விஜய் சேதுபதியுடன் த்ரிஷா மோதுகிறார்- இந்தவார ரிலீஸ் மூவீஸ்! #MovieTrailer

விஜய் சேதுபதியுடன் த்ரிஷா மோதுகிறார்- இந்தவார ரிலீஸ் மூவீஸ்! #MovieTrailer

இந்த வாரம்… தமிழில் விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தோடு போட்டிப்போட போகிறது, த்ரிஷாவின் மோகினி. ஹாலிவுட்டில் ஆக்‌ஷன் நாயகன் டாம் க்ரூஸ் களமிறங்கியிருக்கிறார். தவிர மலையாளம், இந்தி என இந்த வாரம் வெளியாக்கும்  படங்கள் பற்றிய அறிமுகம்….!

ஜுங்கா:

நடிகர்கள்            : விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா சபாஸ்டியன்
தயாரிப்பு            : விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்
படத்தொகுப்பு : வி.ஜே.சாபு ஜோசப்
ஒளிப்பதிவு       : டியூட்லே
இசை                   : சித்தார்த் விபின்
இயக்கம்             : கோகுல்

சென்னையில் பிரபல டானாக இருக்கும் விஜய் சேதுபதி, கடத்தல் அசைன்மென்ட்டுக்காக  வெளிநாடு செல்கிறார். அவர் யாரைக் கடத்துகிறார்? சென்ற காரியம் நிறைவேறியதா என்பதை காமெடியுடன் சொல்லும் படம். இதில் கஞ்சத்தனமான கேங்ஸ்டராக நடித்திருக்கிறார் சேதுபதி.

மோகினி:

நடிகர்கள்              : த்ரிஷா
தயாரிப்பு              : மார்வல் வொர்த் புரொடக்‌ஷன்ஸ்
படத்தொகுப்பு    : தினேஷ் பொன்ராஜ்
ஒளிப்பதிவு         : குருதேவ்
இசை                       : விவேக் மார்வின் ; பின்னணி இசை : அருள்தேவ்
இயக்கம்                : ரமணா மாதேஷ்

மோகினி, வைஷ்ணவி என, இரண்டு வேடங்களில் த்ரிஷா நடித்திருக்கும்  த்ரில்லர் படம். வைஷ்ணவி சாதாரண பெண். மோகினி, தப்பை தட்டிக்கேட்கும் அதிரடியானவர். மோகினிக்கு ஏற்படும் பிரச்னை, அதில் வைஷ்ணவி எப்படி சிக்குகிறார், பிறகு என்னவானது என்பதே கதை. அரண்மனை-2, நாயகி படங்களைத் தொடர்ந்து த்ரிஷாவின் மூன்றாவது பேய் படம் இது!

சாஹிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 (ஹிந்தி ):

நடிகர்கள்            : சஞ்சய் தத், ஜிம்மி ஷார்கில் , மஹி கில்
தயாரிப்பு             : ஜார் பிக்சர்ஸ்
படத்தொகுப்பு : பர்வின்
ஒளிப்பதிவு        : அமலன்ட் செளத்ரி
இசை                    : தர்மா விஷ்
இயக்கம்             : திக்மான்ஷு துலியா

சாஹிப்பாக ஜிம்மி ஷார்கில், பிவியாக ஜிம்மி ஷார்கில் மற்றும் கேங்ஸ்டராக சஞ்சய் தத். மூவரும், மூன்றுவித அதிகாரங்களைக் கொண்டவர்கள். அவர்களின் தேவை என்ன, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னை என உளவியலும், அதிரடியும், அரசியலும் கலந்த படம் இது. முந்தைய இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பினால்,  இந்தி திரையுலகில் எதிர்பார்க்கப்படும் படம்.

மரடோனா (மலையாளம் ) :

நடிகர்கள்           : டோவினோ தாமஸ் , செம்பன் விநோத் ஜோஸ், ஷரன்யா ஆர்.நாயர்
தயாரிப்பு            : மினி ஸ்டூடியோஸ்
படத்தொகுப்பு : சய்ஜூ ஸ்ரீதரன்
ஒளிப்பதிவு       : தீபக் டி.மேனன்
இசை                    : சுஷின் சியாம்
இயக்கம்            : விஷ்னு நாராயன்

மரடோனா என்றதுமே கால்பந்து தொடர்பான திரைப்படம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மரடோனா என்பது நாயகன் டோவினோ தாமஸின் பெயர். இரண்டு நண்பர்கள் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னையே கதைக்களம்.

மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட் (ஆங்கிலம்):

நடிகர்கள்            : டாம் க்ரூஸ், ஹென்ரி கவில் ,
தயாரிப்பு             : பேட் ரோபோட் புரொடக்‌ஷன்ஸ், ஸ்கை டேன்ஸ் மீடியா
படத்தொகுப்பு : எட்டி ஹேமில்டன்
ஒளிப்பதிவு       : ராப் ஹார்டி
இசை                   : லோர்ன் பால்ஃபி
இயக்கம்            : கிரிஸ்டோபர் மெக்கோர்ரி

அதிரடி, ஆக்‌ஷன் பட விரும்பிகளின் தேவையை பூர்த்தி செய்யும் பட வரிசைகளில் மிக முக்கியமானது மிஷன் இம்பாசிபிள். செய்ய முடியாத விஷயங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து காட்டும் ஆக்‌ஷன் நாயகன் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஆறாவது பாகமே, ஃபால் அவுட்.  அதே அதிரடி, அதே வேகம், வேட்டு சத்தம், வில்லனோடு சண்டை என இந்த பாகமும் மகிழ்விக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g