க்ராப் டாப் பைத்தியம் உங்களுக்கு பிடிச்சிருச்சா?

க்ராப் டாப் பைத்தியம் உங்களுக்கு பிடிச்சிருச்சா?

கல்லூரி பெண்களின் கிரேஸ் இந்த க்ராப் டாப்.  இடுப்பு தெரிகிற வகையில் இருப்பதால் செக்ஸி மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தை அளிக்கிறது. ஜீன்ஸ், ஸ்கர்ட், பலாஸ்ஸோ  என எந்த உடையுடனும் மேட்ச் செய்து கொள்ளலாம். எந்த வகையான உடல்வாகுக்கும் ஏற்றது. அதேபோல் இது கோடைக்காலத்திலும் காற்றோட்டமாகவும், ஃபீல் பிரீ உணர்வையும் ஏற்படுத்தும். நீங்களும் இந்த கோடைக்கு க்ராப் டாப்பை வாங்க நினைத்தால், இந்த பட்டியல் உங்களுக்கு உதவும்.

லாங் ஸ்லீவ் க்ராப் டாப்

இது முழு நீள கைகள் கொண்டது. வெயில் காலத்தில் அணிய இறுக்கமாக இல்லாமல் இருப்பது அவசியம். மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு இந்த க்ராப் டாப்பை டிசைனர் சாரியோடு மேட்ச் செய்யலாம். வெயிலில் செல்வோருக்கு பலாஸ்ஸோ ஏற்றது. முடிந்தவரை கருப்பு நிறத்தைத் தவிருங்கள்.

ஹால்டர் நெக் க்ராப் டாப்

கழுத்தைச் சுற்றி டை போன்ற லேஸ் கொண்டதுதான் இந்த டாப்பின் சிறப்பு. ஒல்லியான பெண்களுக்கு இந்த டாப் எடுப்பாக இருக்கும். இதற்கு ஸ்கர்ட், ஜீன்ஸ் பேன்ட் (ரிப்ட் ஜீன்) போன்றவை சரியாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் என்பதால் சவுகரியமாக உணர்வீர்கள். நண்பர்களுடனான மீட்டிங், பார்ட்டிகளுக்கு இதை அணிந்து அசத்தலாம்.

ஹை லோ க்ராப் டாப்

 

ஹை-லோ க்ராப் டாப் முன்பக்கம் சற்று தூக்கலாகவும், பின்புறம் நீளமாகவும் இருக்கும். கிராண்டான லாங் ஸ்கர்ட்டுடன் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு டிரெடிஷனலாகவும், பலாஸ்ஸோ, ஸ்கின்னி ஜீன் ( பூட்ஸ் சாண்டல் அணியுங்கள்) போன்றவற்றிற்கு வெஸ்டர்ன் என, இரு வேறு ஸ்டைலுக்கும் பொருந்தும். இதை அலுவலகத்திற்கும் அணிந்து செல்லலாம்.

ஹை நெக் க்ராப் டாப்

ஹை நெக் க்ராப் டாப் கழுத்து வரை கவர் செய்திருக்கும். இதை அலுவலகம், கல்லூரிக்கு அணிந்து செல்லாம். இதில் பேஸ்டல் நிற டாப்ஸ், ஃபுளோரல் டாப்ஸ், காட்டன் டாப்ஸ் என வகைகள் இருக்கின்றன. உங்கள் தனித்துவத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கலக்குங்கள். இதற்கு ரிப்ட் ஜீன்ஸ், ஸ்கின்னி ஜீன்ஸ், ஸ்கின்னி க்ராப் ஜீன், டெனிம் ஸ்கர்ட் போன்ற பாட்டம்களுக்கு இந்த டாப் எடுப்பாக இருக்கும்.

ஃப்ரன்ட் டை க்ராப் டாப்

இது முன் பக்க பாட்டம் பகுதியில் முடிச்சு போடப்பட்டிருக்கும். தற்போது இதுதான் அதிக டிரெண்டில் இருக்கிறது. இதற்கு பலாஸ்ஸோ சரியான பொருத்தமாக இருக்கும். இது இறுக்கமாக இல்லாமல், ஃப்ரீ சைஸ் ஆக இருப்பதால் இந்த கோடைக்கு உங்களை காப்பாற்றும்.

ஃப்ளேர்ட் க்ராப் டாப்

முன்பக்கம் ப்ளீட்ஸ் கொண்டு அடிப்பகுதி ஃப்ரீ ஸ்டைலில் இருக்கும். கைகள் லூஸாக முழங்கை பகுதியில் ப்ளீட் கட்ஸ் இருக்கும். இதை பெல் ஸ்லீவ் என்பர். இதில் லினன் ஃபேப்ரிக் கொண்ட டாப், வெயிலுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த டாப் பெண்களின் ஃபேவரிட். ஜெங்கின்ஸ் மற்றும் அனைத்து வகையான ஜீன்களுக்கும் இந்த டாப் ஃபிட்டாக இருக்கும்.

பலூன் க்ராப் டாப்

பலூன் க்ராப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, கைப்பகுதி ஃபுல் ஸ்லீவ் பஃப். லூஸாகவும் உடலுக்கு சவுகரியமாகவும் இருக்கும். இரண்டாவது வகையில், டாப் அடிப்பகுதி எலாஸ்டிக் கொண்டு இடுப்பை இறுக்கியவாறு இருக்கும். இது பஃப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். சில டாப்களில் கை இடுப்பு இரண்டிலும் பஃப் கட் இருக்கும். இது பெண்களின் ஆல் டைம் ஃபேவரிட். காட்டனில் இந்த வகை டாப் கிடைக்கிறது. இதற்கு ஸ்கர்ட், பலாஸ்ஸோ, ஜீன் என எல்லாவிதமான பாட்டம்களும் பொருந்தும்.

ஆஃப் ஷோல்டர் க்ராப் டாப்

இந்த க்ராப் டாப்பில் தோள் பகுதி இறங்கியவாறு இருப்பதுதான் இதன் ஹைலைட். பலூன் க்ராப், ஃப்ளேர்ட் க்ராப், ஃஃப்ரன்ட் டை க்ராப் என, எல்லா வகையான டாப்களின் கட்ஸ் மற்றும் ஸ்டைலை கொண்டிருக்கும். எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும். பார்ட்டி, நண்பர்களுடனான மீட்டிங் ஆகியவற்றிற்கு இந்த டாப் அட்டகாசமாக இருக்கும்.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g