சிரமங்கள் தவிர்க்கும், ஆன்லைன் ஹோட்டல் ரூம் புக்கிங்!

சிரமங்கள் தவிர்க்கும், ஆன்லைன் ஹோட்டல் ரூம் புக்கிங்!

சுற்றுலா பயணமோ அல்லது பிசினஸ் பயணமோ, பயணங்களின் போது, நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், செல்லுமிடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது. எங்கும் பயணியர் கூட்டம் அதிகரித்துவிட்டதால், ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வது அவசியமாகிறது.

அலுவலகத்தில் அரிதாக கிடைத்த நான்கு நாள் விடுமுறையை வீணாக்கக் கூடாது என்று, கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்கள் நாlல்வரும் ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிட்டனர். காரிலேயே மூணாறு செல்ல முடிவெடுத்தனர். ஆனால், திட்டமிட்டபடி கிளம்பியும், டிராபிக் ஜாம், மழை போன்ற காரணங்களால் தாமதமாகவே, நள்ளிரவில் தான் மூணாறு சென்றடைய முடிந்தது.

சீசன் முடிந்துவிட்டதால், ஹோட்டல் அறைகள் நிறைய காலியாக இருந்தும், இவர்களின் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு அதிகக் கட்டணம் கேட்டனர். வேறு வழியின்றி அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டு தங்க வேண்டியிருந்தது. பணம் நஷ்டமடைந்தது, அதற்கேற்ற வசதி இல்லாதது மட்டுமல்ல, இதனால் மன உளைச்சலையும் அனுபவிக்க நேர்ந்தது. இதுவே அவர்கள் முன்கூட்டியே அறைகளை பதிவு செய்திருந்தால், இப்படிபட்ட சிரமங்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

தற்போது ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், ஒரு டச்சில் அறையை முன்பதிவு செய்வதென்ன, ஒட்டுமொத்த பயணத்தையே திட்டமிட்டு விடலாம். பாரம்பரியமான பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், ஆன்லைன் பயண ஆலோசனை நிறுவனங்கள், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துத் தரும் டிராவல் போர்ட்டல்கள் என, இவற்றின் இணைதளம் மூலமாகவே, ஹோட்டல் அறைகள் முன்பதிவு முதல், சுற்றுலா பேக்கேஜ்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதைவிடவும் எளிதாக, இந்நிறுவனங்களின் ‘ஆப்கள் (apps)’ மூலம், ஸ்மார்ட்போனிலேயே எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்வதால் அறைகள் கிடைப்பது உறுதியாவதுடன், கடைசி நிமிடத்தில் அறைகளை தேடும் சிரமம், அதனை முன்னிட்டு ஹோட்டல்கள் உயர்த்தும் கட்டணங்கள், அசவுகரியமான தங்கும் அனுபவம் உள்ளிட்ட சிரமங்களையும் தவிர்க்கலாம். மட்டுமல்லாமல், முன்கூட்டியே அறைகளை புக் செய்வதால் நமக்கு கட்டண சலுகைகளும் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் போகும்போது ஏற்படும் கசப்பான அனுபவங்கள் பெரும்பாலும் தங்குமிடம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். அறையை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையையும் தவிர்க்க முடியும்.

முன்பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

 • உங்களின் பட்ஜெட், போகும் இடம், ரயில் / பஸ் / விமான நிலையத்தில் இருந்து இருக்கும் தொலைவு உள்ளிட்ட காரணிகள் அடிப்படையிலேயே ஹோட்டல் அறையை திட்டமிட முடியும்.
  முன்னணி பயண ஏற்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் இணையதளம் அல்லது செயலி வழியாக அறைகளை முன்பதிவு செய்வது நம்பகமானதும், மலிவானதுமாக இருக்கும். பழைய பாணியில் டிராவல் ஏஜென்ட் மூலமாக அறையை புக் செய்யும் போது, அவரது கமிஷனும் சேர்ந்திருப்பதால் கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால், ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, தள்ளுபடி சலுகைகள், சிறப்புச் சலுகைகள் கிடைக்கும். மேலும் இதனால் பணமும் நேரமும் மிச்சமாகிறது.
 • ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் இருக்கும் மற்றுமொரு வசதி, ஹோட்டல்கள் குறித்து அங்கு ஏற்கனவே சென்று தங்கிய வாடிக்கையாளர்கள் அளிக்கும் விமர்சனங்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை பதிவு செய்து வைத்திருப்பதால், அவற்றைப் படித்துப் பார்த்தே, அந்த ஹோட்டல் எப்படிபட்டதாக இருக்கும், என்னென்ன சவுகரியங்கள் மற்றும் அசவுகரியங்கள் இருக்கும் என்பதை ஊகித்து விடலாம். மேலும் அறைகளின் புகைப்படங்களையும் பல்வேறு கோணங்களில் பார்க்க முடியும். இதனால் ஒரு தெளிவான முடிவுக்கு வருவது எளிதாகிறது.
 • எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில், கட்டணங்களை டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலமாக அல்லது ஆன்லைன் பேமென்ட் வழிகள் மூலமாக செலுத்தலாம். உங்களிடம் பணம் இருக்கும்போதே புக் செய்ய முடிவதால், கடைசி நேர பட்ஜெட் பிரச்னையால் அறை கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

