திறன்களை கற்றுக்கொள்ள உதவும் 5 ஆண்ட்ராய்டு செயலிகள்!

திறன்களை கற்றுக்கொள்ள உதவும் 5 ஆண்ட்ராய்டு செயலிகள்!

பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கவும், விளையாடவும் மட்டுமல்ல, பாடங்களை கற்றுக்கொள்ளவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கூட ஸ்மார்ட்போன்களும் டேப்லெட்களும் உதவும். ஸ்மார்ட்போன் செயலிகளை பயன்படுத்தி பள்ளிப்பாடம் முதல் ஆய்வுப்பாடம் வரை கற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வேலைத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் இவை உதவும். கற்றுக்கொள்ள உதவும் ஐந்து முக்கிய ஆண்ட்ராய்டு செயலிகளை பற்றி இங்கே காணலாம்:

கோர்செரா

பள்ளிப் பாடங்களை கற்றுத்தரும் செயலி இது. இதில் பல்வேறு வகையான கோர்ஸ்களும், பாடங்களும் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தலைப்பைப் பற்றி சொல்லித்தரும். கணக்கு முதல் அறிவியல் வரை, தொழில்நுட்பம் உள்பட, 1,000க்கு மேற்பட்ட கோர்ஸ்கள் உண்டு. விரிவுரைகள், ரீடிங் அசைன்மென்ட்கள், வீடியோ பாடங்களும் உண்டு. ஏதாவது ஒரு கோர்ஸை முடித்தால், அதற்கு சான்றிதழும் வழங்கப்படும். இந்த செயலியில், சில கோர்ஸ்களுக்கு கட்டணம் இருந்தாலும், நிறைய இலவச கோர்ஸ்கள் உள்ளன.

கான் அகாடமி

மிகவும் பிரபலமான செயலி இது. கணக்கு, அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட வழக்கமான பாடப்பிரிவுகளையும் பிற பாடங்களையும் எளிய வழிகளில் கற்றுத் தருகிறது. இதில் எண்ணற்ற பாடங்கள், வகுப்புகளுடன், 10,000க்கு மேற்பட்ட வீடியோ பாடங்களும் உண்டு. அத்தனை பாடங்களும் இதில் இலவசம் என்பது இச்செயலியின் தனிச்சிறப்பு. அதிகம் பயன்படுத்தப்படும் கற்றல் செயலி இது.

போட்டோமேத்

கணக்கு சொல்லித்தரும் சிறந்த செயலி இது. உங்கள் கேமராவையும் ஓசிஆர் தொழிநுட்பத்தையும் பயன்படுத்தி, நீங்கள் எழுதும் கணிதச் சமன்பாடுகளை படித்து, சரிபார்த்து, சரியான விடையை உங்களுக்கு அளிக்கும். கணக்கு போடுவதற்கு படிப்படியான விளக்கத்தையும் இது அளிக்கும். கணக்கில் பலவீனமாக இருப்பவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய செயலி இது. அடிப்படை பாடங்கள் அனைத்தும் இலவசம் என்றாலும், பிரீமியம் சேவைகளுக்கு கட்டணம் உண்டு.

சோலோலேர்ன்

பல செயலிகள் ஒன்றிணைந்த தளம் இது. இதில் கம்ப்யூட்டர் புரோகிராமிங் சொல்லித்தரும் நிறைய செயலிகள் உள்ளன. ஹெச்.டி.எம்.எல்., ஜாவா, பைத்தான் போன்ற வெப் மொழிகள் முதல், சி++ போன்ற கணினி மொழிகள் வரை, ஒவ்வொரு கணினி மொழிக்கும் தனிச் செயலிகளை கொண்டு இலவசமாக சொல்லித்தருகிறது, சோலோலேர்ன். உங்கள் வேலைத்திறன்களையும், கணினி அறிவையும் வளர்த்துக்கொள்ள இது நிச்சயம் உதவும்.

யுடாசிட்டி

இந்த செயலியில் கோர்ஸ்களை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். இது குறிப்பாக கம்ப்யூட்டர் புரோகிராமிங், ஆப் டெவலப்மென்ட், ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், மெஷின் லேர்னிங் உள்ளிட்ட அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் பாடங்களில் இச்செயலி அதிக கவனம் செலுத்துகிறது. இதில் பெரும்பாலான கோர்ஸ்கள் இலவசம் என்றாலும்., சில படிப்புகளுக்கு கட்டணங்கள் உண்டு. ஓவ்வொரு கோர்ஸையும் முடித்த பிறகு, அதற்கு சான்றாக நானோ டிகிரி வழங்கப்படும்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g