வாவ் வருகை: வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்ய ஹிமாலயாவின் பரிந்துரை

வாவ் வருகை: வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்ய ஹிமாலயாவின் பரிந்துரை

தலைமுடி உதிரும் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும்  பிரத்யேக தயாரிப்புகளை ஹிமாலயா அறிமுகப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் இயற்கை மூலப்பொருட்களை கொண்டது என்பதால், எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்கிறார்  அந்நிறுவனத்தின்  நுகர்பொருள் பிரிவு மேலாளர், விபு கங்கல்.

            விபு கங்கல்

‘ஹிமாலயா ஆன்ட்டி ஹேர் ஃபால் ரேஞ்ச் காம்போ உங்களுக்கு வீட்டிலிருந்தே ஸ்பா அனுபவத்தை அளிக்கிறது. இதில் ஷாம்பூ, கண்டிஷ்னர், ஆயில் மற்றும் க்ரீம் என நான்கு பொருட்கள்  உள்ளடங்கியுள்ளன. இவற்றை முறையாகப் பின்பற்றினால் உங்கள் முடி உதிர்வைத் தடுக்கலாம். கூடுதலாக முடி வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். இந்த காம்போ முற்றிலும் பிரிங்கராஜா மற்றும் ஆம்லா என இயற்கையான முறையில் தயார்க்கப்பட்டுள்ளதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இது எளிமையான முறையில் சிறந்த பலனை அளிக்க உதவுகிறது” என்கிறார் விபு கங்கல்.

இந்த காம்போவை வீட்டிலேயே ஓவ்வொரு வார இறுதியிலும் ஹேர் ஸ்பா சிகிச்சை செய்து இழந்த முடிகளைத் திரும்பப் பெறலாம். வார இறுதியில் ரிலாக்ஸாகவும் இருக்கும். உங்களுக்கு நல்ல தீர்வை அளிக்கலாம். அவை என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.

ஹிமாலையா ஆன்டி ஹேர் ஃபால் ஆயில்

இந்த ஹேர் ஃபால் ஆயில் அடர்த்தியாக இல்லாமல், தண்ணீரைத் தொடுவது போல் லைட் வெயிட்டாக இருக்கும். இது தலையில் தேய்த்தாலும் முடியின் வேர்களுக்குள் எளிதில் கலந்துவிடும். பிரிங்கராஜா, நெல்லிக்காய் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை முறையில் இந்த ஆயில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹேர் ஸ்பா செய்வதன் முதல் ஸ்டெப் ஆயில் மசாஜ். அதற்கு இந்த ஹேர் ஃபால் எண்ணெய்யை தலையின் வேர்ப் பகுதிகளில் படும்படியாகத் தடவிக் கொள்ளவும். பின் தலையில் நன்கு அழுத்தம் கொடுத்து அரைமணி நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஹிமாலயா ஆன்டி-ஹேர்ஃபால் ஷாம்பூ

சிறந்த நறுமணத்துடன் நல்லக்  குளியல் அனுபவத்தை ஏற்படுத்தும். இதில் பிரிங்கராஜா, பியுட்டியா ஃபிரண்டோசா (butea frondosa) ஆகிய இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பியுட்டியா ஃபிரண்டோசா உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து வகையான தலைமுடி கொண்டவர்களுக்கும் இந்த ஷாம்பூ ஏற்றது. அரை மணி நேர மசாஜுக்கு பிறகு, இந்த ஆன்டி-ஹேர் ஃபால் ஷாம்பூவைக் கொண்டு தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் நன்கு அலச வேண்டும். குறிப்பாக எண்ணெய் தடவியிருப்பதால், இரண்டாவது முறையும் குளிர்ந்த நீரில் தலையை அலசுவது அவசியம். இல்லையெனில் எண்ணெய் பிசுபிசுப்பு தலைமுடியை பொலிவிழந்ததாக மாற்றும். ஷாம்பூ முடியின் வேர்களில் நன்குப் பரவி வலுபெறச் செய்கிறது. முடியையும் சிக்கலின்றி மென்மையாக மாற்றுகிறது

ஹிமாலயா ஆன்டி-ஹேர்ஃபால் கண்டிஷ்னர்

கண்டிஷனரில் பிரிங்கராஜா, பியுட்டியா ஃபிரண்டோசா (butea frondosa) மற்றும் கொண்டைக் கடலை ஆகிய மூலப் பொருட்கள் உள்ளன. இவை மூன்றும் தலைமுடிக்கு நல்ல ஊட்டமளித்து, முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளியாக செயல்படுகிறது. முடியில் சிக்கலின்றி பளபளப்பை அளிக்கிறது. ஷாம்பூ கொண்டு நன்கு தலைமுடியை அலசிய பின், ஈரத்தை பிழிந்து எடுக்க வேண்டும். பிறகு இந்த கண்டிஷ்னரை தடவ வேண்டும். எச்சரிக்கை, தலையின் வேர்களில் தடவி விடாதீர்கள். அது தலைமுடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். எண்ணெய் பிசுபிசுப்பை ஏற்படுத்தும்.

ஹிமாலயா ஆன்டி-ஹேர் ஃபால் கிரீம்


நறுமணம் கமழும் தலைமுடியைப் பெற, இந்த ஹேர்ஃபால் கிரீமைத் தடவுங்கள். கூடுதலாக தலைமுடி உதிரும் பிரச்சனையிலிருந்தும் விடுதலைப் பெறுங்கள். இந்த கிரீமின் நறுமணம், நாள் முழுவதும் நீடிப்பதால் அன்றைய நாளை புத்துணர்வுடன் வைக்கிறது.  பிரிங்கராஜா மற்றும் நெல்லிக்காய் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளதால் பக்கவிளைவுகளும் இல்லை.  நீங்கள் கண்டிஷ்னர் அப்ளை செய்த பிறகு, தலையில் ஈரம் காய்ந்ததும் இந்த கிரீமைத் தடவுங்கள். முடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கு ஏற்ப குறைந்த அளவு எடுத்துக் கொண்டு, வேர் முதல் முடியின் நுனி வரை இந்த கிரீமை நன்கு பரவும்படித் தடவுங்கள். இதை ஒவ்வொரு தலைக் குளியலுக்குப் பிறகும் செய்து வாருங்கள். பளபளப்பான தலைமுடியோடு முடி உதிர்தலுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g