வை-பை வேகத்தை அதிகப்படுத்த… எளிய யோசனைகள்!

வை-பை வேகத்தை அதிகப்படுத்த… எளிய யோசனைகள்!

வீட்டில் வை-பை மூலம் இணையத்தை பயன்படுத்தும் போது, சிக்னல் தடை பட்டாலோ அல்லது வேகம் குறைந்தாலோ கோபமும், எரிச்சலும்  ஏற்படும். இந்த அசவுகரியத்தை தவிர்க்க,  வை-பை வேகம் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை தெரிந்துகொண்டால், வை-பை வேகத்தை பராமரிப்பது எளிது.

வை-பை ரவுட்டர்

வை-பை இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த, ரவுட்டரை பயன்படுத்தும் கட்டிடத்தின் நடுவே வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது வை-பை சிக்னல்கள் அனைத்துத் திசைகளிலும் சீராக பரவும், இதனால் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ரவுட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரவுட்டராக வாங்குங்கள். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரவுட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.ரவுட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரவுட்டரிடம் இருந்து, உங்கள் ரவுட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.

வை-பை பயன்பாடு
ஒரே வை-பை கனெக்டிவிட்டியை பலர் பயன்படுத்தும்போதும் வேகம் குறையும். அதனால் வீட்டில் ஏதேனும் விசேஷம், அதிகம் பேர் வருவார்கள் எனில், வை-பை ரவுட்டரில் சில செட்டிங்ஸ் மூலம் அதன் பயன்பாட்டை நீங்களே குறைத்துக் கொள்ளுங்கள். முதலில் ரவுட்டரின் அட்மின் செட்டிங்ஸ் சென்று, வயர்லெஸ் ஆப்ஷனில் கெஸ்ட் நெட்வொர்க் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும். இதுதவிர உங்களது ரவுட்டர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை குறைக்க முடியும். சில ரவுட்டர்களில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனத்தை முடக்கவோ அல்லது நீக்கவும் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறன.

வை-பை ரிப்பீட்டர்
சில ரவுட்டர்களால் வீடு முழுக்க சிக்னல்களை வழங்க முடியாமல் போகலாம், இதனால் இன்டர்நெட் வேகம் குறையும். இதை சமாளிக்க ரிப்பீட்டரை பயன்படுத்தலாம். ரிப்பீட்டர் பயன்படுத்தும் போது வை-பை சிக்னல் முன்பைவிட அதிக இடங்களுக்கு பரவும். இதை செயல்படுத்த ரவுட்டரில் உள்ள WPS ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும். இதற்கு ரிப்பீட்டரில் உள்ள WPS பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. இந்தியாவில் வை-பை ரிப்பீட்டர்களின் விலை, ரூ.1000 முதல் துவங்குகிறது. பயன்படுத்தும் ரவுட்டர் பழயதாக இருந்தாலும், அவற்றையும் ரிப்பீட்டர் போன்று பயன்படுத்த முடியும்.

வை-பை பாஸ்வேர்டு
வை-பை இணைப்புகளில் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும். பழைய பாஸ்வேர்டுகளை நீண்ட நாள் பயன்படுத்தும் போது, சிலர் உங்களது இணைப்பை திருட்டுத்தனமாகவோ, அல்லது நீங்கள் அவசரத்திற்கு வழங்கியவர், தொடர்ந்து உங்களது வை-பை பயன்படுத்தலாம். இவ்வாறு வை-பை திருடப்படாமல் இருக்க, பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது நல்லது. ஏனெனில், எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து வை-பை வேகம் மாறுபடும்.

ரீசெட் செய்யுங்கள்
அலுமினியம், சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரன்ட்டி. அதேபோல் ரவுட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். அவ்வப்போது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும், அதிக பயன்தரக்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்னைகள் தன்னாலேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

 – தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g