பயணத்துக்கு தயாராக 10 யோசனைகள்!

பயணத்துக்கு தயாராக 10 யோசனைகள்!

சரியான ஏற்பாடுகள் இல்லாமல் பயணிப்பது பயண அனுபவத்தையே பாழ்படுத்திவிடும். குறிப்பாக பயணத்துக்கு பேக்கிங் செய்வதற்கு முன் நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தேவையற்ர சுமைகளை தவிர்த்துவிட்டு, தேவையானவற்றை குறைவான அளவில் பேக் செய்வது சுமையை குறைப்படுதுடன், பல வழிகளில் உங்களுக்கு உதவும்.

நீண்ட தொலைவு பயணமோ, வெளிநாட்டுப் பயணமோ, பயணத்துக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது எப்போதுமே சவாலான விஷயம் தான். அதிகச் சுமையாக இல்லாமல், கையாள எளிதாக இருக்கும் வகையில், உங்கள் பேக்கேஜ் இருக்க வேண்டும். சுற்றுலா பயணம், பிசினஸ் பயணம் அல்லது தனிப்பட்ட பயணம், இப்படி பயணத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், கீழ்க்கண்ட யோசனைகள் பொருத்தமாக இருக்கும்.

போட்டோ காப்பி எடுத்துக் கொள்ளுங்கள்

குறிப்பாக வெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தால், உங்களின் விசா, பாஸ்போர்ட், டிராவல் இன்ஷூரன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை குறைந்தது இரண்டு செட்களாவது போட்டோ காப்பி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆவனங்கள் எல்லாம் ஸ்மார்ட்போனில் சாப்ட் காப்பி வடிவில் இருந்தாலும், பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.  அதேபோல, நீங்கள் விமான நிலையத்தில் இருந்து செல்லும் கார், உங்கள் பேக்கேஜ் ஆகியவற்றையும் ஸ்மார்ட்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டால், லக்கேஜ் தொலைந்து போகும் சூழ்நிலையில் உதவிகரமாக இருக்கும்.

சூட்கேஸை முழுமையாக பயன்படுத்துங்கள்

பெட்டியில் துணிகளை வைக்கும் போது, அழகுப் பார்த்து மடித்து வைக்காமல், சுற்றி வையுங்கள். இதனால் இடத்தை மிச்சப்படுத்தலாம்.  மேலும், இவற்றை வாக்குவம் கவர்களின் வைத்தால், மேலும் அதிக இடத்தை சேமிக்கலாம். சாக்ஸ், உள்ளாடைகள் மற்றும் ஆக்சஸரிகளை ஷூக்களுக்குள் கூட வைக்கலாம். அல்லது சிறிய உறைகளில் போட்டு வைக்கலாம்..

குறைவாகவே எடுத்துச் செல்லுங்கள்

நீங்கள் விரும்பும் பொருட்களை எல்லாவற்றையும் எடுத்துச் சென்றால், உங்களால் கையாள முடியாமல் திண்டாடிப் போவீர்கள். பொருட்சுமை உங்களின் பயண அனுபவத்தையே சுவாரஸ்யம் குறைந்ததாக மாற்றக்கூடும். ஆகவே, தேவையான அளவில் பாதி அளவுக்கு மட்டும் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்; அதே நேரத்தில் இரண்டு மடங்கு அதிகமாக பணத்தை எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், உங்களுக்கு ஏதாவது தேவை ஏற்பட்டால், அங்கேயே பணம் கொடுத்து, புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

ஸ்லீப் மாஸ்க், இயர் பிளக் வைத்துக்கொள்ளுங்கள்

விமானப் பயணம், ரயில் பயணம், அல்லது ஹோட்டல் அறைகளில் தொந்தரவுகள் இன்றி உறங்க, ஸ்லீப் மாஸ்க்கும் இயர்பட்ஸும் உதவும்.

எப்போதும் ஒரு பெரிய சால்வையை வைத்திருங்கள்

விமானம், ரயில் பயணங்களின் போது போர்வையாகவும், குளிரான மாலை நேரங்களில் ஸ்கார்ப் அல்லது ஷால் போலவும் இதைப் பயன்படுத்தலாம்.

பைகளில் போடுங்கள்

உங்கள் ஆக்சஸரிகள், பராமரிப்புப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை தனித்தனி பைகளில் போட்டு வைக்கலாம். சிறிய மெஷ் பைகள், ஜிப் வைத்த பைகள், சீல் கவர்கள் ஆகியவற்றை இதற்கு பயன்படுத்தலாம். பயன்படுத்திய ஆடைகள், ஷூஸ் ஆகியவற்றையும் தனி கவர்களில் வைக்கலாம்.

தனித்தனியே பேக் செய்யுங்கள்

இரண்டு இடங்களுக்கு பயணிக்கிறீர்கள் எனில், அந்த இரண்டு இடங்களுக்கும் தனித்தனியே பேக் செய்து கொள்ளுங்கள். அப்போது ஒரே லக்கேஜை அடிக்கடி பிரித்து, மீண்டும் சரி செய்து வைக்கும் தேவை ஏற்படாது. இதனால் நேரம் மிச்சமாவதுடன், மன அழுத்தமும் குறையும்.

இடத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

இரண்டு பேராக பயணிக்கும் போது, இரண்டு பேரின் பொருட்களையும், இரண்டு பைகளிலும் கலந்து வையுங்கள். அப்போதுதான், ஒரு பேக் தொலைந்தாலும், இன்னொன்று கைகொடுக்கும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நிலை ஏற்படாது.

மல்டி சாக்கெட் கையில் இருக்கட்டும்

நவீன ஹோட்டல்களில் தற்போது யு.எஸ்.பி., போர்ட்கள் இருந்தாலும், உங்களின் கேட்ஜெட்கள் அனைத்தையும் சார்ஜ் செய்ய வசதியாக, மல்டி சாக்கெட் எக்ஸ்டென்ஷன் கார்டை எடுத்துச் செல்லுங்கள்.

பொருட்களை பட்டியலிடுங்கள்

பயணத்திட்டம் உறுதியானதும், பயணத்துக்கு தேவையான பொருட்களை ஒரிரு வாரங்கள் முன்பிருந்தே எடுத்து வையுங்கள். தேவையான பொருட்களை பட்டியலிட்டு, அதன்படி எடுத்து வையுங்கள். அப்போதுதான், பட்டியலில் இல்லாத பொருள் ஏதும் இல்லையெனில், வாங்க கால அவகாசம் கிடைக்கும். கடைசி நேரத்தில் எதையும் மறந்துவிட்டுச் செல்வதையும் பட்டியலிடுவதன் மூலம் தவிர்க்கலாம்.

.-  செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g