ரூ.669க்கு கேமரா ஃபோன்! அதிரடி லோ-பட்ஜெட் போன்கள்!

ரூ.669க்கு கேமரா ஃபோன்! அதிரடி லோ-பட்ஜெட் போன்கள்!

எங்கும் அளவில் பெரிய ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், பீச்சர் போன்களின் தேவைக்கும் குறைவில்லை. விலை குறைவானவை என்பதால் மட்டுமல்ல, அதிக ஃபீச்சர்கள் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களால் நேரம் அதிகம் வீணாகிறது என்று நினைப்பவர்களும் கூட பேசிக் விஷயங்கள் மட்டுமே கொண்ட பீச்சர் போன்களை விரும்புகின்றனர். கேமரா, மியூசிக் பிளேயர், இன்டர்நெட் உள்ளிட்ட அடிப்படை அம்சஙக்ள் கொண்ட, அண்மையில் வெளியான iVVO மற்றும் எம்-டெக் பிராண்ட்களில் சில மாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

iVVO ஈகோ சீரிஸ் போன்கள்

‘iVVO’ என்ற பெயரில், குறைந்தவிலை செல்போன் தயாரிப்பில் புதிதாக இறங்கியிருக்கும் பிரிட்ஸோ நிறுவனம், ரூ.569 முதல் ரூ.669 வரை விலைகள் கொண்ட ‘ஈகோ சீரிஸ்’ மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. iVVO IV1801, iVVO IV1805s மற்றும் iVVO ஈகோ பீட்ஸ் ஆகிய இந்த மாடல்கள், கிராமப்புற வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் என்று பிரிட்ஸோ நிறுவனம் கருதுகிறது.

இந்த மூன்று மாடல்களிலும், டூயல் சிம், 1000 mAh பேட்டரி, MP3 மற்றும் MP4 பிளேயர், எல்.இ.டி., டார்ச், புளுடூத், ஒன் டச் மியூசிக் அக்சஸ், 1.8 இஞ்ச் திரை, ஜி.பி.ஆர்.எஸ்., வெப் பிரவுசர், வயர்லெஸ் FM, பிரமைமரி கேமரா, 32 ஜி.பி., வரை நீட்டிக்கக் கூடிய நினைவகத்திறன் ஆகிய அம்சங்கள் உள்ளன. IV1805s மாடலில் கூடுதலாக செல்பி கேமராவும், வைப்ரேஷன் மோட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்-டெக் ராகா & எம்-டெக் V10

எம்-டெக் ராகா

உள்நாட்டு செல்போன் தயாரிப்பு நிறுவனமான எம்-டெக் மொபைல், ‘ராகா’ ‘ V10’ ஆகிய இரண்டு குறைந்த விலை மாடல்களை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலைகள் முறையே, ரூ.1250 மற்றும் ரூ.1,199 ஆகும்.

எம்-டெக் V10

இரண்டு மாடல்களிலும் டூயல் சிம், 2.4 இஞ்ச் திரை, FM ரேடியோ, MP3 பிளேயர், வீடியோ பிளேயர், புளுடூத், ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங், ஆட்டோ கால் ரெக்கார்டிங், மொபைல் டிராக்கர், டார்ச், 32 ஜி.பி., வரை நீட்டிக்கக்கூடிய நினைவகத்திறன், உள்ளிட்ட அம்சங்களுடன் நீடித்து நிற்கும் 1600 எம்ஏஹெச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ராகா மாடலில் டூயல் டிஜிட்டல் செல்பி கேமராவும், V10 மாடலில் டிஜிட்டல் பிரைமரி கேமராவும் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g