மண வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க ஷேர் பண்ணுங்க!

மண வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க ஷேர் பண்ணுங்க!

திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை…..இரண்டிலும் அடிப்படை வாழ்வை பகிர்ந்துகொள்வதுதான். காதலை போஷித்து, நீடிக்கச் செய்யும் விஷயம் தான் பகிர்ந்தல்.

எந்த ஓர் உறவும், அதைத் தொடார்ந்து போஷித்து, அக்கறையுடன் பராமரிக்கும் போதுதான் செழிக்கும். ஒருவரின் சமூக இருப்பின் மையத்தை உருவாக்குவதே, அவரை சுற்றியிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூகம் தான். எந்த ஒரு உறவையும் பராமரிக்க, தகவல் பரிமாற்றம், மற்றவர்களின் நிலையின் இருந்து விஷயங்களை புரிந்துகொள்வது, பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கிய குணங்கள் தேவை. இதில் மிக முக்கியமான, அந்தரங்கமானது, மற்றும் ஆரோக்கியமானது என்று சொன்னால், அது பகிர்தலே.

உறவு என்பதே வாழ்க்கையை பகிர்ந்துகொள்வதுதானே! உணர்வுகள், தனிப்பட்ட உணர்ச்சிகள், அறிவுப்பூர்வமான விஷயங்கள், பொது மதிப்பீடுகள், நம்பிக்கைகள் அல்லது கருத்துகள் என, எதையும் பகிர்வதாக அது இருக்கலாம். உறவில் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்பதில் தான், இந்த பகிர்தலின் பரிமாணமும் அடங்கும். திருமண வாழ்க்கையில் தம்பதியினருக்கு இது வித்தியாசமாக இருக்கலாம். உங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் பகிர்வது, மண வாழ்வின் அடைப்படையான விஷயம். ஆகவே இதையெல்லாம் நீங்கள் உறவில் பகிரலாம்.

அந்தரங்கம் புனிதமானது; துணைவருடன் பகிர வேண்டியது!

ஓர் உறவில் மிகச்சிறந்த நற்குணம், ரகசியங்களை பகிர்ந்துகொள்ளுதல். உறவில் இருக்கும் இரண்டு பேர், தங்களுக்குள் எந்த ஒளிவு மறைவுமின்றி, எல்லாவற்றைப் பற்றியும் வெளிப்படையாக இருக்க வேண்டும். இது பாதுகாப்பாகவும் உணரச் செய்யும். உங்கள் கனவுகள் மற்றும் ஆசைகள் பற்றி, உங்கள் ஏற்ற இறக்கங்கள் பற்றி, உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் பற்றிய ரகசியங்களாக, இவை இருக்கலாம். இந்த விஷயங்களை பகிர்ந்து துணைவருடன் வெளிப்படையாக இருப்பதால், உறவு நெருக்கமாகவும் இருவருக்கிடையிலான பிணைப்பு உறுதியாகவும் மாறுகிறது. அதே நேரத்தில் இந்த ரகசியங்கள் மதிக்கப்பட வேண்டும், துணைவரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள்

எந்த உறவும் உடனே வளர்ந்து, நெருக்கமாகி விடுவதில்லை. அது மொட்டாகி, மலர சிறிது காலம் தேவைப்படும். இந்த காலத்தில் நேரமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நேரம் தான் மதிப்புமிக்கதாக இருக்கிறது. வேலைக்கும், தொழில் வாழ்க்கைக்கும் முதன்மை இடம் கொடுத்து, அதிக நேரம் செலவிடும் போது, உறவுக்கு அடுத்த இடம் தான் கொடுக்கப்படுகிறது. இது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். இதனால் ஏற்படக்கூடிய இடைவெளியை தவிர்க்க, இருவரும் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்குங்கள். ஒன்றாக வெளியில் செல்லுங்கள், உணவகங்களுக்கு செல்லுங்கள், ஒன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தியுங்கள்.

அதேபோல, புதிய எண்ணங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இருவருக்கும் பொதுவான ஆர்வங்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து, அதில் ஒன்றாக ஈடுபடுங்கள். இது துணைவருடன் தரமான நேரத்தை பகிர்ந்து கொள்ள உதவுவதுடன், இருவரும் விரும்பும் விஷயத்தில் ஒன்றாக ஈடுபடவும் வாய்ப்பளிக்கிறது.

வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்


நீங்கள் ஓர் உறவில் இருக்கும் போது, உங்கள் துணைவரின் தினசரி வேலைகளை பகிர்ந்துகொள்ளலாம் அல்லது உதவி செய்யலாம். இது சமத்துவ உணர்வை அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் சுமையையும் குறைக்கும். சுத்தம் செய்தல், சமையல் உள்ளிட்ட தினசரி விஷயங்களில் உதவி செய்யும்போது, உங்களின் அக்கறையை வெளிப்படுத்துவதுடன், தம்பதியரிடையில் நம்பிக்கையும் அன்னியோன்னியமும் அதிகரிக்கும்.

உங்கள் ஆதரவை பகிருங்கள்

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்வடைந்து போதல் மனிதரின் இயல்புதான். தினசரி வேலைகள் அல்லது அளவுக்கதிகமான மன அழுத்தம் ஒருவருக்குள் எதிர்மறை குணத்தை ஏற்படுத்தலாம். இதை சரிசெய்ய நீங்கள் செய்யக் கூடியது, உங்கள் துணைவருக்கு ஆதரவாக, ஆறுதலாக இருப்பதுதான். இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் ஆறுதலும் தேறுதலும் அளிக்கும்போது, அவர் அதன் தாக்கம் குறைவதை உணர்வார். பகிரும்போது சுமை குறைகிறது.

வாழ்க்கையை இனிதாக்கும் பகிர்தல்

பெரும்பாலான தம்பதியரிடம் இந்தப் பழக்கம், உணர்வுபூர்வமான, மனரீதியான நிலைத்தன்மையை உண்டாக்குகிறது. பரஸ்பரம், நம்பிக்கைக் கொண்டிருப்பவரளுக்கு, இது பல்வேறு விதங்களில் நன்மைகள் செய்யும். ஒரு குழு போல துணைவருடன் இணைந்து செயல்படவும், அன்னியோன்னியமாக இருக்கும் உணர்வையும் பகிர்தல் அளிக்கிறது. இது உறவில் ஒருவரை மிகவும் பொறுப்பானவராக உணரச் செய்கிறது.

பகிர்தல், சுமையை குறைத்து சமத்துவத்தை ஏற்படுத்துகிறது. உறவுக்குள் நம்பிக்கையை வளர்த்து, உறவு செழித்து நீடிக்க இது உதவுகிறது. தம்பதியர் இருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும், ஆளுமையும் இருக்கிறது என்றாலும், இருவரும் முற்றிலும் தனிநபர்கள் அல்ல. தம்பதியர் இருவரும் காதல், அன்பு, அக்கற்றை என்னும் உணர்வுகளாள் பிணைக்கப்பட்டுள்ளனர். பகிர்தலே அதன் சாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g