இந்த வாரம் வெளியாகும் நயன்தாராவின் கோகோ உள்ளிட்ட படங்கள் #MovieTrailer

இந்த வாரம் வெளியாகும் நயன்தாராவின் கோகோ உள்ளிட்ட படங்கள் #MovieTrailer

ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், நயன்தாராவின் கோகோ உட்பட, தமிழில் மூன்று திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.

கோலமாவு கோகிலா

நடிகர்கள்          : நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன்
தயாரிப்பு           : லைகா புரொடக்‌ஷன்ஸ்
படத்தொகுப்பு : நிர்மல்
ஒளிப்பதிவு       : சிவக்குமார் விஜயன்
இசை                    : அனிருத்
இயக்கம்             : நெல்சன்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நயன்தாராவின் அடுத்த அதிரடி கோகோ. போதைப்பொருள் கடத்தும் நாயகியாக நயன், அவரை காதலிக்கும் யோகி பாபு, நயனின் தங்கையாக விஜய்டிவி ஜாக்குலின், இவர்களைச் சுற்றியே கதை. போதைப் பொருள் கடத்தும் நயன்தாரா, பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

நடிகர்கள்           : ஐஸ்வர்யா தத்தா, துருவா
தயாரிப்பு            : எக்ஸெட்ரா என்டர்டெயின்மென்ட்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
ஒளிப்பதிவு       : பி.ஜி.முத்தையா
இசை                    : அச்சு ராஜமணி
இயக்கம்              : ராஹேஷ்

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ள படம். படம் வெளியாகவிருப்பது நிச்சயம் என்றாலும், அது அவருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. செயின் பறிப்பு, தங்கம் கடத்தல் தொடர்பான படம். செயின் பறிப்பதில் கைதேர்ந்த நாயகன் துருவாவிற்கு புதிய வேலை வருகிறது. என்ன வேலை ? அதை எப்படி செய்துமுடித்தார் என்பதே கதை.

ஓடு ராஜா ஓடு

நடிகர்கள்           : குரு சோமசுந்தரம், நாசர், லெட்சுமி பிரியா
தயாரிப்பு            : கேண்டில் லைட் புரொடக்‌ஷன்ஸ்
படத்தொகுப்பு : நிஷாந்த் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு      : சுனில் சி.கே.
இசை                  : தோஷ் நந்தா
இயக்கம்           : ஜதின் ஷங்கர் ராஜ் , நிஷாந்த்

காதலித்து திருமணம் செய்துகொண்ட குரு சோமசுந்தரம் – லெட்சுமி பிரியா தம்பதிகளுக்கு இடையே செட் டாப் பாக்ஸ் எப்படியெல்லம் விளையாடும், அதனால் ஹீரோவுக்கு நடக்கும் பிரச்னைகள் என்ன என்பதே கதை. அதுவும் 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.

கீதா கோவிந்தம்

நடிகர்கள்           : விஜய் தேவரகொண்டா , ராஷ்மிகா
தயாரிப்பு            : GA 2 பிக்சர்ஸ்
படத்தொகுப்பு : வெங்கடேஷ்
ஒளிப்பதிவு      : மணிகண்டன்
இசை                   : கோபிசுந்தர்
இயக்கம்             : பரசுராம்

வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய கீதா கோவிந்தம் திரைப்படம், சுதந்திர தின ஸ்பெஷலாக நேற்றே வெளியாகிவிட்டது. ஒரே பாடலில் வைரல் ஹிட்டடித்த இப்படத்திற்கு, தமிழிலும் செம ரெஸ்பான்ஸ். நேற்றும், இன்றும் ஹவுஸ் புல்லாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய், ராஷ்மிகா இருவருக்குமான காதலும் சண்டையும், அதன் பிறகான திருமணமுமே ஒன்லைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g