 • அறைகளின் வசதிகள் மற்றும் கட்டணங்களை ஒப்பிட்டு ஆராய, எக்ஸ்பீடியா, டிராவல்சிட்டி, ஹோட்டல்ஸ்ரூம் போன்ற இணையதளங்கள் உதவும்.
 • ஹோட்டல் அறைகளை ஒப்பிட்டு, இறுதியாக சிலவற்றை தேர்ந்தெடுத்த பின், அந்த குறிப்பிட்ட ஹோட்டல்களின் இணையதளங்களுக்கு நேரடியாக சென்று, கட்டணங்கள் மாறாமல் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், சில நேரங்களில் தங்களிடம் இருக்கும் கூடுதல் அறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றி, ஒப்பிடும் இணையதளங்களுக்கு அவை பகிர்ந்துகொள்வதில்லை.
 • ஹோட்டலின் இணையதளத்தில் ஏதாவது சிறப்பு சலுகை அல்லது திட்டம், கூப்பன்கள் இருக்கிறதா என்று பார்க்கவும்.
 • முன்பதிவு கட்டணம் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் பற்றியும் கவனமாக இருங்கள். ஒப்பிடும் இணையதளங்களில் இந்த விவரங்கள் சில நேரம் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு.
 • அறைகளை முன்பதிவு செய்வதற்கு முன்பாக, ரத்து செய்வது மற்றும் மாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளை கவனியுங்கள். ஒப்பீடு செய்யும் இணையதளங்கள், ஹோட்டலின் இணையதளம் இரண்டுக்கும் இது பொருந்தும். இதற்காக தனியே கட்டணம் விதிக்கிறார்களா என்பதைப் பாருங்கள். இதையும் உங்கள் இன்ஷூரன்ஸ் கவர் செய்யலாம்..
 • சில நேரங்களில் அறை வாடகையுடன் வை-பை இன்டர்நெட், உள்ளூர் அழைப்புகள் போன்ற சேவைகளுக்கு சேர்த்து கட்டணம் விதிப்பர். இதில் கவனமாக இருக்கவும்.
 • ஹோட்டல் அறை வாடகை தொடர்பாக பேரம் பேச தயங்கவே வேண்டாம். ஹோட்டலுக்கு போன் செய்து, கட்டணத்தை மேலும் குறைக்க முடியுமா, அறை வசதிகளை அதிகரிக்க முடியுமா, அல்லது கூடுதலாக ஏதாவது சலுகைகள் கிடைக்கும் என்பதை கேளுங்கள். குறிப்பாக பயணத்தேதி நெருங்கும் நேரத்தில் அல்லது அறைகள் காலியாக இருக்கும் நாட்களில் இந்த உத்தி பலனளிக்கும்.

ஹோட்டல் அறைகளை கண்டறிந்து, ஒப்பிட்டு, தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்ய உதவும் முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள், அவற்றின் இணையதளம் மற்றும் ஆப் விவரங்களை இங்கு பார்க்கலாம்:

 

எக்ஸ்பீடியா (Expedia)

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான பயண இணையதளம் இது. ஹோட்டல் அறைகள் மட்டுமல்லாமல், விமான டிக்கெட்கள், வாடகை கார்கள், குரூஸ் கப்பல் சுற்றுலா, ஹாலிடே பேக்கேஜ் போன்றவற்றையும் இதில் முன்பதிவு செய்யலாம். குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களின் போது ஹோட்டல்களை முன்பதிவு செய்ய சிறந்தது.

கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்களில், எக்ஸ்பீடியா செயலி இலவசமாகக் கிடைக்கிறது.

இணையதளம்: https://www.expedia.co.in/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.expedia.bookings&hl=en
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/us/app/expedia-hotels-flights-car/id427916203?mt=8

ஓயோ (Oyo)

இந்தியாவில் ஹோட்டல் மற்றும் தங்குமிடங்கள் முன்பதிவு செய்யும் சேவை அளிப்பதில், அதிவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் இது. பட்ஜெட் கட்டண சேவைகள், பிரீமியம் சேவைகள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான அறைகளை பரிந்துரைக்கிறது. கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்களில், எக்ஸ்பீடியா செயலி இலவசமாகக் கிடைக்கிறது.

