ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்களை கவனித்திருக்கிறீர்களா?

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்களை கவனித்திருக்கிறீர்களா?

ஹன்சிகாவிடம் நாம் கவனிக்கத் தருவது, அவரது க்யூட் ஹேர் ஸ்டைல்களை.  ஆடைகளுக்கேற்ற அலங்காரம், அணிகலன்கள் மட்டுமன்றி, அவரது ஹேர் ஸ்டைல் மற்ற நடிகைகளை விட தனி ரகம். அதாவது அதிலேயே ஒரு இளமைத் துள்ளல் தெரியும். டிரெடிஷ்னல், வெஸ்டர்ன், என ஆடைக்கு ஏற்ப அத்தனை கச்சிதம். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இல்லையெனில்,  இந்த புகைப்படங்களைப் பாருங்கள்…

சைட் பிரெய்ட் வித் பஃப்

ஹவர்கிளாஸ் ஆடைக்கு  இந்த பிரெய்ட் அத்தனைப் பொருத்தம். பொதுவாக இப்படியான ஷார்ட் உடைகளுக்கு, பின்னலை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை.  அவரின் வட்டமான முக அமைப்பை,  முன்புற பஃப்  கச்சிதமான நீள்வட்ட தோற்றத்திற்கு மாற்றுகிறது. இந்த பிரெய்ட் சுடிதார், குர்த்தா வித் லெக்கிங்ஸ் போன்ற ஆடைகளுக்கும் பொருந்தும்.

மெஸ்ஸி செமி லூஸ் ஹேர் ஸ்டைல்

மெஸ்ஸி ஸ்டைலுக்கு இன்று பெண்களிடையே ஏகபோக வரவேற்பு. எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும், அதில் ஒரு மெஸ்ஸி டச் அளித்தால்தான் முழுமை பெறும் என்கிற அளவிற்கு, இன்று மெஸ்ஸி ஃபீவரில் போட்டுத் தாக்குகிறது.  கூந்தலை கலரிங் செய்து பெர்மிங் செய்து அலை அலையாக மாற்றி, முன்பகுதியில் பிரெஞ்ச் பிளாட்டிற்கு செய்வது போல லேயர்களை அடுக்கடுக்காக எடுத்து, மெஸ்ஸி ஸ்டைலில் கிளிப் செய்திருக்கிறார்.

சாதாரணமாக கிளட்ச் கிளிப் கொண்டு தலையின் நடுப்பகுதியில் பாதி முடியைப் பிரித்து, நாம் செய்யும் அதே ஹேர் ஸ்டைல் தான். ஆனால் அதை கிளாஸியாக செய்திருக்கிறார் ஹன்ஸ். அலை அலையான கூந்தலில், ஆங்காங்கே புளோரல் டிசைனில் ஹேர் ஆக்சஸரியை பொருத்தி இருக்கிறார். பிங்க் லெஹங்காவிற்கு, இந்த மெஸ்ஸி ஹேர்ஸ்டைல் செம ஸ்டைலை அளிக்கிறது. சரவணா ஸ்டோர் ஃபோட்டோ ஷூட்டிற்கு, இந்த ஸ்டைல் கச்சிதமாக தேர்வு செய்திருக்கிறார்.

சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமானது. தோழியின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றால், மணப்பெண்ணை விட மற்றவர்கள் பார்வை உங்கள் மீதுதான்.

பன் வித் சைட் ஃப்ரெஞ்ச் பிரெய்ட் 

கொண்டை போடுவதா சிரமம் என்பவர்களுக்கு, ‘ஆமாம்’ என அழுத்தமாகச் சொல்லலாம். ஏனெனில் எண்ணிலடங்கா அத்தனை வகையான பன் ஸ்டைல்கள் இருக்கின்றன. அள்ளி முடிந்து கொண்டை போட்டு விடலாம். ஆனால் அழகான, ஸ்டைலான கொண்டை போடுவதென்பது ஒரு கலை. இந்த புகைப்படத்தில் ஹன்ஸிகா அணிந்திருப்பது அதற்கொரு சான்று. இந்த பிரெய்ட், நீளமான முடி இருப்பவர்கள்தான் போட வேண்டும் என்றில்லை. செயற்கை முடி கொண்டு பிரெய்ட் போட்டு, உங்கள் ஒரிஜினல் முடியால் பன் போடலாம், ஹன்சிகாவைப் போல். அவரும் சவுரிதான் வைத்திருக்கிறார். இந்த ஸ்டைல் முகலாயர்கள் பாணியில் இருக்கிறது. இதுவும் சங்கீத், ரிசெப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமானது.

சைட் ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைல்

வெஸ்டர்ன் ஆடைகளுக்கு, இந்த ஸ்டைல் எடுப்பாக இருக்கும். ரஃபில் கட் ஸ்கர்ட் மற்றும் க்ளோஸ்ட் நெக் க்ராப் டாப் ஆடைக்கு, இந்த ஸ்டைலை ஹன்சிகா மேட்ச் செய்திருக்கிறார். இந்த ஸ்டைலை இண்டோ வெஸ்டர்ன் கவுன்களுக்கும் முயற்சி செய்யலாம். ஹன்சிகாவை போல் நீங்களும் டிரெண்ட் ஆகலாம். ரோமியோ ஜூலியட் படப் புரோமஷனிற்கு இந்த ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் ஹன்சிகா. சைடு வகிடு எடுத்து, ஒரு பக்கம் முடியை அடர்த்தியாக விட வேண்டும். இன்னொரு பக்கத்தில் இரண்டாவது புகைப்படத்தில் காண்பதை போல, பின்னல் போட்டு கீழே பின் செய்து கொள்ளுங்கள்.

