வேலை தேட உதவும் ஸ்மார்ட்போன் செயலிகள்!

வேலைகளை தேடித் திரிந்த காலம் போய், வேலைகள் நம்மை தேடிவரச் செய்துவிட்டது நவீனத் தொழில்நுட்பம். வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை உங்கள் இ-மெயிலுக்கும், ஸ்மார்ட்போனுக்கும் அனுப்பி வைக்கின்றன வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகள்(apps). வேலை தேடுவோருக்கு மட்டுமல்ல, தகுதியான பணியாளர்களை தேடும் நிறுவனங்களுக்கும் இவை உதவுகின்றன. வேலை தேட உதவும் சில முக்கிய ஸ்மார்ட்போன் செயலிகளை இங்கு பார்க்கலாம்.

நவ்க்ரி (naukri)

இந்தியாவின் மிகப் பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளம், நவ்க்ரி. அரசு வேலைவாய்ப்புகள் உட்பட, ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இதில் வெளியிடப்படுகின்றன. வேலைத்தேடுவோர் இதில் தங்கள் புரபைலை உருவாக்கி,, ரெஸ்யூமை அப்லோட் செய்யலாம். இதிலுள்ள ஜாப் அலர்ட் வசதி சிறப்பானது. பயனர்கள் அளித்துள்ள தகவல்களை ஆராய்ந்து, அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை தானாகவே அவர்களின் இ-மெயிலுக்கு அனுப்புகிறது.  இந்த செயலியை அதன் இணையதளமான naukri.com-லிருந்தே டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

மான்ஸ்டர்  (Monster)

இரண்டாவது அதிகப் பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளம் இது. தகுதியான ரெஸ்யூம் ஆக இருந்தால், அதற்கு பொருத்தமான வேலைவாய்ப்பை பரிந்துரைக்கிறது. பதிவு செய்த உடனேயே, அறிவிப்புகளை அனுப்பத் தொடங்கிவிடும். தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உங்களை அப்டேட் செய்துகொள்ளவும் உதவும். வேலைகளை சேவ் செய்து, பின்னர் அப்ளை செய்யலாம். உங்களுக்காக வேலை தேட, ஏஜென்ட்களை கூட அமர்த்திக்கொள்ள முடியும். இதன் இணையதளமான monsterindia.com-லிருந்து நேரடியாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

லிங்க்ட் இன்(LinkedIn)

நீங்கள் ஒரு புரபஷனலோ அல்லது புதிதாக வேலை தேடுபவரோ, நல்ல சம்பளத்தில் புதிய வேலைகளை தேட இது சிறந்த தளம். இது பெரிய கம்பெனிகளின், HR புரபஷனல்கள் உருவாக்கும் குழுக்களில் இணைந்துகொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. இவர்கள் தங்கள் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பகிர்கிறார்கள்.

உங்களின் கல்வித்தகுதி, திறன்கள், அனுபவம் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கிய, ரெஸ்யூம் போன்ற ஆன்லைன் புரபைலை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களை போன்ற புரபைல் கொண்ட பிற புரபஷனல்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளலாம். திறன்களை வளர்த்துக் கொள்ளவும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. இதன் இணையதளமான in.linkedin.com-லிருந்து செயலியை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

கேரியர் பில்டர் (CAREERBUILDER)

வேலைவாய்ப்பு இணையதளங்கள் அளிக்கும் எல்லா சேவைகளையும், கேரீர் பில்டர் அளிக்கிறது. இது, 50க்கு மேற்பட்ட நாடுகளில் சேவை அளித்து வருகிறது. பயன்படுத்த எளிதான, ஆனால் செயல்திறன் மிக்க வேலைவாய்ப்பு இணையதளம் இது. இந்த வேலைவாய்ப்புக்கான செயலியை, careerbuilder.com/mobile என்ற இணைய முகவரியில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

கிளாஸ் டோர் (Glassdoor)

இந்தியாவின் சிறந்த வேலைவாய்ப்பு தளங்களில் இதுவும் ஒன்று. இதுவரை, 100 மில்லியனுக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு விவரங்கள் இதில் பதிவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது வேலைவாய்ப்புகளை தேட உதவுவதுடன், ஒரு நிறுவனத்தின் ஊதிய அமைப்பையும், பணிச்சூழல்களையும் பற்றி, அதன் பணியாளர்கள் அளிக்கும் விமர்சனங்களை அறிய உதவுகிறது. இதற்கான செயலியை, glassdoor.co.in என்ற அதன் இணைய முகவரியில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பிரெஷர்ஸ் வேர்ல்ட்(Freshersworld)