இணையதளம்: https://www.oyorooms.com/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.oyo.consumer&hl=en
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/in/app/oyo-find-book-budget-hotels/id988141624?mt=8

கோஇபிபோ (goibibo)

பயண ஏற்பாட்டு சேவைகள் அளிப்பதில் முன்னணி நிறுவனம் மற்றும் செயலி இது. பட்ஜெட், நடுத்தர கட்டணம் மற்றும் பிரீமியம் சேவை என எல்லா வகை வாடிக்கையாளர்களின் தேவைகளை தீர்க்கும் சிறந்த தளம் இது. இதில் நிறைய ஆபர்களும் சலுகைகளும் கிடைக்கும்.

இணையதளம்: https://www.goibibo.com/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.goibibo&hl=en_IN
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/in/app/goibibo/id631927169?mt=8

இக்ஸிகோ (ixigo)

ஹோட்டல்களுடன் நன்கு தொடர்பில் இருந்து ஒருங்கிணைக்கும் செயலி / இணையதளம் இது. தேடல் கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், நிறைய ஆப்ஷனக்ள் இருக்குமென்பதால், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

வெவ்வேறு ஹோட்டல்கள் மற்றும் முன்பதிவு இணையதளங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது. மேலும் விமானம்/ரயில் டிக்கெட்களும் முன்பதிவு செய்ய இதில் வசதிகள் உண்டு.

இணையதளம்: https://www.ixigo.com/
ஆண்ட்ராய்டு செயலிக்கு : https://play.google.com/store/apps/dev?id=7487269574841753053
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/in/app/ixigo-flight-hotel-booking/id418128294?mt=8

க்ளியர்ட்ரிப் (Cleartrip)

ஆன்லைனில் ஹோட்டல் முன்பதிவு செய்வதை பரவலாக்கிய, முன்னோடி நிறுவனங்களில் முதன்மையானது, க்ளியர்டிரிப். எளிதான, நம்பத்தகுந்த சேவை அளிப்பது இதன் சிறப்பு. ஹோட்டல் அறைகள் மட்டுமல்லாமல், விமானம் மற்றும் ரயில் டிக்கெட்கள், ஹாலிடே பேக்கேஜ்கள் போன்றவற்றையும் முன்பதிவு செய்யலாம்.

இணையதளம்: https://www.cleartrip.com/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.cleartrip.android&hl=en
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/in/app/cleartrip/id531324961?mt=8

ட்ரிவாகோ (Trivago)

ஹோட்டல் அறைக் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து, முடிவு செய்ய உதவும் சிறந்த இனையதளம் இது. உலகம் முழுவதும், 10 லட்சத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் கட்டணங்களை இது அளிக்கிறது. சிறந்த செயலியாக பாராட்டப்படுகிறது

இணையதளம்: https://www.trivago.in/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.trivago&hl=en_IN
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/us/app/trivago-compare-hotels-save/id376888389?mt=8

மேக்மைட்ரிப் (MakeMyTrip)

பயண ஏற்பாட்டுக்கு உதவ உருவான ஆரம்பகால ஆன்லைன் நிறுவனங்களில், இதுவும் ஒன்று. ஹோட்டல் அறைகள் முன்பதிவு செய்வது, விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் முன்பதிவு, ஹாலிட்டே பேக்கேஜக்ள், வாடகைக் கார்கள் என, உங்கள் சுற்றுலா / பயணத் தேவைகள் அனைத்துக்கும் உதவும். எல்லா வகை பட்ஜெட்டுக்கும் தேவையான ஆப்ஷன்கள் கொடுப்பதுடன், 24X7 இலவச வாடிக்கையாளர் சேவை அளிக்கிறது.

இணையதளம்: https://www.makemytrip.com/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.makemytrip&hl=en_IN
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/in/app/makemytrip-flights-hotels/id530488359?mt=8

யாத்ரா (Yatra)

இது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகளில் ஒன்று. ஹோட்டல் அறைகள், விமானம் / ரயில் / பஸ் / டாக்சி முன்பதிவுகள், தேச / சர்வதேச அளவில் இங்கு நல்ல டீல்கள் கிடைக்கும்.

குறிப்பாக குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் செல்பவர்களுக்கு ஏற்றது.

இணையதளம்: https://www.yatra.com/
ஆண்ட்ராய்டு செயலிக்கு: https://play.google.com/store/apps/details?id=com.yatra.base&hl=en_IN
ஐபோன் செயலிக்கு: https://itunes.apple.com/in/app/yatra-flights-hotels-cabs/id730234679?mt=8

இவைதவிர, கடைசி நேரத்தில் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ய உதவும் ரூம்ஸ்டுநைட் (RoomsTonite), நைட்ஸ்டே (NightStay), சவ்வி மாப் (SavvyMob)
லாஸ்ட்மினிட்கீஸ் (Last Minute Keys), சார்ட்டட் (Sorted) போன்ற செயலிகளும் ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கின்றன.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g