உலக ஃபேஷன் ஒரே இடத்தில்! ‘ஃபேப் ஆலி’யின் ஆடை புரட்சி!

உலக ஃபேஷன் ஒரே இடத்தில்! ‘ஃபேப் ஆலி’யின் ஆடை புரட்சி!

ஃபேப் ஆலி…. தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான ஆடை இதுதான் என்று நச்சென அளிக்கும்  பிராண்ட்.  தன் சிறப்பான ஆன்லைன் வெற்றியை தொடர்ந்து, தற்போது நேரடி விற்பனையகங்களை திறந்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள், தன்வி மாலிக் மற்றும் ஷிவானி போதார் என்ற இளம் பெண்கள்.  இரு வாரங்களுக்கு முன்னர்,  ஃபேப் ஆலியின் 5வது ஸ்டோரை, சென்னை ஃபீனிக்ஸ் மாலில் திறந்த அன்று, அதன் இணை நிறுவனர் ஷிவானி போதாரிடம்  பேசினோம். போட்டிகள் நிறைந்த ஃபேஷன் வர்த்தகத்தில், தனி இடம் பிடிக்க தாங்கள் கடந்துவந்த பாதையை விரிவாகப் பேசினார்.   

ஃபேஷன் உலகம் போட்டிகள் நிறைந்தது.  ஃபேப்ஆலி(FabAlly) பிராண்டை எவ்வாறு வெற்றிகரமாக நிலைநாட்ட முடிந்தது?

20 முதல் 35 வயதிற்குட்பட்ட இளம் பெண்களுக்கு, லேட்டஸ்ட் பேஷன் மற்றும் டிரெண்டை எளிதில் சென்றடைய வைக்க வேண்டும். அதுவும் வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான், ஃபேப் ஆலியை தொடங்கினோம். அதற்கு முன், 500 பெண்களிடம் சர்வே எடுத்தோம். அதன் முடிவில், இன்றைய பேஷன் கிடைக்கக்கூடிய வகையில் இல்லை என்பதைத்தான் உணர்த்தினர். அதுதான் ஃபேப்ஆலி தொடங்குவதற்கான அடித்தளம்.

இ-காமர்ஸ் ரீடெய்ல்  தொழிலில் வெற்றிகரமாக இருப்பதற்கான காரணம், இளம் தலைமுறைக்கு ஏற்ற லேட்டஸ்ட் டிசைன்கள் மற்றும் சரியான விலை. இங்கு நடக்கும் எல்லா வேலைகளும் எங்களின் கண்கானிப்பிலேயே நிகழ்கிறது. இணையதளம் மேனேஜ் செய்வது தொடங்கி, வாடிக்கையாளருக்கு பொருள் சென்றடையும் வரை உடன் இருந்து கவனிப்போம். அதனால்தான் வாடிக்கையாளருக்கு மனத் திருப்தியை ஏற்படுத்த முடிகிறது.

ஃபேப்ஆலியை துவங்கும்போது, ஆக்சஸரீகளுக்கான பிரண்டாக மட்டுமே இருந்தது. தற்போது பெரிய அளவிலான ஆடைகள் விற்பனை செக்‌ஷனையும் துவங்கியிருக்கிறீர்கள். அதுவும் பல வகையான சாய்ஸஸ், குறைந்த விலை கொண்ட பிராண்டாக மாறியிருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஃபேப்ஆலியை தொடங்கியபோது, இங்கு பேஷனுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி பெரியதாக இருப்பதை அறிந்தோம்.  நாம் யாரும் பிடித்ததை அணிவதில்லை. மாறாக கிடைப்பதில் பிடித்ததை அணிகிறோம். அதற்கு விலை மற்றும் குறுகிய சாய்ஸஸ்தான் காரணம். மெட்ரோ நகரங்களில் வாழும், அதுவும் மாத பட்ஜெட் பிரச்னைக் கொண்ட பெண்களின் மனநிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாங்களும் அந்த பிரச்சனையை உணர்ந்திருக்கிறோம். ஸாரா, மேங்கோ போன்ற பெரிய பிராண்டுகள் பலவகையான வெஸ்டர்ன் ஆடைகளை அளித்தாலும் அதன் விலை வாங்கக் கூடியதாக இருக்காது. இருப்பினும் மனம் சமாதானம் அடையாது. கட்டுப்படுத்திக் கொண்டு நகர வேண்டும்.

