நவீன டிசைன்களில் பிரைடல் ஆபரணங்கள்

நவீன டிசைன்களில் பிரைடல் ஆபரணங்கள்

ஆபரணங்களில் பல புதுமைகள் வந்துவிட்டன. நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தின் போது கிராண்டான புடவைகளுக்கு ஏற்ப, அடர்த்தியான நகைகளையே விரும்புகின்றனர். அவர்களுக்கான திருமண நகைகளின் தகவல்கள் இதோ…

நீங்கள் அணிவது வெஸ்டர்ன் அல்லது பாரம்பரிய உடைகள், எதுவாக இருந்தாலும், டிரெடிஷனல் ஜூவல்களை அணியலாம். பிரைடல் ஜூவல்லரியில் ஜெம் ஸ்டோன் ஒர்க், குந்தன் ஒர்க், பாச்சி மற்றும் பிளவர் ஒர்க் என்று வேலைப்பாடுகள் நிறைந்து இருப்பதால், உடுத்தியிருக்கும் ஆடையுடன் பார்க்கும்போது, புதிய, அழகான தோற்றத்தை அளிக்கும். உங்கள் தங்க நகைகள் கலெக்ஷனில், இந்த ஐட்டங்கள் இருக்கிறதா என செக் பண்ணுங்கள். இல்லையென்றால்…உடனே பர்ச்சேஸுக்கு கிளம்புங்கள்.

மாங் டிக்கா

சமீபகாலமாக மணபெண்களின் மோகம், நெத்திச்சுட்டிகளின் மீது திரும்பியிருக்கிறது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தின் போது அணியும் கிராண்டான புடவைகளுக்கு ஏற்ப, பல டிசைன்களில் நெத்திச்சுட்டிகள் கிடைக்கின்றன. முத்து மற்றும் போல்கி கற்களைக் கொண்ட சாந்த் டிக்கா, குந்தன் கற்களால் பல அடுக்குகளுடன் டிசைன் செய்யப்பட்டிருக்கும் குந்தன் மாங் டிக்கா, கிரீடம் போன்ற டிசைனில் பாரம்பரிய கற்களைக் கொண்டு பியூசன் பாணியில் வடிவமைக்கப்படும் நெத்திச்சுட்டிகள், சிவப்பு மற்றும் பச்சை கற்களைக் கொண்டு தென் இந்திய பாரம்பரிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் நெத்திச்சுட்டிகள், இப்போதைய டிரெண்டில் பிரபலமடைந்து வருகின்றன. ஹேர் ஸ்டைல்களுக்கு ஏற்ப நெத்திச்சுட்டிகளை தேர்வு செய்து  அணிந்துக் கொண்டால், நேர்த்தியான லுக்கை பெறலாம்.

மல்டி­லேயர் நெக்லெஸ்

இது மணப்பெண்களுக்கு ராயல் லுக் கொடுக்கிறது.  மூன்று வெவ்வேறு அளவுகளில் உள்ள நெக்லஸ்கள் அணிவதை, இன்றைய இளம்பெண்கள் விரும்புவதில்லை. அதற்கு பதிலாகவே, ஒரே அளவில் ஐந்து லேயர்கள் வரை கொண்ட மல்டி-லேயர் நெக்லஸ்களை டிசைனர்கள் வடிவமைக்கின்றனர். மல்டி-லேயர் நெக்லஸில் பெரும்பாலும் குந்தன் ஒர்க், ஸ்டோன் ஒர்க், பாச்சி ஒர்க், பியர்ல் ஒர்க் மற்றும் மிர்ரர் ஒர்க் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நெக்லஸ்களை நட்சத்திரங்களும் பிரபலங்களும் விரும்பி அணிகின்றனர்.

லார்ஜ் ரிங்ஸ்

இந்தியாவின் பாரம்பரிய மோதிரங்கள், எல்லா வயது பெண்களின் பேவரிட்டாக உள்ளது. திருமண பெண்கள் பெரிய அளவிளான மோதிரம் அணிந்து கொள்ளலாம். இந்தோ­வெஸ்டர்ன் உடையுடன் சேரும் போது, லார்ஜ் ரிங்ஸ் மிக அழகாக தோற்றமளிக்கும். இன்றைய பேஷனுக்கு ஏற்ப பல டிசைன்களில் வடிவமைக்கப்படும் பெரிய மோதிரங்கள் எல்லோராலும் விரும்பி அணியப்படுகின்றன.

சாந்த் பாலி காதணிகள்

பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்த காதணிகள் தான், இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப மறுவடிவம் பெற்று, சாந்த் பாலிஸ் என்று ஸ்டைலாக மாறியுள்ளது. எல்லோராலும் விரும்பி அணியப்படும் ஆபரணமாக இந்த வருடமும் சாந்த் பாலிஸ், டாப் லிஸ்டில் உள்ளது. குந்தன் ஒர்க் செய்யப்பட்ட நிலா வடிவில் இருக்கும், சாந்த் பாலிஸ் இயர் ரிங் அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும். இந்த காதணியை, புடவை, லெஹெங்கா, அனார்கலி உடை ஆகியவற்றுடன் சேர்த்து அணியலாம். மேலும், அணியும் ஆடையின் நிறத்திற்கு ஏற்பவும் சாந்த் பாலிஸை தேர்வு செய்து கொள்ளலாம்.

காடா வளையல்கள்

திருமண ஆபரணங்களில் தனித்துவமான இடத்தைப் பெறுவது, வளையல்கள். வெஸ்டர்ன் அல்லது பாரம்பரிய உடைகள் என்று எதுவாக இருந்தாலும் வளையல்கள் அவற்றின் வசீகரத்தை அதிகரிக்க செய்பவை. வெவ்வேறு வடிவ கோணங்களில்  வித்தியாசமான டிசைன்களில் வடிவமைக்கப்படும் காடா வளையல்கள் தான், தற்போதைய இந்திய திருமணங்களில் புதிய டிரெண்டாக இருக்கிறது. வட்ட வடிவங்களில் மட்டுமில்லாது, சதுர, பென்டகன், முக்கோண வடிவங்களில், நாகாஸ், குந்தன், முத்து, வைரம் உள்ளிட்ட பல ஸ்டைல்களில், காடா வளையல்கள் கிடைக்கின்றன. பட்டுப் புடவைகளுக்கு பாரம்பரிய டெம்பிள் டிசைன்களும், லெஹெங்காஸ் மற்றும் டிசைனர் புடவைகளுக்கு ஸ்டோன், போல்கி, மீனாகரி ஒர்க்ஸ் கொண்ட டிசைன்களில் காடா வளையல்களை அணியலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g