ஃபிஃபா கிஸ் முதல் கமல் சாங் வரை..! சென்ற வார வைரல் வீடியோஸ்

ஃபிஃபா கிஸ் முதல் கமல் சாங் வரை..! சென்ற வார வைரல் வீடியோஸ்

‘உவுசாலா ஊதி ரொனால்டோவை வம்புக்கு இழுத்த ரசிகர்கள்’, ‘இருந்தாலும் முத்தமிடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்’,  ‘நாசுக்காக நடிகர் ஜெய்யை மிரட்டிய போஸீஸ்’ இன்னும் நிறைய… சென்ற வார வைரல் வீடியோஸ் லிஸ்ட்!

முத்தமிட நினைத்தால் இனி உதை தான்!

ஃபிஃபா உலககோப்பை போட்டியைக் காண, ஒட்டுமொத்த கால்பந்து பிரியர்களும் ரஷ்யாவை முகாமிட்டுள்ளனர். அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நாக் அவுட் சுற்று இன்றுமுதல் தொடங்குகிறது. நிஜ போர் இனிதான். பல அதிசயங்களும், ஆச்சர்யங்களும் மைதானத்தில் நிகழவிருக்கின்றன.  அட, மைதானத்தில் மட்டுமல்ல, வெளியிலும் ரசிகர்கள் ஏதாவது குறும்பு செய்வதும், விரும்பியே பிரச்னையை விலைக்கு வாங்குவதும் ஃபிஃபாவில் வழக்கம். குறிப்பாக, நேரலையில் பேசும் பெண் ஊடகவியலாளர்களை, ரசிகர்கள் முத்தமிட முனைவார்கள்.  அந்த அத்துமீறலுக்கு இணையத்தில் வசவுகள் குவிந்தாலும் ரசிகர்கள் திருந்தியபாடிலை. கடந்த சில தினத்திற்கு முன்பு, பிரேசிலின் பெண் நிருபர் ஜூலியா நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது,  ஒருவர் முத்தமிட நெருங்கவும், ஜூலியா சுதாரித்துக் கொண்டு, அவரை திட்டித் தீர்த்தார். அந்த நபரும்  மன்னிப்பு கேட்டு நகர்ந்துவிட்டார்.  அந்த நபருக்கு திட்டும், ஜூலியானாவிற்கு வாழ்த்தும் இணையத்தில் குவிகிறது.

ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்… #ப்ளீஸ்! 

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ் படம்’, தமிழ் சினிமாவின் கலாய் இலக்கியம். இப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை ரிலீஸாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த வாரம் வெளியாகி செம ஹிட். முதல் பாகத்தில் திரைப்படங்களை மட்டும் கலாய்த்த இயக்குநர், இந்தமுறை அரசியலையும் சேர்த்து வாருகிறார். கடந்த வாரம் டிரெய்லர் என்றால், இந்த வாரம் ‘நான் யாரும் இல்லை…’ பாடல் வீடியோ ரிலீஸ்! நான் அவன் இவன், அதை செய்வேன், இதை செய்வேன் என எழதப்படும் ஹீரோயிஸ பாடல்களை மண்ணைக் கவ்வ வைக்கிறது இந்த பாட்டு.

திக் திக்… இமைக்கா நொடிகள்! 

புதிது புதிதாக கேரக்டர்களை தேடி நடித்து வருகிறார் நயன்தாரா. குறிப்பாக, கதாநாயகி மையமான  படங்களாக தேர்வு செய்து நடித்து, முத்திரை பதித்துவருகிறார் நயன். அவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘இமைக்கா நொடிகள்’. போலீஸ் அதிகாரியாக நயன், அவரின் தம்பியாக அதர்வா மற்றும் பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லன் என ‘டிமாண்டி காலனி’ இயக்குநர் அஜய்ஞானமுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கில்லர் அனுராக். அவரைத் தேடும் போஸீஸ் அதிகாரி நயன், இவர்களுக்கு நடுவே நடக்கும் த்ரில் சம்பவங்களே கதை.  அதற்கு சாம்பிள் இந்த டிரெய்லர் வீடியோ! பாருங்க, உங்களுக்கே புரியும்.

