கணேஷ் வெங்கட்ராமின் ஃபேவரிட் டிரெஸ் எது தெரியுமா?

கணேஷ் வெங்கட்ராமின் ஃபேவரிட் டிரெஸ் எது தெரியுமா?

கடந்த சனிக்கிழமையன்று, கிரவுன் பிளாசாவில் மாடலிங் மற்றும் நடிப்புத் திறமைக் கொண்டோருக்கான பயிற்சிக் கூடத் துவக்கவிழா நடைபெற்றது. இதில், ஆண், பெண் இருபாலருக்கும், நடிப்புப் பயிற்சி மற்றும் மாடலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. துவக்க விழாவில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கணேஷ் அணிந்து வந்த ஆடை எல்லோரையும் ஈர்த்தது.


பிராண்ட் பிரியரான கணேஷ், இந்நிகழ்ச்சிக்கு டெய்லர் மேன் பிராண்டின் வெள்ளை நிற ஷர்ட், அதற்கு இணையாக சிவப்பு நிறத்தில் புளோரல் எம்பராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் ஜாக்கெட்  அணிந்திருந்தார். கஃப்லிங்க்ஸ், ஜாக்கெட் லேபிள் என ஆக்சஸரிகள் பளீரிட்டன. ’“எனக்கு எப்போதும் இடத்திற்கு ஏற்ப ஆடை அணிவதுதான் பிடிக்கும். நான் மாடலிங் துறையில் இருந்து வந்ததால், அந்த டிரெஸ்ஸிங் கான்ஷியஸ் அப்போதிலிருந்தே வந்துவிட்டது. எனவேதான் ஆடியோ ரிலீஸ் , படப் புரமோஷன், பண்டிகை, பூஜை என நிகழ்ச்சிக்கு ஏற்ப, எனது ஆடையின் டச் இருக்கும்” என்கிறார் கணேஷ்.


கணேஷ் நிகழ்ச்சிக்கு ஏற்ப டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பார். இருப்பினும் அவருக்கு விருப்பமான ஸ்டைலிஸ்ட், சைதன்யா ராவ்தான். இவர் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என தென் இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி, பாலிவுட் பிரபலங்களுக்கும் ஸ்டைலிங் செய்கிறார். இந்த நிகழ்ச்சியிலும் அவர் ஏற்படுத்திய ஸ்டைலில் தான் இப்படி மிளிர்கிறார் கணேஷ்.

“எந்த நிகழ்ச்சிக்கு, யார் சரியாக ஸ்டைலிங் செய்வார்கள் என்பதிலும் எனக்கு புரிதல் இருக்கிறது. அதற்கு ஏற்ப அவர்களை பயன்படுத்திக் கொள்வேன். இந்த நிகழ்ச்சிக்கு சைதன்யாதான் சரியானவர் என நினைத்துத் தேர்வு செய்தேன். அதேபோல் எனக்கு பிடித்தவாறு திருப்தியான ஸ்டைலிங் செய்திருக்கிறார் ”என்கிறார்.

விருது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, எத்தினிக் மற்றும் கிளாசிக் ஆடைகளை கணேஷ் விரும்புவார். அதற்கும் சைதன்யாவைத்தான் முதலில் அழைப்பாராம். ஆடைகள் மீது மட்டுமின்றி, அணிகலன்கள் மீதும் கணேஷுக்கு கொள்ளைப் பிரியம்.

“ நான் எந்த உடை அணிந்தாலும், அதற்கு ஏற்ப சரியான அணிகலன்களையும் வாங்கிவிடுவேன். ஏனெனில் அவைதான் நம் ஆடைக்கும் தோற்றத்திற்கும் முழுமை சேர்க்கின்றன. அரைகுறை  ஃபேஷன் எனக்குப் பிடிக்காது” என்கிறார்.

சைதன்யா ராவ்

கணேஷ் இந்த நிகழ்ச்சிக்கும் அசத்தலான ஆக்சஸரிஸ் அணிந்து வந்திருந்தார்.  வலது மணிக்கட்டில் கேசியோ ரிஸ்ட் வாட்ச், இடது மணிக்கட்டில் சில்வர் பிரேஸ்லெட், வலது பக்க காதில் ரிங் என ஆடைக்கு ஏற்ப கச்சிதமாகக் கலக்கியிருந்தார். என்னதான் வித்தியாசமாகவும், வகை வகையாகவும் ஆடைகள் அணிந்தாலும், சிம்பிளான டி.ஷர்ட், காட்டன் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிவதுதான் அவருக்குப் பிடிக்குமாம்.

டிரெஸ்ஸிங் விஷயத்தில் கணேஷ் பலருக்கும் ரோல் மாடலாக இருக்க, அவரை கவரும் பலர் இருக்கிறார்களாம். “எனக்கு ஹிருத்திக் ரோஷனின் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவரும்  நேர்த்தியான ஆடைகள், கம்பீரமானத் தோற்றம் மற்றும் உடல் அமைப்பு கொண்டவர்.  எனக்கு முன்னோடியே அவர்தான். ஹாலிவுட்டில் டாம் க்ரூஸ், பிராட் பிட் போன்றோர் தான் என் ரோல் மாடல்” என்கிறார்.

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g