சிறந்த 5 கேமிங் ஸ்மார்ட்போன்கள்!

இப்போது ஸ்மார்ட்போன்களின் கேம் விளையாடுவதுதான் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. “ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, இது கேம் விளையாட வசதியாக இருக்குமா?” என்று யோசிப்பவர்களுக்காக e1life.com சிறப்பான 5 கேமிங் ஸ்மார்ட்போன்களை பட்டியலிடுகிறது.

விளையாட்டுப் பிரியர்களுக்கான கேமிங் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதும் பெரிய குழப்பமான விஷயம் எல்லாம் கிடையாது. விளையாட்டுக்கு ஏற்ற அம்சங்களை முன்னிறுத்தி, அதற்கேற்ற ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அம்சங்களை இணைத்து, கேமிங் ஸ்மார்ட்போன்களை செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன. சக்திமிக்க புராசஸர், அதிக ஜி.பி., மெமரி கொண்ட ரேம், கிராபிக் அம்சம், சிறந்த ஆடியோ, நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் சக்திவாய்ந்த பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் சிறப்பாக இருந்தால் தான், அது சிறந்த கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

அண்மையில் வெளியாகியுள்ள சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்களில் சிலவற்றை, உங்களுக்காக பட்டியலிட்டிருக்கிறோம்:

ஸியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ!
சிறப்பம்சங்கள்:
*5.99 இன்ச் 2160 x 1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2. ரேஷியோ, 5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
* 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 636 சிப்செட்
* அட்ரினோ 509 GPU
* 4 ஜி.பி., / 6 ஜி.பி., ரேம்
* 64 ஜி.பி., இன்டெர்னல் மெமரி
*மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உண்டு
*ஆண்ட்ராய்டு 7.1.2 நூகத் சார்ந்த MIUI 9
*ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
*12 எம்.பி., பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்பெர்ச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
* 5 எம்.பி., பிரைமரி கேமரா, f/2.0 அப்பெர்ச்சர்
* 20 எம்.பி., செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்பெர்ச்சர், எல்இடி பிளாஷ்
*கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
* 4ஜி வோல்ட்இ, வை-பை. புளுடூத்
* 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

இந்தியாவில் ஸியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜி.பி., ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜி.பி., ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும்.

நோக்கியா 7 பிளஸ் !
சிறப்பம்சங்கள்:
* 6.0 இன்ச் 2160 x 1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2. ரேஷியோ, 5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
*கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
*ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 660 சிப்செட்
*அட்ரினோ 512 GPU
*4 ஜி.பி., ரேம்
*64 ஜி.பி., இன்டெர்னல் மெமரி
*மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உண்டு
*ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
*ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
*12 எம்.பி., + 13 எம்.பி., பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
*16 எம்பி செல்ஃபி கேமரா
*கைரேகை சென்சார்
*4ஜி வோல்ட்இ, வை-பை, புளுடூத்
*3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் சமீபத்தில் விற்பனை துவங்கப்பட்ட நிலையில், நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக்/காப்பர் மற்றும் ஒயிட் /காப்பர் என டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளம் மற்றும் சங்கீதா, பூர்விகா, பிக் சி, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆஃப்லைன் வர்த்தக மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை, ரூ.25,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாவே நோவா 3 !
சிறப்பம்சங்கள்:

*6.3 இன்ச் 2340 x 1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் திரை , 19:5:9 ரேஷியோ, 3D வளைந்த கிளாஸ்.
*ஆக்டா-கோர் ஹூவாவே கிரின் 970 10nm புராசஸர்
*மாலி-G72 MP12 GPU
* i7 கோ-புராசஸர், NPU, GPU டர்போ
*6 ஜி.பி., ரேம்
*128 ஜி.பி., இன்டெர்னல் மெமரி
*மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உண்டு
*ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
*ஹைப்ரிட் டூயல் சிம்
*16 எம்.பி., பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, CAF
*24 எம்.பி., இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.8
*24 எம்.பி., செல்ஃபி கேமரா, f/2.0
*2 எம்.பி., இரண்டாவது செல்ஃபி கேமரா
*கைரேகை சென்சார்
*டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, புளுடூத், யுஎஸ்பி டைப்-சி
* 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹூவாவே நோவா 3 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோவா 3 ஸ்மார்ட்போனின் விலை, ரூ.34,999/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6!
சிறப்பம்சங்கள்:
* 6.28 இன்ச் 2280 x 1080 பிக்சல், ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரேஷியோ,  அமோலெட் டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
* 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 சிப்செட்
* அட்ரினோ 630 GPU
*8 ஜி.பி., ரேம்
* 128 ஜி.பி., இன்டெர்னல் மெமரி
* ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
* டூயல் சிம் ஸ்லாட்
* 16 எம்.பி., + 20 எம்.பி., பிரைமரி கேமரா
*16 எம்.பி., செல்ஃபி கேமரா
* கைரேகை சென்சார்
* வாட்டர் ரெசிஸ்டன்ட்
* 4ஜி வோல்ட்இ, வை-பை, புளுடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 6 சில்க் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி., ரேம், 128 ஜி.பி., இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை, ரூ.39,999/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சிவப்பு, சில்வர் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

விவோ நெக்ஸ்!
சிறப்பம்சங்கள்:

* 6.59 இன்ச் 2316 x 1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் திரை; 19:3:9 ரேஷியோ
* 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 845 சிப்செட்
* அட்ரினோ 630 GPU
* 8 ஜி.பி., ரேம்
* 128 ஜி.பி., இன்டெர்னல் மெமரி
* 8 டூயல் சிம் ஸ்லாட்
* ஃபன் டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
* 12 எம்.பி., டூயல் PD பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8
* 5 எம்.பி., இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
* 8 எம்.பி., செல்ஃபி கேமரா, f/2.0
* இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
* டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, புளுடூத், யுஎஸ்பி டைப்-சி
* 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் விலை, இந்தியாவில் ரூ.44,990/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களின் புராசஸர் மற்றும் பேட்டரி திறன்கள் சிறப்பானதாக இருப்பதால், இவை அனைத்தும் நீண்ட நேரம் கேம் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், அனைத்து ஸ்மார்ட்போன்களின் ரேம் திறனும் நன்றாகவே இருக்கின்றன. திரையின் அளவும் பெரியதாக இருப்பதால், கேம் விளையாடும்போது, சிறந்த அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கும்.

-தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g