வெடிங் பிளானர் இருந்தால், கல்யாணத்தில் நோ டென்ஷன்!

வெடிங் பிளானர் இருந்தால், கல்யாணத்தில் நோ டென்ஷன்!

திருமண ஏற்பாடுகளை செய்து முடிப்பது, சாதாரண காரியமல்ல. பெரும் உழைப்பும், நேரச் செலவும் தேவைப்படுவதுடன், சிறந்த திட்டமிடலும் அவசியம். இதற்காக வெடிங் பிளானர்களை அமர்த்திக் கொண்டால் டென்ஷனும் இருக்காது, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள்ளும் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்கலாம்.

ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு திருமணம் என்பதால், அதை பிம்மாண்டமாகவும், மற்றவர்கள் மெச்சும்படியும், மறக்க முடியாத நிகழ்வாக மாற்றவும் விரும்புகிறோம். அதனால்தான், இந்திய திருமணங்கள் ஆடம்பரமாகவும், செலவு பிடிப்பதாகவும் இருக்கின்றன. இதை நடத்தி முடிக்க, சிறந்த திட்டமிடும் திறனும், ஒருங்கிணைக்கும் ஆற்றலும், நிறைய நேரமும் தேவைப்படுகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், இதையெல்லாம் நம்மால் சரியாக கவனிக்க முடிவதில்லை. இந்தச் சூழ்நிலையில் தான், வெடிங் பிளானர் நமக்கு மிகவும் தேவைப்படுகிறார். திருமணம், நிச்சயதார்த்தம், சங்கீத், விருந்துகள் என, அனைத்துத் திருமண ஏற்பாடுகளையும் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். வெடிங் பிளானர் ஏன் தேவை தெரியுமா?

எல்லாவற்றையும் உங்களால் மட்டுமே செய்ய முடியாது

ஒரு திருமணத்தை திட்டமிடவும், ஏற்பாடுகள் செய்யவும், சராசரியாக 250 மணி நேரம் தேவைப்படுகிறதாம். அது கிட்டதட்ட 30 வேலை நாட்களுக்கு சமம். திருமணத்துக்கு முன்பே, ஒரு மாதம் உங்களால் விடுமுறை எடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. உங்கள் திருமணமோ அல்லது உங்கள் மகன்/மகளின் திருமணமோ, இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் அலுவலகம் / படிப்பு என பிசியாக இருப்பதால், இவ்வளவு நேரம் செலவிடுவது கடினமே. வெடிங் பிளானர் இவற்றையெல்லாம் சரியாக நேரத்தில் செய்து முடிப்பார்.

திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிக்கலாம்

நாம் எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறோம், நேரத்தில் எல்லாவற்றையும் முடித்து விடுகிறோம், நாளைக்கு என்று தள்ளிப் போடுவதே கிடையாது என்றெல்லாம் நம்மைப் பற்றி நாமே நினைத்துக் கொண்டிருக்கலாம். சாதாரண தினசரி செயல்பாடுகளில் அது சரியாக இருக்கலாம். ஆனால், திருமண வேலைகளை கவனிப்பது எளிதல்ல. ஆட்களை சந்திக்க வேண்டும், விலைகளை விசாரிக்க வேண்டும், பேரம் பேச வேண்டும், பணம் ஏற்பாடு செய்ய வேண்டும், அடிக்கடி நினைவுப்படுத்தி ஃபாலோ செய்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வளவு உழைப்பும் கவனமும் தேவைப்படும் திருமண வேலைகளை எடுத்துக்கொள்ளும் போது, எதையும் நம்மால் நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தேவையான வெண்டார்களை புக் செய்வது முதல், திருமணப் பொருட்களை ஆர்டர் செய்வதுவரை வெடிங் பிளானர்கள் கச்சிதமாக முடிப்பார்கள்.

பட்ஜெட்டுக்குள் முடிக்கலாம்

வெடிங் பிளானரை அமர்த்தி திருமண ஏற்பாடுகளை செய்து முடிப்பது, நடுத்தர பட்ஜெட்டுக்கு உதவாது என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. ஏனென்றால், வெட்டிங் பிளானருக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென்பது உண்மையானாலும், நீங்கள் திட்டமைட்டபடி, உங்கள் பட்ஜெட்டுக்குள் அவர்கள் செலவுகளை பார்த்துக் கொள்வார்கள். அத்தனை ஏற்பாடுகளையும் பட்ஜெட்டுக்குள் ஏற்பாடு செய்வார்கள். அவர்களுக்கு நிறைய பிசினஸ் தொடர்புகளும், நெட்வொர்க்கும் இருப்பதால், ஒப்புக்கொண்ட பட்ஜெட்டுக்குள், அவர்களால் நீங்கள் எதிர்ப்பார்ப்பதை செய்து தர முடியும்.

குழப்பங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்

கெடு தேதிக்குள் முடிப்பது, பட்ஜெட்டுக்குள் முடிப்பது மட்டுமல்லாமல், வெடிங் பிளானர்கள் மிகவும் கிரியேட்டிவ் ஆகவும் யோசிப்பார்கள். உங்களுக்கேற்ற ஸ்டைல் அல்லது தீமை யோசித்து, அதை செய்தும் முடிப்பார்கள். உங்களுக்கு டென்ஷன் ஏற்படாமல், அழகாக விஷயங்களை செய்து முடிப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது, நனவாகும் கல்யாண கனவை அனுபவிப்பதே.

குடும்பத்துக்குள் சர்ச்சைகளை தவிர்க்கலாம்

நாம் முன்னின்று செய்யும் போது, பல்வேறு ஈகோ பிரச்னைகளையும், குழப்பங்களையும் குடும்பத்தினரிடையே எதிர்கொள்ள வேண்டும். ஆனால், மூன்றாம் மனிதராக வெட்டிங் பிளானர் இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள், உறவினரக்ள் இடையே அவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் போல செயல்படுவர். இதனால், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம்.

மன அழுத்தமும், சோர்வும் ஏற்படாது

திருமண செயல்பாட்டில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்னை, அந்த வேலைகளால் ஏற்படும், மன அழுத்தம் மற்றும் சோர்வு தான். நிச்சயதார்த்தத்தால் திருமண ஏற்பாட்டையோ, திருமண ஏற்பாட்டால் நிச்சயதார்த்த விழாவையோ அல்லது விருந்தினர்களை சரியாக கவனிக்க முடியாமல் போக வேண்டிய அவசியம் இல்லை. அதனால், கடினமான வெடிங் பிளானிங்கை இன்னொருத்தர் கவனிக்கட்டும்; நீங்கள் ரிலாக்ஸாக கல்யாண நிகழ்வுகளை அனுபவியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g