்.


ஆப்பிள் – இஞ்சி ஸ்மூத்தி

தேவையானவை:

ஆப்பிள்          -1 (மேல்தோல்  விதை நீக்கப்பட்ட, துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி            – -½ இஞ்ச் (தோல் நீக்கப்பட்டது)
லைம் ஜூஸ்      – 2 லைம்
தேன்               – ¼ கப்
தண்ணீர்           – 1 கப்
ஐஸ்                – 1 கப்

அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஸ்மூத் ஆகும்வரையில் பிளெண்ட் செய்யவும். சுவையும் சத்துகளும் நிறைந்த ஸ்மூத்தி இது.


தர்பூசணி ஸ்மூத்தி

தேவையானவை

தர்பூசணி               –  2  கப் (கியூப்களாக) (விதைகள் நீக்கப்பட்டது)
யோகர்த்               –  1/3 கப்
நறுக்கப்பட்ட புதினா  –   2 டேபிள் ஸ்பூன்

அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஸ்மூத் ஆகும்வரையில் பிளெண்ட் செய்யவும். குளிர்ச்சியும் சத்துகளும் நிறைந்த ஸ்மூத்தி இது.


அவகாடோ ஸ்மூத்தி

தேவையானவை:

அவகாடோ பழம்                                –     1
வாழைப்பழம்                                   –     ½ கப்
கொழுப்பில்லாத பிளெயின் கிரீக் யோகர்த்  –      1 ½ கப்
ஆரஞ்சு                                           –   3
தேன்                                              –  ¼ கப்
ஐஸ்                                               –     3 கப்

அவகாடோ, வாழைப்பழம், யோகர்த், ஆரஞ்சு சாறு, தேன் மற்றும் ஐஸ் ஆகியவற்றை ஒன்றாக பிளெண்டரில் இட்டு ஸ்மூத் ஆகும்வரை அரைக்கவும்.  உடனே சர்வ் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g