ரொனால்டோவை வம்புக்கிழுத்த ரசிகர்கள்!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் செய்யும் அலம்பலுக்கு அளவே கிடையாது. இந்த முறை ரஷ்யாவில் நடந்துவரும் உலக கோப்பையில் பல அட்ராசிட்டிகளை செய்து வருகின்றனர் குறும்புக்கார ரசிகர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு  போர்ச்சுகல் – ஈரான் அணிகள் மோதின. அந்த போட்டி 1-1 டிராவில் முடிந்தது. ஒட்டுமொத்த விளையாட்டிலும் சோர்வாகவே காணப்பட்டார் ரொனால்டோ. அதற்கு காரணம் ஈரான் ரசிகர்கள். போட்டியின் முந்தைய நாள் இரவு, போர்ச்சுகல் அணி தங்கியிருந்த விடுதியின் முன்பு, ஈரான் ரசிகர்கள்  உவுசாலா ஊதியும், மேளம் அடித்தும் ஆடிப்பாடி ரகளை செய்திருக்கிறார்கள். தூங்க முடியாமல் தவித்த ரொனால்டோ ஜன்னல் வழியாக, தூங்கிக் கொண்டிருப்பதாக சைகை காட்டியும், ஈரான் ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. இரவு தூக்கத்தை தொலைத்தார் ரொனால்டோ. அந்த வீடியோ  இப்போது இணையத்தில் செம வைரல்.

நடிகர் ஜெய்க்கு பாடம் புகட்டிய போலீஸ்! 

அப்போது இரவு ஒன்றரை மணி இருக்கும். நுங்கம்பாக்கம் பக்கத்தில் அதிக சத்தத்தை எழுப்பிக்கொண்டு ஒரு கார் வேகமாக சென்றது. அந்த வண்டியில் தடை செய்யப்பட்ட சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த போலீஸ் அதிகாரிகள் அந்த கருப்பு நிற காரை மடக்கிப் பிடித்தனர். குடி போதையில் அந்த காரை ஓட்டிச் சென்றவர் நடிகர் ஜெய். இந்த மாதிரி பலமுறை போலீஸில் ஜெய் சிக்கியிருக்கிறார்  என்பதால், அவருக்கு அபராதம் விதிப்பதில் எந்த பயனுமில்லை என்று உணர்ந்த காவல் அதிகாரி, அவரை வைத்தே, அவருக்கு பாடம் புகட்ட ஒரு வீடியோவை ஷூட் பண்ண, அது செம வைரல்தான்.

இனி அதிக ஒலி எழுப்பும் கார்களை ஓட்டாதீர்கள் என்று ஜெய் தன்னுடைய காரை காட்டியே சொல்வதை பதிவு செய்து, வீடியோவாக இணையத்தில் வெளியிட்டார்கள் போஸீஸ் அதிகாரிகள். அசிங்கப்பட்டதுமில்லாமல் அறிவுரை வேறு..! என ஜெய்யை கலாய்த்து தள்ளுகின்றனர் நெட்டிசன்கள்.

நானாகிய நதிமூலமே! 

மக்களுக்காக மய்யம், சம்பாத்தியத்திற்காக பிக்பாஸ், இதற்கு நடுவே எப்படியாவது விஸ்வரூபம் 2 ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார் கமல். முன்னோட்டமாக, இப்படத்தில் இடம்பெறும் நானாகிய நதிமூலமே பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல். தன்னுடைய அம்மாவிற்காக கமல் பாடுவது போல இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜிப்ரான் இசையில் கமலே எழுதி, பாடியும் இருக்கிறார். கமலோடு கெளசிக் சக்கரபதி மற்றும் கார்த்திக் சுரேஷ் ஐயர் இருவரும் பாடியுள்ளனர்.

“அம்மாவும் நீ
அப்பாவும் நீ
அன்பால் என்னை ஆண்டாளும் நீ
பிறந்த பயனாய் உன்னை பெறும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்’

– என ஒவ்வொரு வரியும் நச் மெலடி. கடந்தவாரம் காலா படத்திலிருந்து ரஜினியின் ‘கண்ணம்மா ‘ பாடல் ஹிட்டானது போல, இந்த வாரம் கமலின் நானாகிய நதிமூலம்  பாடலைச் சொல்லலாம்.

சூப்பர் ஹீரோ ஆஃபிசர் போன்சே!

யார் உயிருக்காவது ஆபத்து என்றால், ஓடோடிச்சென்று காப்பாற்றும் ஆஃபிசர் போன்சே தான், ஸ்பெயின் நாட்டின் சூப்பர் ஹீரோ. யார் இந்த ஆஃபிசர் போன்சே? ஸ்பெயின் நாட்டின் போலீஸ் பயிற்சி பெற்ற நாய் அது. ஸ்பெயின் நாட்டு மாட்ரிட் காவல் துறையினர் தன்னுடைய ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நாய்கள் பயிற்சியாளரான ஒரு காவல் துறை அதிகாரி மயங்கி விழுவது போல நடிக்கிறார். உடனே ஆஃபிசர் போன்சே ஓடிச்சென்று காப்பாற்றுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் செம வைரல். ‘உலகத்தில் நம்மை அதிகம் நேசிப்பது நாயாக மட்டும் தான் இருக்க முடியும்’ என்கிற ட்விட்டோடு பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை, 20 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ஷேர் செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g