இப்படியான போராட்டங்களுக்கு நடுவேதான், இளம்தலைமுறைப் பெண்கள் ஃபேஷனை கடந்தனர். எனவே அவர்களுக்காக வெஸ்டர்ன் ஆடைகள் மற்றும் அதில் இந்தியாவின் அடிப்படை அம்சங்கள் கொண்ட, இண்டோ வெஸ்டர்ன் ஸ்டைல் ஆடைகளை எளிதில் கிடைக்கக் கூடியதாக மாற்றவேண்டும். குறிப்பாக வாங்கக்கூடிய விலையில் அளிக்க வேண்டும் என எண்ணினோம். எனவேதான் அந்த மாற்றத்தைக் கொண்டுவந்தோம்.

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களாக இருந்தாலும், கோயம்புத்தூர், மதுரை போன்ற சிறுநகரகரங்களாக இருந்தாலும் சரி, வெஸ்டர்ன் ஆடைகள் மற்றும் எத்தினிக் ஃபியூஷன் வகைகளில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதற்கான ஃபேஷன் டிமாண்டும் அதிகம். இதை எப்படிப் கையாள்கிறீர்கள்?

எத்தினிக் ஆடைகளில் எங்களின் தனி பிராண்டான ‘இன்ட்யா(indya)’விற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த கேட்டகரியில் இன்னும் மற்ற பிராண்டுகள் வரவில்லை. அதேபோல் இந்தியாவின் கலாச்சார நிகழ்ச்சிகள், பண்டிகைகளுக்காக கிராண்ட் ஆடைகளை வாங்க வேண்டுமெனில் அதிகச் செலவாகிறது. இருப்பினும் எங்கள் பிராண்டில், 1,500 முதல் 3,500 வரை வாங்கக் கூடிய விலையில் அளிக்கிறோம்.

தனித்துவத்தில் அசத்த, மிக்ஸ் அண்ட் மேட்ச் கேட்டகரியும் இருக்கிறது. அவை இன்னும் குறைவான விலையில் கிடைக்கும். எங்களின் பிராண்டான ‘இன்ட்யா’வில் பாரம்பரிய ஃபேப்ரிக்குகள் பயன்படுத்தி, வெஸ்டர்ன் கட்ஸ் கொண்டு ஃபியூஷன் ஸ்டைலில் அளிக்கிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள், மேலும் 25 ஸ்டோர்களை திறக்க உள்ளோம்.


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, பல நூற்றாண்டுகளாக டெக்ஸ்டைல் மற்றும் உற்பத்திக்கு முக்கிய இடமாக இருக்கிறது. நீங்கள் தற்போது இங்கு உங்களின் 5-வது ஷோரூமை இங்கு திறந்திருக்கிறீர்கள். சென்னை உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

ஒவ்வொரு மாதமும் அதிகளவு ஆர்டர் எந்த நகரங்களில் இருந்து வருகிறது என கணக்கெடுப்போம். அதில் அதிகப்படியன ஆர்டர், தென் இந்திய மக்களிடமிருந்துதான் வருகிறது. எனவே எங்களின் லாபம் மற்றும் வியாபாரம் இங்குதான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம். சென்னையில் எங்களுடைய இன்ட்யா பிராண்டின் எக்ஸ்க்ளூசிவ் எத்தினிக் ஸ்டோர் திறக்க வேண்டும் என, பல நாள் விருப்பம் இருந்தது. சென்னையில் எத்தினிக் ஆடைகளுக்கான தேர்வு அதிகம் என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே இங்கு எங்களின் பிராண்டை, அதுவும் வாங்கக்கூடிய விலையில் அளித்தால், நிச்சயம் நல்ல வரவேற்ப்பு இருக்கும் என நம்பினோம். அதனால்தான் சென்னையை தேர்ந்தெடுத்தோம்.

‘ஃபேப்ஆலி’ டார்கெட் கன்ஸ்யூமர்ஸ் யார்? அவர்களின் தேவைக்கு ஏற்ப பிராண்டை எவ்வாறெல்லாம் தயார்படுத்துகிறீர்கள்?

