நற்சுவை கொண்ட நாகலாந்து உணவுகள்#TasteOfIndia

நற்சுவை கொண்ட நாகலாந்து உணவுகள்#TasteOfIndia

நாகலாந்து மக்களை போலவே, அவர்களின் உணவுகளும் தனித்துவமானவை. இந்திய மாநிலத்தின் சுவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வடகிழக்கின் சுவையும், தனித்துவமான உணவுக் கலாச்சாரமும் கொண்டவை நாகலாந்து உணவுகள். பேம்பூ ஸ்டீம்டு பிஷ், பீன்ஸ் மிக்ஸ், நாகா கொஸ்த் சில்லி சாஸ், நாகா கிராப் கேக்ஸ், சிக்கன் குளுடினஸ் ரைஸ் சூப், ரைஸ் பீர் உள்ளிட்ட வெரைட்டியான உணவுகள், அவர்களின் உணவுப் பட்டியலில் முதன்மையாக இடம்பெறுகின்றன.

எய்ட் சிஸ்டர்ஸ் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து மாநிலமும் ஒன்று. இங்கு சுமார் 16 இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள 16 இனக்குழு மக்களும், தங்களுக்கென தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை ஆகியவற்றை கொண்டுள்ளனர். ஆனால் உணவில் மட்டும் இவர்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறது. அதையும் தாண்டி தங்களுக்கென பிரத்யேகமான உணவுகளையும் ஒவ்வொரு குழுவினரும் தயாரிக்கின்றனர். அரிசி, போர்க், சிக்கன், காய்கறிகள் மற்றும் புகழ்பெற்ற சில்லி சாஸ் ஆகியவை நாகாலாந்து மக்களின் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

நாகாலாந்தில் அதிகமாக ஹோட்டல்களை காண முடியாது. ஹோட்டல் இருந்தாலும், வடஇந்திய உணவு மற்றும் மோமோ தான் அங்கு கிடைக்கின்றன. ஏனென்றால் வீடுகளில் சமைத்து உண்பதையே நாகா மக்கள் விரும்புகின்றனர்.

நாகா உணவுகள்

நான் வெஜிடேரியன் உணவுகளை நாகாலாந்து மக்கள் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். விசேஷ நாட்கள் என்றால் போர்க் உணவையே தேர்வு செய்கின்றனர். அரிசி, இறைச்சி, வேக வைத்த காய்கறிகள், காரமான சில்லி சாஸ் இவையே நாகாலாந்து மக்களின் பொது உணவாகும். குளிர்காலங்களில் தீ மூட்டி, அதனை சுற்றி அமர்ந்து சாப்பிடும் பழக்கமுடைய இவர்கள், மூங்கிலில் செய்யப்பட்ட கப்பில் சூடாக டீ அருந்துவார்கள். நண்டு இவர்களின் பேவரிட் உணவுகளில் ஒன்று.

போர்க் உடன் மூங்கில் சேர்த்து தயாரிக்கப்படும் போர்க் வித் டிரைடு பேம்பூ, இவர்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவு. பேம்பூ ஸ்டீம்டு பிஷ், பீன்ஸ் மிக்ஸ், நாகா கொஸ்த் சில்லி சாஸ், நாகா கிராப் கேக்ஸ், சிக்கன் குளுடினஸ் ரைஸ் சூப் ஆகியவை நாகாலாந்து மக்களின் விருப்பமான உணவு வகைகளாகும். பானங்களில் ரைஸ் பீர், அதாவது அரிசியை புளிக்கச்செய்து தயாரிக்கப்படும் பானம் இவர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

ஸ்மோக்டு போர்க் ஸ்டியு

திறந்வெளியில் வைத்து ,இறைச்சிகளை சமைப்பது, இங்கு பொதுவான வழக்கமாக உள்ளது. நாகர்கள், இறைச்சிகள் துண்டுகள் உலர்த்தி, பின்பு அதனை சமையலில் பயன்படுத்துகிறார்கள். இரண்டு அல்லது முன்று வாரங்களுக்கு உலர்த்திய இறைச்சியைக் கொண்டு, ஸ்மோக்டு போர்க் ஸ்டியு தயாரிக்கபடுகிறது. பல வகையான உள்ளூர் மசாலாகள் மற்றும் காய்கறிகளுடன், போர்க் இறைச்சி சமைக்கபடுவதால், வித்தியாசமான சுவையுடன் இருக்கிறது. வெளியே கிரிஸ்பியாகவும், உட்புறத்தில் ஸ்மோக்டு ப்ளேவரில் இருப்பதால், நாகர்கள் இதனை விரும்பி உண்ணுகின்றனர்.