சைட் லேஸ் பிரெய்ட் வித் ஃப்ரீ ஸ்டைல்

க்ளோஸ் நெக் லாங் கவுனிற்கு, இந்த ஹேர் ஸ்டைல் ஹன்சிகாவிற்கு கூடுதல் அழகை தருகிறது. ஒரு பக்கம் லூஸ் ஹேர் ஸ்டைலும், இன்னொரு பக்கம் வகிடு வகிடாக பிரித்து மினி பின்னல்கள் போட்டிருக்கிறார். ஸ்பானிஷ் பெண்ணைப் போன்ற தோற்றத்தை, இது அவருக்கு அளிக்கிறது.  அணிந்திருக்கும் உடைக்குத் தக்க, கண்களுக்கு ஸ்மோக்கி மேக் அப் செய்திருக்கிறார். ஹேர் ஸ்டைலுக்கு இது மேலும் அழகைக் கூட்டுகிறது. பிறந்த நாள், கல்லூரி நிகழ்ச்சிகள், ஃபேர்வல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அணியும் ஆடைகளுக்கு இந்த ஹேர் ஸ்டைல் ஏற்றது.

ஃப்ரெஞ்ச் பஃப் பிரெய்ட்

டிரெடிஷ்னல் நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் பிரெய்ட்தான் அணிய வேண்டுமா? ஹன்சிகாவை போல் நீங்களும் இப்படி வித்தியாசமாக பஃப் பிரெய்ட் முயற்சி செய்து பாருங்கள். நிகழ்ச்சியில் உங்களை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஹேர் ஆக்சஸரீஸ் இருந்தால் ஹன்சிகாவை போல் பிரெய்டை கூடுதலாக அலங்கரியுங்கள். சரவணா ஸ்டோரின் ஃபோட்டோ ஷூட்டிற்காக இந்த ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறார். ஹேர் ஸ்டைலிஸ்ட் ரித்திகா இந்த ஸ்டைலை செய்திருக்கிறார்.

பஃப் வித் போனி டெய்ல்

இண்டோ வெஸ்டர்ன் ஆடைகள் மற்றும் வெஸ்டர்ன் ஆடைகளுக்கு, இந்த ஸ்டைல் எடுப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஹன்சிகாவைப் போல் பெரிய அளவிலான டிசைன் மற்றும் ஒர்க்குகள் கொண்ட ஆடைக்கு, இதுபோன்ற சிம்பிலான ஹேர் ஸ்டைல்தான் பக்காவாக இருக்கும். ஹேர் ஸ்ட்ரெய்ட்டா இருந்தால், முடியை ஸ்ட்ரெய்ட் செய்யலாம். அது போனிக்கு நன்றாக இருக்கும்.

வாட்டர் ஃபால் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகா, இந்த ஆடையில் கார்ஜியஸாக இருக்கிறார். இந்த ஹேர் ஸ்டைலும், அதற்கு ஒரு காரணம் எனலாம்.  ஹேர் ஸ்டைலிஸ்ட் ரித்திகாதான் ஸ்டைல் செய்திருக்கிறார். தெலுகு சந்தோஷம் விருது நிகழ்ச்சிக்காக, இந்த ஸ்டைலை தேர்வு செய்திருக்கிறார்.  இந்த ஸ்டைல் எல்லாவிதமான ஆடைகளுக்கும் எடுப்பாக இருக்கும்.  நெளி நெளியான கூந்தல் இருப்பவர்களுக்கு, இந்த ஹேர் ஸ்டைல் மிகப் பொருத்தமாக இருக்கும்.  பார்க்க சிம்பிளாக இருக்கும் என்பதால் அலுவலகம், கல்லூரிக்கு, இந்த ஹேர் ஸ்டைலை அணிந்து அசத்தலாம். நீங்களும் கார்ஜியஸாக மாறலாம்.

சிம்பிள் போனி டெய்ல்

போனி டெய்ல் ஹேர் ஸ்டைலும், பெண்களின் ஆல் டைம் ஃபேவரட். நிமிடங்களில் போடக்கூடிய ஸ்டைலும் இது எனலாம்.  இந்த ஆடையில் அவரது பிளவுஸ் டிசைன் தான் ஹைலைட் என்பதால், பிரவுன் ஆடைக்கு தக்கவாறு கலரிங் மற்றும்  ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து தூக்கலாக போனி டெய்ல் அணிந்திருக்கிறார்.  முதுகுப் பகுதியில் உள்ள டிசைனை தொந்தரவு செய்யாமல், கூடுதல் அழகைத் தருகிறது. புலி பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு, இந்த ஸ்டைலை ஹன்சிகா தேர்வு செய்திருக்கிறார். கல்லூரி, அலுவலகம், பார்ட்டி போன்றவற்றிற்கு இந்த ஸ்டைலை அணிந்து அசத்தலாம். குறிப்பாக ஹைநெக் உடைகளுக்கு, இது மிகப் பொருத்தமாக இருக்கும். டிசைனர் புடவைக்கும் இந்த ஸ்டைலை முயற்சி செய்யலாம், ஹன்சிகாவைப் போல்…

– ஏ.சிவரஞ்சனி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g