வேலை தேட தொடங்குகிறவர்கள், தொழில் அனுபவமிக்கவர்கள் என இரண்டு வகையினருக்கும் இது சிறந்த சேவை அளிக்கிறது. இதில் இன்டர்வியூ கேள்விகள் பகுதி இருக்கிறது. நீங்கள் இன்டர்வியூவுக்கு செல்வதற்கு முன்பாக, முன்தயாரிப்புடன் செல்ல உதவும். வேலைக்கு தயாராவதற்கான ஆயிரக்கணக்கான ஆவணங்களை பார்வையிட வழிகாட்டுகிறது. www.freshersworld.com என்ற அதன் இணையதளத்தில் இருந்தே செயலியை டவுன்லோட் செய்யலாம்.

ஷைன் (Shine)

நல்ல வேலைவாய்ப்புகளை பரிந்துரைப்பதில் இதுவும் சிறந்த தளம் தான். பல்வேறு பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை இதில் அறிந்துகொள்ள முடியும். பொருத்தமான வேலைகளை பரிந்துரைப்பதில் சிறந்த வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் இது. இதற்கான செயலியை, www.shine.com என்ற இணைய முகவரியில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இண்டீட் (indeed)

இது ஒரு பிரபலமான வேலை தேடுபொறி. புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை இது பராமரிக்கிறது. நவ்க்ரி உள்ளிட்ட முன்னணி வேலைவாய்ப்பு இணையதளங்களில் இருந்து தகவல்களை திரட்டித் தருகிறது. உங்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை ஷார்ட் லிஸ்ட் செய்து, உங்கள் தேடலை எளிதாக்குகிறது. சிறிய நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை உள்ள அனைத்து வேலைவாய்ப்புகளை இது தெரியப்படுத்தும். www.indeed.co.in என்ற அதன் இணைய முகவரியில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

டைம்ஸ் ஜாப்ஸ் (TimesJobs)

இது சிறந்த வேலைவாய்ப்புகளை பரிந்துரைக்கும் இணையதளம். பயன்படுத்த எளிதாக இருக்கும் இந்த இனையதளம் இலவச சேவை அளிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு கணக்கை தொடங்குவது தான். இதற்கான மொபைல் செயலியை, www.timesjobs.com என்ற இணைய முகவரியில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஸ்கில் பேஜஸ் (skillpages)

 

 

வேலைவாய்ப்புகளை பகிர்ந்துகொள்ளவும் தேடவும், ஒரு நெட்வொர்க்கை உருவாக்க அல்லது அதில் சேர்ந்துகொள்ள, இது வாய்ப்பளிக்கிறது. இது ஒரு சமூக வலைதளம் போன்றதே. இதற்கான ஆண்ட்ராய்டு செயலியை, கூகுள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இதில் கூகுள்+ மற்றும் பேஸ்புக் லாக்-இன் மூலம் உள்நுழையலாம்.

சிம்ப்ளி ஹையர்ட் (simply hired)

மிகவும் பிரபலமான, நம்பத்தகுந்த வேலைத்தேடும் செயலி இது. பல்வேறுபட்ட வேலை விவரங்களை கொண்டுள்ள, மிகப்பெரிய டேட்டாபேஸ் கொண்டிருப்பதால், உங்களுக்கான வேலையை தேட இது சரியாக தளமாக இருக்கும். உங்களின் தேவைக்கு ஏற்பட பில்டர் செய்து தேடலாம். ஜாப் அலர்ட், டிராக்கிங், உள்ளிட்ட வழக்கமான வசதிகளும் இதில் உண்டு.

மேற்கண்ட அனைத்து இணையதளங்களும் செயலிகளும், இலவச சேவை அளிக்கின்றன. அதேநேரத்தில், கட்டணம்  கேட்கும் சிறப்பு பேக்கேஜ்களையும் இவை அளிக்கின்றன.

ஆல் தி பெஸ்ட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g