இன்ஸ்டாவில் வைரல் ஆகும் பியூட்டி சேலஞ்ச்

‘இன்ஸ்டாகிராம் வெர்சஸ் ரியல் லைஃப்’ என்கிற பியூட்டி சேலஞ்ச் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 

இன்றைய இணையவாசிகள் தமது நிஜத் தோற்றத்தைவிட, இன்ஸ்டாகிராம் தோற்றத்தைதான் பெரிதும் விரும்புகின்றனர். அதற்காகவே மெனக்கெட்டு மேக் அப் தொடங்கி லொக்கேஷன் வரை சரியாக இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். குறிப்பாக மற்றவர்களை ஈர்ப்பதற்கென்றே, நினைத்துப் பார்க்க முடியாத சேலஞ்சுகளையெல்லாம் தன் நண்பர்களுக்குக் கட்டளையிடுகின்றனர். சமீபத்தில் கூட ‘கிகி சேலஞ்ச்’ உலகம் முழுவதும் மக்களை ஆட்டி வைத்தது. அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புது பியூட்டி சேலஞ்ச் களை கட்டிவிட்டது.

அதாவது எப்போதும் நாம் அழகாக இருக்க வேண்டும் எனவும்,  பல லைக்ஸ் பெற வேண்டும் எனவும் எண்ணித்தான் போட்டோ எடுத்து அப்லோடு செய்கிறோம். அப்படியிருக்க மேக் அப் அல்லாத உண்மையான முகம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவதுதான் இந்த சேலஞ்ச்.  ஒரு பக்கம் மேக் அப் செய்யப்பட்ட முகம், மற்றொரு புறம் மேக் அப் இல்லாத முகம்.  ‘இன்ஸ்டாகிராம் வெர்சஸ் ரியல் லைஃப்’ என ஹாஷ் டாக் வைத்து போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். ரீல் பக்கத்தில் அலைபேசியில் காணும் இன்ஸ்டாகிராம் ஃபிரேமை தங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப வரைந்து அசத்துகின்றனர். சிலர் கண்களில் இன்ஸ்டாகிராமின் ஐக்கான் நிறங்களை ஐஷாடோவாக தீட்டி புகைப்படம் எடுக்கின்றனர்.

இந்த சேலஞ்சிற்கு இன்ஸ்டாகிராம் பியூட்டி ப்ளாகர் டாமினிக் பொர்ராஸ் (Dominic Porras) தான்  காரணம். இவர் தனது மேக் அப் போரடிக்காமல் இருக்க வித்தியாசமான மேக் அப்களைச் செய்து அசத்துவது வழக்கம். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முன் T- ZONE பகுதியை மட்டும் ஹைலைட் செய்த மேக்அப் போட்டோவை அப்ளோட் செய்திருக்கிறார். அதை அவரது  ரசிகை ஒருவர் தற்போது கவனித்திருக்கிறார். மேலும் அதை தானும் முயற்சி செய்து அப்ளோட் செய்ய, அது அப்படியே வைரலாகிக் கொண்டிருக்கிறது.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g