பிட்டர் மெலன் சீசனிங்ஸ்

காய்கறி வகைகளில் சிறிய ரக பாகற்காய்களை நாகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். பாகற்காய்களைக் கொண்டு விதவிதமான குழம்பு வகைகள் மற்றும் ஊறுகாய்களை தயாரிக்கிறார்கள். வேக வைத்த பாகற்காய்களுடன், சில்லி சாஸ் சேர்த்து சமைக்கப்படும் பிட்டர் மெலன் சீசனிங்ஸ், நாகலாந்தில் மிகவும் பிரபலம். பாகற்காயின் கசப்பு தன்மையும், மிளகாயின் காரமும் கலந்து, பிரத்யேகமான சுவையுடன் பரிமாறப்படுகிறது இந்த உணவு. ரோட்டி மற்றும் சாதத்துடன் சாப்பிட ஏற்றது பிட்டர் மெலன் சீசனிங்ஸ்.

போர்க் வித் டிரைடு பேம்பூ ஷூட்ஸ்

புளிக்க வைத்த மூங்கில் குருத்து நாகாலாந்து மக்களின் பொது உணவாகும். அதிலும் காயவைத்த மூங்கில் குருத்தை, போர்க் உடன் சேர்த்து தயாரிக்கும் உணவை விரும்பி உண்கின்றனர். இந்த உணவு தயாரிப்பின் போது அதிக அளவில் மிளகாய் சேர்க்கப்படுவதால், உணவின் சுவையும் அதிகரிக்கிறது. மூங்கில் குருத்து சேர்க்கபடுவதால் உணவிற்கு என்று தனி மணம் கிடைக்கிறது. பெரிய துண்டுகளாக இறைச்சியை வெட்டி மூங்கில் சேர்த்து காரம் மிகுந்த சுவையுடன் இந்த டிஷ்ஷை தயாரிக்கின்றனர்.

நாகா கோஸ்ட் சில்லி சாஸ்

உலகிலேயே காரமான மிளகாய் என்று வர்ணிக்கப்படும் நாகாலாந்து மிளகாய் கொண்டு தயாரிக்கப்படுவதே, நாகா கொஸ்த் சில்லி சாஸ். மிகவும் காரமான இந்த உணவை முதல் முறை சாப்பிடுபவர்கள் வாய்ப்பகுதியில் வலியை உணருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு காரமாக இருந்தாலும் மிகுந்த சுவையான உணவு இது. மிளகாய் உடன் அதிக அளவில் பூண்டு, வெங்காயம், மூலிகைகள் சேர்த்து நாகா கொஸ்த் சில்லி சாஸ் தயாரிக்கபடுகிறது.

அகுனி

நாகாலாந்து மக்கள் ஆண்டின் எல்லா நாட்களும் தயார் செய்யும் உணவு வகை அகுனி. இந்த உணவு சோயா பீன்ஸ் கொண்டு சமைக்கபடுகிறது. நாகாலாந்தில் தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உட்கொள்ளும் உணவு வகை அகுனி. சோயா பீன்ஸை சுத்தம் செய்து வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி, நான்கு நாட்களுக்கு அவற்றை புளிக்கச் செய்து அகுனி தயாரிக்கபபடுகிறது. அதிக அளவு நாகாலாந்து மக்களால் சாப்பிடப்படும் உணவு வகை அகுனி.

பீன்ஸ் மிக்ஸ்

நாகாலாந்து மக்களின் உணவில் பீன்ஸ் மிக்ஸ் மிகவும் இன்றியமையாத ஒன்று. இதன் பெயரிலே ஆரோக்கியத்தின் சாயலை உணரலாம். பட்டாணி, பீன்ஸ், தக்காளி, கோஸ் மற்றும் இன்னும் பல காய்கறிகளை நன்றாக வேக வைத்து, கைத்தேர்ந்த நாகாலாந்தின் மசாலாகளைக் கொண்டு ஆரோக்கியமான கலவையாக இதனை தயாரிக்கிறார்கள். பீன்ஸ் மிக்ஸுடன் சில்லி சாஸ் அல்லது விதவிதமான குழம்பு வகைகளுடன் இதனை பரிமாறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g