ஜான்வியின் முதல் ராம்ப் வாக்#இந்த வார ஃபேஷன் உலகம்

ஜான்வியின் முதல் ராம்ப் வாக்#இந்த வார ஃபேஷன் உலகம்

கரீனாவின் லாக்மே ராம்ப் வாக்

லாக்மே ஃபேஷன் வீக்கின் விண்ட்டர்  ஃபெஸ்டிவ் 2018 இறுதி நாள் கோலாகலமாக நடைபெற்றது. அதில் லாக்மேயின் பிராண்ட் அம்பாசிடரான பாலிவுட் நடிகை கரீனா கபூர்கான் மேடையை அலங்கரித்தார். டிசைனர் மோனிஷா ஜெய்சிங்கின் ஷோல்டர் கவுன் அணிந்து ராம்ப் வாக் செய்தது அசத்தலாக இருந்தது. அதன் ஹோலோகிராஃபிக் வண்ணங்கள் நிறைந்த ஜொலிஜொலிப்பு காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தவிர, டிசைனரின் தொகுப்புகளான ஸ்லிட் கவுன், காக்டெய்ல் கவுன், ஜம்சூட், புடவை , ஷார்ட் டிரெஸ் என அத்தனை வகை ஆடைகளையும் அணிந்து மாடல்கள் வலம் வந்தனர்.

ஷோஸ்டாப்பரான  கரீனா பத்திரிகையாளர்களிடம் ”லாக்மேயுடனான 8 வருட உறவு விவரிக்க முடியாதது. ஒவ்வொரு பெண்ணிற்கும் மேக் அப் சிறந்த தோழி. குறிப்பாக ஒரு நடிகையையும் மேக் அப்பையும் பிரிக்கவே முடியாது” என நெகிழ்ந்தார்.

டிரெண்ட்ஸின் அம்பாசிடரான கீர்த்தி சுரேஷ்

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் இளம்பெண்கள், வேலைக்குப் போகும் பெண்களிடையே நாளுக்கு நாள் தனக்கான இடத்தை ஆழமாக பதித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடனான நெருக்கத்தை அதிகரிக்க தென் இந்தியாவின் டிரெண்ட்ஸ் அம்பாசிடராக நடிகை கீர்த்தி சுரேஷை புக் செய்துள்ளது.  கீர்த்தியை வைத்து செய்யும் முதல் புரமோஷனல்  நிகழ்வு சென்னை அண்ணா நகர் வி ஆர் மாலில் நடைபெற்றது. அப்போது, டிரெண்ட்ஸ் ஃபெஸ்டிவல் கலெக்‌ஷன்களை கீர்த்தி அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கு வந்த கீர்த்தி சுரேஷிடம் டிரெண்ட்ஸின் அம்பாசிடர் தேர்வு குறித்து கேட்டதற்கு, “நான் சிறு வயதிலிருந்தே டிரெண்ட்ஸ் ஆடைகளை அணிந்திருக்கிறேன். டிரெண்ட்ஸ் ஆடைகள் தனித்துவமானதாக இருக்கும். மேலும் இது இந்தியாவின் மிகப்பெரிய பிராண்ட். மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட். இத்தனைப் பன்முகங்களைக் கொண்டதால் அம்பாசிடராக ஒப்புக்கொண்டேன்” என்றார்.

புதிய டிசைனர்களுக்கான அறிமுகம்

ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் புதுபுது டிசைனர்களை மேடையேற்றி அழகு பார்க்கும். அந்த வகையில் ‘ஸ்பிரிங் சம்மர் 2019’ ஃபேஷன் ஷோவை அக்டோபர் 10ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஃபேஷன் ஷோ டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.  புதுமுக டிசைனர்களின் கற்பனைத் திறன் மற்றும் திறமைக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவது இந்த ஷோவின் சிறப்பு.

ஜான்வியின் முதல் ராம்ப் வாக்

தடாக் படத்தின் மூலம் பாலிவுட்டில் முதல் அடியை எடுத்து வைத்த ஜான்வி கபூர், முதல் முறையாக ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்திருக்கிறார். தனது அம்மா ஸ்ரீதேவியின் இடத்தை தற்போது ஜான்விதான் நிரப்புகிறார் என்கின்றனர் பேஷன் டிசைனர்கள். ஏனெனில், ஸ்ரீதேவிக்கு ஃபேஷன் ராம்ப் வாக் செய்வது மிகவும் பிடிக்கும். பலமுறை லாக்மே ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்திருக்கிறார். இந்த ஷோவில், நச்சிகெட் பார்வ் டிசைனருக்காக ஜான்வி ராம்ப் வாக் செய்தார்.

மினிமலிஸ்டிக் மகாராணியின் ஆடை எவ்வாறு இருக்குமோ, அப்படியான தோற்றத்தில் ஜான்வி மிளிர்ந்தார். உயர் ரக கை வேலைப்பாடுகள் நிறைந்த டிசைன்களைக் கொண்டிருந்தது அந்த ஆடை.  பிங்க் மற்றும் ப்ளு லெஹங்கா அணிந்து ஜொலித்தார். ஆடையின் அழகை உயர்த்திக் காட்ட, சிம்பிளாக மேக்அப் செய்திருந்தார். ஜான்விக்கு இது முதல் ராம்ப் வாக் என்றாலும், அவரின் ஒய்யார நடை, கைதேர்ந்த மாடல்களைப் போன்றே இருந்தது.

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g