அமெரிக்காவுக்கு விமானக் கட்டணம், ரூ.13,499 மட்டுமே!

அமெரிக்காவுக்கு விமானக் கட்டணம், ரூ.13,499 மட்டுமே!

அமெரிக்காவுக்கு செல்ல விமானக் டிக்கெட் வெறும் 13,499 ரூபாய் என்று அறிவித்து, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது, வாவ் ஏர் நிறுவனம்.

ஐஸ்லாந்து நாட்டின் விமான சேவை நிறுவனம், வாவ். இந்த நிறுவனம், புதுடெல்லியில் இருந்து ஐஸ்லாந்து வழியாக, அமெரிக்காவுக்கு விமான சேவையை தொடங்கவுள்ளது. இதற்கு, 13,499 ரூபாய் மட்டுமே கட்டணமாக அறிவித்து கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய விமான சேவையின் கீழ், அமெரிக்காவிலுள்ள நியூயார்க், பாஸ்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ் நகரங்களுக்கும், கனடாவின் மான்ட்ரீல் மற்றும் டொரான்டோ நகரங்களுக்கும், ரெய்க்ஜாவிக் மற்றும் லண்டன் நகரங்களுக்கும், ஒருவழிக் கட்டணமாக, 13,499-ஐ நிர்ணயித்துள்ளது. இது பேசிக் எகானமி வகுப்புக் கட்டணமாகும்.

இந்தக் கட்டணம் இருக்கைக்கு மட்டும் தான். கைப்பை, லேப் டாப் தவிர்த்து எடுத்துச் செல்லப்படும் பிற லக்கேஜ்களுக்கும், உணவுக்கும் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். வரும் டிசம்பர், 7-ம் தேதி முதல் டெல்லியில் இருந்து வாரம் மூன்று சேவைகளும், அதன் பின்னர் வாரம் ஐந்து சேவைகளும் அளிக்கப்படும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவுக்கும் செல்கையில் இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருவது துபாய். இதனால் துபாயின் வர்த்தகம் செழிக்கிறது. அதை மையமாகக் கொண்டு, ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரை, ‘வடக்கு துபாய்’ ஆக மாற்றும் வாவ் ஏர் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதி இது என்கிறார் அதன் தலைமை செயல் இயக்குநர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g