மகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்!

மகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்!

எல்லாமே ஸ்மார்ட் ஆகிவரும் இக்காலத்தில், சமையலறைகளும் ஸ்மார்ட் ஆகி வருகின்றன. உள் அலங்காரத்தில் மட்டுமில்லாமல், சமயலைறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், பர்னிச்சர்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்திலுமே மக்கள் புதுமைகளையும் மாற்றங்களையும் விரும்புகின்றனர். தற்போது பிரபலமாக இருக்கும் சமையலறை டிரெண்ட்கள் பற்றி e1life.com விவரிக்கிறது.

“சமீபகாலமாக, சமையலறை விஷயங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டி இருக்கிறது. புது புது ஐடியாக்கள் வந்தவண்ணம் இருப்பதால், கூகுள் புகைப்படங்களை பார்த்து, அதிலிருப்பது போன்ற அமைப்பில் சமையலறையை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அதனால், சமையலறையை அமைக்கும் போது, மிகவும் கவனமாக அமைத்துக் கொடுக்கிறோம்”.

-அசோக், இன்டீரியர் டிசைனர், கோவை.

ட்ரை கலர் (Tri Color) அலங்காரம்!
சமையலறை சுவர்களை எப்போதும் ஒரே நிற பெயின்ட் கொண்டு அலங்கரிப்பதுதான் வழக்கம். ஆனால் இப்போது சுவர் முழுவதும் டைல்ஸ் ஒட்டுவதும், மூன்று நிறங்களில் அலங்கரிப்பதும் தான்  டிரெண்ட். அதுவும், கலர் கான்சப்ட் டைல்கள் வந்துவிட்டன. மக்கள் இவற்றை பெரிதும் விரும்புகிறார்கள். இப்படி ஒட்டும் டைல்கள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருக்க வேண்டும்; அப்போதுதான் அதற்கு மேட்சிங்காக அமைக்கப்படும் கப்போர்ட்களின் வண்ணங்களை விருப்பம் போல தீர்மானிக்க முடியும். அதேபோல, டைல் மற்றும் கப்போர்ட் வண்ணங்களுக்கு, கான்ட்ராஸ்ட் நிறத்தில் சமையலறை தரையின் நிறத்தை தேர்வு செய்யும் போது, சமையலறை மொத்தத்திற்குமே ரிச் லுக் கிடைக்கும்.

நோ ஸ்மால்; ஒன்லி பிக்!
கதவு வைத்து சமையலறை அமைப்பதெல்லாம் பழைய ஃபேஷன். இப்போது ஓப்பன் மற்றும் மாடுலர் கிச்சன்கள்தான் பெரிதும் விருப்பமானவையாக இருக்கின்றன. நார்மல் கிச்சனை விட, மாடுலர் கிச்சன் பார்ப்பதற்கு கிராண்ட் லுக் தரும் என்பதால், இதையே இன்டீரியர் டிசைனர்கள் பரிந்துரைக்கிறார்கள். பெரிய அளவில் சமையலறைகள் அமைக்கும் போது, அதில் அமைக்கும் கப்போர்டு மற்றும் இதர விஷயங்களையும் மாடர்னாக்க முடியும்.

பித்தளை மற்றும் காப்பர் பொருட்கள்!
சமையலறைகளிலும் ஆன்ட்டிக் பொருட்கள் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். சமையலறைகளில் அமைக்கும் கப்போர்டுகளின் கைப்பிடிகளை ஆன்ட்டிக் டிசைன்களில் அமைப்பது, வாஷ்பேஷின் பைப்களை பிராஸ் மெட்டலால் அமைப்பது, சமையலறையை மஞ்சள் விளக்குகளால் அலங்கரிப்பது என, சமையலறையின் சூழலை தங்க நிறத்திற்கு மாற்றும் போது, பார்ப்பதற்கு மட்டுமல்ல, அந்த இடத்தில் நின்று சமைப்பதற்கும் அருமையாக இருக்கும். நிம்மதியான உணர்வுடன் உணவுகளை சமைக்க முடியும்.

ஸ்மார்ட் கிச்சன்!
வெளிநாடுகளில் இப்போது ஸ்மார்ட் கிச்சன்தான் டிரெண்ட். இங்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கிச்சன் அமைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இடப்பற்றாக்குறை உள்ள வீட்டின் சமையலறைகளை, ஸ்மார்ட் கிச்சன்களாக அமைப்பது புத்திசாலித்தனம். இதற்கு டூ-இன் -ஒன் ஐடியாக்கள் அதிகம் தேவைப்படும். அதுமட்டுமில்லாமல், நடப்பு தொழில்நுட்ப உலகில், அனைத்தும் கேட்ஜெட் மயமாகிவிட்டது. சமையலறை விஷயங்களையும் ஸ்மார்ட்போன் துணையுடன் செய்து முடிக்க முடியும் என்பதே சுவாரஸ்யமான விஷயம். இன்னும் முழுமையாக இந்த ஸ்மார்ட் கிச்சன் முறைகள் நடைமுறைக்கு வராவிட்டாலும், இனி புதிதாக அறிமுகமாகும்.

‘லிவிங் வால்’ டிரெண்ட்!
வீட்டின் வரவேற்பு அறைகளில் அல்லது வீட்டின் வெளிச் சுவர்களில் மட்டுமே, கார்டனிங் அலங்காரங்கள் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இனி சுவர் கார்டனிங்கை சமையலறை சுவர்களிலும் அமைக்கலாம். வீட்டின் வெளிச்சுவர்களில், அலங்காரச் செடிகளை அமைத்தால், சமையலறைகளில், சமைப்பதற்கு பயன்படுத்தும் வகையில் செடிகளை அமைத்து, பயனுள்ளதாக்கிக் கொள்ளலாம். இன்றைய நிலையில் சமையலறைக்குள், கண்ணாடி குடுவைகளில் அல்லது மண்பாண்டங்களில் சமைப்பதற்கு உதவும் செடிகளை வளர்க்கிறார்கள். இதைவிட, சுவர்களில் வெர்டிகல் கார்டனாக அமைக்கும்போது, பார்ப்பதற்கு நன்றாகவும், பராமரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும் என்கின்றனர் இன்டீரியர் டிசைனர்கள்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g