மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை எவ்வாறு தேர்வு செய்வது?

மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை எவ்வாறு தேர்வு செய்வது?

பருவ மாற்றத்திற்கு ஏற்ப ஆடை அணிகலன்களையும் மாற்ற வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் சரியான காலணிகளை ஆடைக்கு ஏற்பத் தேர்வு செய்வதே நமக்கான மிகப்பெரும் டாஸ்க். காலணியைத் தேர்வு செய்யும் முன் மழை நீர் தேக்கம், சாலைச் சேதாரம், குண்டுக் குழிகள் என எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம் தோற்றத்திற்கு முழுமை அளிப்பதில் முக்கிய பங்களிப்பு  காலணிகளுக்கும் உண்டு. அவை சவுகரியம், உடல்நலம் என்பதைத் தாண்டி, இன்று முற்றிலும் ஃபேஷன் கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றன. மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகள் எவை என்பதை அளிகிறது e1 லைஃப்.

ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் மெட்டீரியல்


மழைக்காலத்திற்கு லேசான மெட்டீரியல் மற்றும் பேஸ்டல் நிறங்கள்தான் பொருத்தமானவை. இந்த வகையில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் ஷூக்களை அணியலாம். லெதருக்கு இணையான ரிச் அண்ட் கலர்புல் லுக்கை இவை அளிக்கும்.  டார்காய்ஸ் கிரீன், டஸ்ட் பிங்க், டீல் ப்ளூ மற்றும் பளீர் பிங்க் ஆகிய நிற காலணிகள், ஆடைக்குப் பொருத்தமாக இருக்கும். பிளாஸ்டிக் ஷூக்களை வாங்கும்போது, கூர்மையான முனை இல்லாததாக வாங்குங்கள். அதேபோல் சுற்றிலும் பிசுறுகள் இல்லாத சரியான தயாரிப்பாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் கால்களைக் கடிக்க நேரிடும்.

ஃபீல் பிரீ ஃபிளிப்லாப் காலணிகள்


மழைக்காலத்தில் குண்டும் குழிகளும் அதிகம் இருக்கும் என்பதால்,உங்கள் மிருதுவான பாதங்களுக்கு பிளிப்லாப் செருப்புகள் அணிவதுதான் சரியானத் தேர்வு. இவை பாண்டி பஜார் போன்ற ஃபேஷன் தெருக்களில் குறைந்த விலைக்குக் கண்கவரும் ஃபுளோரல் டிசைன்களில் கிடைக்கின்றன.

கூல் க்ராக்ஸ் காலணிகள்


க்ராக்ஸ் அணிவதும் உங்கள் பாதங்களுக்குச் சவுகரியமாக இருக்கும். மழை நீர் கால்களுக்குள் செல்லாமல் இருக்கும். ஈரப்பதமும் உள்ளிழுக்காமல் கால்களுக்கு உறுதியளிக்கும். க்ராக்ஸ் பளீர் நிறங்களில் கிடைப்பதால் இவை உங்கள் லேசான ஆடைக்கு எடுப்பாக இருக்கும்.

பளபளக்கும் பல்லேரினா ஷூ


பல்லேரினா ஷூக்கள்தான் இன்று டிரெண்ட். அவை மழைக்காலத்திற்கும் ஏற்றது என்பதால், உங்கள் விருப்பம் போல் அணிந்துக் கொள்ளலாம். இவற்றிலேயே முற்றிலும் மூடியபடி இல்லாமல், கால் விரல் பகுதி திறந்த டிசைன்கள் காற்றோட்டத்திற்கு ஏதுவாக இருக்கும். இல்லையெனில் ஈரப்பதம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஃபார்மல் ஆடைகளுக்கு இவை பக்கா பொருத்தம்.

ஹீல் விரும்பிகளுக்கு மாற்று


ஹீல் அணிய விரும்புவோருக்கு மழைக்காலம் என்பது சற்றுக் கடுப்பாகத்தான் இருக்கும். இருப்பினும் அதற்கென இருக்கும் மாற்றுதான் பிளாட் ஹீல் காலணிகள். இவைத் தரையில் சமதளமாக இருப்பதால் பாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 2 இன்ச் -சிற்கு மேல் இருக்கும் ஹீலைத் தவிருங்கள். இருப்பினும் அதிகம் நடக்கும் வேலையாக இருக்கும் பட்சத்தில் இந்தக் காலணியைத் தவிர்க்கலாம்.

உறுதியான காலணிகள்

எந்த ஷூ அல்லது காலணியைத் தேர்வு செய்தாலும், அவை ஈரத்தில் வழுக்குவது, நழுவுவதாக இல்லாமல், பாதங்களுக்கு உறுதியளிக்கக் கூடியதாக வாங்குங்கள். எனவே காலணியை வாங்கும் முன் நன்றாக அணிந்து நடந்து பார்த்து, சவுகரியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

  • லெதர் மெட்டீரியல் ஷுக்களைத் தவிர்த்திடுங்கள். லெதர் ஈரத்தை உறிஞ்சும் தன்மைக் கொண்டது. இதனால் மழை நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், லெதரின் எளிதில் ஒட்டிக் கொள்ளும். துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.  சருமத்திலும் பாதிப்பு உண்டாகும்.  அது மட்டுமல்ல, லெதர் ஷூக்கள் மழைக்காலங்களில் விரைவில் காயாது.
  • மழைக் காலங்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்னீக்கர்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். இவை ஈரத்தை உள்ளிழுத்து பாக்டீரியாவை தக்க வைத்துக் கொள்வதோடு, அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கும். இது கால்களுக்கு அரிப்பு, புண்களை ஏற்படுத்தும்
  • காலணிகளை பொதுவாக ரேக் அல்லது கட்டிலுக்குக் கீழ் வைக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். மழைக்காலங்கள் அப்படி வைப்பதைத் தவிர்க்கவும்.  ஈரத்துடன் அப்படியே வைப்பதால் அவை பாதிக்கப்படும்.  வெயில்படும்படி காற்றோட்டமான இடத்தில் வையுங்கள். தரையில் வைக்காமல் சுவற்றில் சாய்த்து வைத்தால் நீர் சீக்கிரம் வடிய ஏதுவாக இருக்கும்.

கால்களுக்கும் அக்கறைத் தேவை

  • என்னதான் காலணிகளை அணிந்து சென்றாலும்  மழைக்காலத்தில் மண், சேறு சகதிகள் நிச்சயம் கால்களில் படும். அதனால் வீடு திரும்பியதும்  கால்களை எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீர் கொண்டு தேய்த்துக் கழுவுங்கள். அதேபோல் குளிர்ந்த நீரில் உப்பு கலந்து, அதில் உங்கள் கால்களை 2 நிமிடங்கள் ஊற வைத்து, நன்குத் தேய்த்தும் கழுவலாம்.
  • மழை நாட்களில் ஆசை ஆசையாக வளர்த்த நகங்கள் ஈரத்தில் பட்டு உடைந்துவிடக் கூடும். அதற்கு இரவில் தூங்கும் முன் எலுமிச்சைச் சாற்றில் ஆலிவ் ஆயில் மற்றும் தேன் கலந்து நகங்களில் தடவி, மசாஜ் செய்து காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
  • கற்றாழை ஜெல்லை இரவில் நகங்களில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g