தாடியில் காட்டலாம் அழகும் ஆளுமையும்

தாடியில் காட்டலாம் அழகும் ஆளுமையும்

ஆண்களுக்கு இயற்கை கொடுத்த வசீகரம், தாடி. தற்போது அழகுக் கலைஞர்கள் தாடியில் பல புதுமைகளையும் புகுத்திவிட்டதால், பசங்களை பார்லரில் இருந்து பிரிக்க முடியாத நிலை வந்துவிட்டது.

தன் கெட்-அப்பை மாற்ற நினைப்பவர்கள், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சில நாட்கள் ஷேவ் செய்யாமல் விட்டாலே போதும், தானாகவே ஸ்டைல் மாறிவிடும்.  கிளீன் ஷேவ் முகங்களை திடீரென தாடியுடன் பார்த்தால் புதிய வசீகரம் கூடியுள்ளது தெரியும். அது மட்டுமல்ல, கிளீன் ஷேவ் முகங்களைவிட, ஸ்டைலான தாடி வைத்திருப்போருக்கு இன்டெலக்ச்சுவல், பிரீக் அவுட்லுக் கிடைக்கிறது. தன் மனதை பிரதிபலிக்க விரும்பும் பலர் தாடியில் அதை செய்கின்றனர்.

தாடி அடர்த்தியாக இருந்தாலும், கொஞ்சமாக இருந்தாலும், முகத்துக்கேற்ற ஸ்டைல்கள் ஏராளம். ஹேர் ஸ்டைல் வேறாகவும், தாடியின் ஸ்டைல் வேறாகவும் இருப்பது தான், லேட்டஸ்ட் பேஷன். தன்னை தனித்து காட்டிக் கொள்ள விரும்புவோர், ஃபங்கி ஸ்டைல்களை செய்கின்றனர். ஆனால், ஹேர் ஸ்டைலுக்கு மேட்ச் ஆகிற தாடியைத்தான் பெரும்பாலான ஸ்டைலிஸ்ட்கள் பரிந்துரைக்கின்றனர்.

பியர்ட் ஸ்டைல் பேஷன், பியர்ட் போட்டோ எடிட்டர் போன்ற பல ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம், உங்களின் புகைப்படத்தில் தாடியின் அமைப்பை வைத்து எடிட் செய்து பார்த்து, அது நமக்கு பொருந்துகிறதா என்பதை முன்னதாகவே சரிபார்க்க முடிகிறது. இதனால் பியூட்டி பார்லருக்குச் செல்லும்போது ஏற்படுகிற பதற்றத்தையும் குழப்பத்தையும் தடுக்க முடியும்.

ஒவ்வொருவரின் முக அமைப்புக்கு ஏற்ற விதமாக, தாடியின் ஸ்டைல் இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும் என்கின்றனர் ஸ்டைலிஸ்ட்கள். பொதுவாக ஸ்கொயர், ரவுண்டு, ஓவல், மற்றும் ரெக்டேங்கிள் என நான்கு வகையான முக அமைப்புகள் இருக் கின்றன. இந்த நான்கு வகையான முக அமைப்புகளுக்கு ஏற்ற மாதிரி, நூற்றுக்கணக்கான தாடி ஸ்டைல்கள் டிரெண்டில் இருக்கின்றன.

தலைமுடிக்கு கலரிங் செய்து கொள்வது போல, தாடிக்கும் கலரிங் செய்துகொள்வது சமீபத்தில்தான் அதிகரித்திருக்கிறது. தலைக்கு கொடுக்கும் கலர்களில், கொஞ்சமாக தாடிக்கும் பூசிக் கொள்வதே இப்போதைய டிரெண்ட். 2017 இல் சிறந்த பியர்ட் ஸ்டைல்கள் எவை என்பதை ஹேர்ஸ்டைலிஸ்ட்.காம் நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஏற்கெனவே பாப்புலராக இருந்த பல்போ ஸ்டைல், பேண்டுஹோல்ஸ், சர்கிள் பியர்டு, எக்ஸ்டன்டட் கோட்டீ, பிரண்ட்லி மட்டன் சாப், புல் பியர்டு, கரிபல்டி, இம்பீரியல், ஸ்டஃபுல் ஷார்ட்/மீடியம்/லாங் மற்றும் வான் டைகி ஆகிய ஸ்டைல்கள், தற்போதைய டிரெண்டில் இருக்கின்றன.

அப்படீன்னா என்ன என்று அப்பாவியாய் கேட்கிறீர்களா… டீட்டெய்ல்ஸ் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது…பாருங்கள்.

சர்க்கிள் பியர்டு

எளிமையை விரும்புபவர்களுக்கு ஏற்ற ஸ்டைல் இது. பார்ப்பதற்கு பளிச்சென்ற லுக்கை இது கொடுக்கும். வட்ட வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கானது.

வான் டைகி பியர்டு

நீள்வட்டம் மற்றும் கூர்மையான தாடை உள்ளவர்களுக்கு ஏற்ற ஸ்டைலாக இது இருக்கும். இந்த ஸ்டைலில் ‘V’ ஷேப் லுக் கிடைக்கும். இதற்கு தாடி அடர்த்தியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பல்போ பியர்டு

கூர்மையான தாடை இருப்பவர்களுக்கு ஏற்ற ஸ்டைல் இது. பார்மல் லுக் கிடைப்பதால், அனைத்து இடங்களுக்கும் ஏற்றதாக இந்த ஸ்டைல் இருக்கும்.

கரிபல்டி

தாடியில் அடர்த்தியான முடி இருப்பவர்களுக்கு ஏற்ற ஸ்டைல் இது. இந்த ஸ்டைல் கொஞ்சம் அகலமாக இருக்கும் என்பதால், ரெக்டேங்கிள் முக அமைப்பு இருப்பவர்களுக்கு ஏற்றது.

பேண்டு ஹோல்ஸ்  பியர்டு

பார்ப்பவர்கள் வாவ் சொல்லுகிற மாதிரியான ஸ்டைல் இது. அடர்ந்த தாடி அமைப்பு இருப்பவர்களுக்கு ஏற்றது. நீள்வட்டமான முக அமைப்பு கொண்டவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.

– தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g