தன் சொந்தக் காலில் நிற்கும், 20 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளம் பெண்களே, எங்களின் டார்கெட் கன்ஸ்யூமர்ஸ். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்ட பெண்களுக்கு, கம்பீர அழகை கொடுப்பதுதான் எங்களின் பிராண்ட் ஆடைகள். ஒவ்வொரு ஆடையும், எங்கள் கன்ஸ்யூமர்களின் தேவை மற்றும் ரன்வே, ஸ்ட்ரீட் ஸ்டைல், பாப் கலாச்சாரம், சோஷியல் மீடியா என, உலகத் தர ஃபேஷன் தழுவல்களும் கலந்து, ‘ஒன் ஸ்டாப் ஷாப்’ ஆகக் கிடைக்கும். அது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வடிவத்தையும் கொண்டிருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் ஃபேஷன் விற்பனை நல்ல வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் கடைகளுக்குச் சென்று, அதைத் தொட்டுப் பார்த்து அணிந்து வாங்கும் நேரடி வாடிக்கையாளர்கள் பலர் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் குறைவுதான். இதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள்?

நீங்கள் கூறுவது சரிதான். அதனால்தான் நாங்கள் எங்களின் பிராண்ட் ஷோரூமை ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் திறந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிராண்டின் வேலைப்பாடுகள் மற்றும் ஃபேப்ரிக்கின் மென்மையை உணர வேண்டும். அந்த அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அளிக்க வேண்டும். அதனால்தான் ஃபேப்ஆலி பிராண்டை, முக்கிய மால்களில் உள்ள 28 கடைகளிலும், ‘இன்ட்யா’ எத்தினிக் பிராண்டை 35 கடைகளிலும் பிரத்யேகமாக அளிக்கிறோம். அதைத் தொடர்ந்து நாங்களே சொந்த பிராண்ட் ஸ்டோரை திறக்க முடிவு செய்து, அதில் சென்னை உட்பட 5 ஸ்டோர்களை வெற்றிகரமாக திறந்துவிட்டோம். இன்னும் இந்த ஆண்டிற்குள், 25-30 கடைகளை திறக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு.

ஃபேப்ஆலியின் ஆடைகள் மற்றும் விலை குறித்த விளக்குங்கள்…

ஃபேப்ஆலிக்கு, 3 கிளை பிராண்டுகள் இருக்கின்றன. ஒன்று முதன்மை பிராண்டான ஃபேப்ஆலி. இது முற்றிலும் வெஸ்டர்ன் ஆடைகள் கொண்டது. உலக டிரெண்டுகளை எல்லாம் கவனித்து பார்த்துப் பார்த்து வடிவமைத்த ஆடைகளைத்தான் காண முடியும். இதில் பிரபலங்களின் ஸ்டைல், மேற்கத்திய ஃபேஷன் போன்ற வகைகள் கிடைக்கும்.  பார்ட்டி, கெட் டுகெதர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு ஏற்ற ஸ்டேட்மென்ட் ஆக்சஸரீஸும் கிடைக்கிறது. இந்த பிராண்டில், ரூ. 900 – ரூ. 3,000 வரை விலைகளில் கிடைக்கும்.

இரண்டாவதாக, ஃபேப்ஆலி கர்வ். இது பிளஸ் சைஸ் பெண்களுக்கான ஃபேஷன் தனித்துவத்தை ஏற்படுத்தக் கூடியது. கம்பீரம் மற்றும் சவுகரியமான உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஆடைகள் இருக்கும். எதிலும் இல்லாத வகையில், 14 முதல் 20 சைஸ்களில் ஆடைகள் கிடைக்கின்றன. இதில் ரூ. 1,200 முதல் ரூ. 3,200 வரையிலான விலையில் கிடைக்கிறது.

கடைசியாக இண்டோ வெஸ்டர்ன் ஃப்யூஷன் பிராண்டான ’இன்ட்யா’. இது முற்றிலும் பழமை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைத் தழுவியது. இந்தியாவின் ஃபேப்ரிக்கில், வெஸ்டர்ன் சில்அவுட்ஸ் தூவல் இருக்கும். இந்த வகையில், ரூ.1,500 முதல் ரூ. 3,500 வரையிலான விலையில் எத்தினிக் ஆடைகள் கிடைக்கின்றன.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g