மணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்

மணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்

பியூட்டி மற்றும் ஹேர் சலூன் துறையில் இந்தியாவின் தனித்துவமான பிராண்டாக உருவெடுத்திருக்கும் ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனம், புதிய டிரெண்டி பிரைடல் ஹேர் ஸ்டைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டான சீமா வி.ஜெராஜாணி இவற்றை பரிந்துரைக்கிறார்.

கேயா ஹேர் ஸ்டைல்

இந்தியப் பாரம்பரியத்தை விரும்பும் பெண்களுக்காக, கேயா பிரெய்ட் ஹேர் ஸ்டைல் பரிந்துரைக்கப்படுகிறது. பட்டுப் புடவை மற்றும் ஆன்டிக் நகைகள் அல்லது டெம்பிள் ஜுவல்லரிகளை அணிந்து பகட்டாக தோன்றலாம். பக்கா தென் இந்திய ஸ்டைலை விரும்பும் பெண்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

இந்த ஸ்டைலில் பின்னல்களுடன் பூக்களை கோர்த்து ‘V’ வடிவத்தில் அலங்கரிக்கின்றனர். ஹேர் அக்ஸசரிகள் எதுவுமின்றி, பூக்களாலேயே அலங்காரம் செய்வதால், காண்பதற்கு அட்டகாசமாக இருக்கும். நீள்வட்ட முகத்திற்கு, இந்த ஹேர் ஸ்டைல் பொருத்தமாக இருக்கும். காலை முகூர்த்த நேரத்திற்கு, இந்த ஹேர் ஸ்டைல் அணியலாம்.

அவா ஹேர் ஸ்டைல்

இந்த ஹேர் ஸ்டைல் உண்மையிலேயே புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. பீச் வெட்டிங், டெஸ்டினேஷன் வெட்டிங் என, வெளிப்புறத்தில் திருமணத்தைத் திட்டமிட்டிருந்தால்,  இந்த ஹேர் ஸ்டைலை முயற்சி செய்து பார்க்கலாம். மெஹந்தி நிகழ்வுக்கும் இந்த ஸ்டைல் ஏற்றது.

அவா ஹேர் ஸ்டைல் முற்றிலும் பூக்களால் கோர்க்கப்பட்ட அணிகலன்களை அணிந்து காக்டெய்ல் தோற்றத்தை அளிக்கிறது. பார்ப்பதற்கு புத்துணர்வான தோற்றத்தை அளிக்கிறது. இந்த ஹேர் ஸ்டைல், வேவியான தோற்றத்தில் இருப்பதால், லெஹங்கா போன்ற ஆடைகளுக்கு எடுப்பாக இருக்கும். குறிப்பாக, இந்த ஸ்டைலை எல்லா விதமான முக வடிவம் கொண்டவர்களும் முயற்சி செய்யலாம். தனித்துவமாகவும் இருக்கும்.

லதிகா ஹேர் ஸ்டைல்

மாலை நேர வரவேற்பு நிகழ்ச்சிக்கு, இந்த ஹேர் ஸ்டைல் நேர்த்தியாக இருக்கும். இதில் பின்னல்களிலேயே சிக்கல் நிறைந்த தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக முயற்சி செய்திருக்கின்றனர். கூடுதல் அழகிற்காக இடையிடையே ஸ்டட் ஹேர் ஆக்ஸசரி ஜொலிக்கிறது. கவுன் போன்ற வெஸ்டர்ன் ஆடைகளுக்கு, லத்திகா ஹேர் ஸ்டைல் மிகச் சரியான தேர்வு.

டயமண்ட் போன்ற ஸ்டோன் ஒர்க்குகள் மிளிர, அணிகலன்கள் அணிந்தால் மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமர்க்களமாக இருக்கும். மேலும், இந்த மென்மையான மற்றும் ரொமாட்டிக்கான தோற்றத்தை, இந்த ஹேர்ஸ்டைல் அளிக்கிறது. நீளம் அல்லது நீள்வட்ட வடிவ முகம் கொண்டவர்களுக்கு, இந்த லதிகா ஹேர் ஸ்டைல் சரியான சாய்ஸாக இருக்கும்.

நிலா ஹேர் ஸ்டைல்

வட்டமான அல்லது ஹார்ட் வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, நிலா ஹேர் ஸ்டைல் அசத்தலாக இருக்கும். மற்றவர்களையும் பொறாமைப்பட வைக்கும். இந்த ஸ்டைல், உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளை முழுமையானதாக மாற்றும்.

இந்த ஸ்டைல் பன் அமைப்பில், பல லேயர்கள் கொண்டதாக பிண்ணப்பட்டுள்ளது. கூடுதல் அழகிற்காக, ஹேர் ஆக்ஸசரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டைலை லெஹங்கா, கவுன், இன்டோ வெஸ்டர்ன் என, எந்த ஆடைக்கும் பொருத்துமாக செய்து கொள்ளலாம்.

– ஏ.சிவரஞ்சனி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g