ராப்சிக் : இந்திய – மெக்சிகன் சுவையின் சங்கமம்!

ராப்சிக் : இந்திய – மெக்சிகன் சுவையின் சங்கமம்!

வெளிநாட்டு உணவுகளை தேடிப்பிடித்து சுவைப்பவர்களுக்கு விருந்தளிக்க தொடங்கப்பட்டுள்ளது,  ராப்சிக் (wrapchic) உணவகம். நம்ம ஊர் காரசாரமும், மெக்சிகனின் பாரம்பரியமும் கலந்ததே  ராப்சிக். சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘வி.ஆர்.சென்னை’ மாலின் புட் கோர்ட்டில் அமைந்திருக்கிறது இந்த உணவகம்.

இந்தோ மெக்சிகன் ஸ்டைலே இந்த உணவகத்தின் கான்செப்ட். அதாவது மெக்சிகனின் ராப் உணவிற்குள், நம்ம ஊர் மசாலாவை வைத்துத் தருகிறார்கள். பர்ரிடோஸ், ராப்ஸ், நாச்சோஸ், ரைஸ் பவுல், டெசர்ட் மற்றும் ஜூஸ் போன்றவை கொண்டு உணவுப்பட்டியலை அமைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக, பரிடோஸ் தான் இங்கு ஸ்பெஷல். அதாவது சப்பாத்தி ரோலுக்குள் வடஇந்திய தாழியை வைத்துத் தருவது. உதாரணமாக, ‘இண்டோ மெக்சிகன் எக் வித் சிக்கன் பரிட்டோ’-னுள் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி, சிக்கன் டிக்கா, வேகவைத்த முட்டை, ரைத்தா மற்றும் சாஸ் போன்றவற்றை சப்பாத்தியினுள் ஸ்டஃப் செய்து தருவார்கள்.

சஞ்சனா

மெக்சிகன் சிக்கன் ராப், பனீர் ராப், டிக்கா ஆலூ ராப், வெஜ் மெக்சிகனோ நாச்சோஸ், சிக்கன் நாச்சோஸ் போன்றவை இங்கு ஸ்பெஷல். ரைஸ் பவுலில் ஹைதராபாத் பனீர் அல்லது சிக்கன் பிரியாணி , மெக்சிகன் பட்டர் சிக்கன், சீஸ் மக்கானி, இந்தியன் லாம்ப் வித் சல்சா பட்டியாலா போன்றவை. ஜூஸ் வகைகளில் லஸ்ஸி, மார்கரீட்டா, லெமன் ஜூஸ். டெசர்ட்டில் சாக்லெட் சில்லி ஐஸ்கிரீம், நியூட்ரில்லா வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த உணவகத்தை நடத்திவரும் சஞ்சனா, ஒரு இளம் தொழிலதிபர். உணவு துறையில் பெண்கள் உரிமையாளராக இருப்பது அரிதே. ஆனால் இவர் மற்றவர்களுக்கு ரோல்மாடல். “ நான் ஒரு உணவு விரும்பி. வித்தியாசமான உணவுகளைத் தேடிப்பிடித்து சுவைப்பேன். அப்படி இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, ராப்சிக் உணவை அங்கு சுவைத்தேன். அப்போதே இந்தியாவில் இந்த உணவகத்தை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன். கனவை இப்போது நிஜமாக்கிவிட்டேன்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் சஞ்சனா.

இரண்டு பேர் சாப்பிட ரூ.600 இருந்தால் போதுமானது. இந்தோ மெக்சிகன் கலவையில் வித்தியாசமான உணவுகளை சுவைக்க விரும்பினால் நிச்சயம் இங்கு செல்லலாம்.

–  நீலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g